யாழ். நகரை வட்டமிட்ட விசேட அதிரடிப்படை

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்று பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிலையில் யாழில் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களை விசேட அதிரடிப்படையினர் சுற்றி வட்டமிட்டு நோட்டமிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மிகவும் அமைதியான முறையில் இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் விசேட அதிரடிப்படையினரின் இந்த செயற்பாடு குழப்பத்தையில் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் போராட்டத்தில் ஈடுபடும் மற்றும் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்களுக்கு இந்த சம்பவம் ஒரு வித அச்ச உணர்வினை தோற்றுவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.