தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட சோதனை

Report Print Gokulan Gokulan in பாதுகாப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்ட சுகாதார பரிசோதகர்கள் ஹட்டன் நகரில் இன்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஹட்டன் நகரிலுள்ள உணவகங்கள், பேக்கரிகள், பலசரக்கு கடைகள் உட்பட தீபாவாளியை முன்னிட்டு அமைக்கப்பட்ட நடைபாதை வியாபார கடைத்தொகுதிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

நகருக்கு வரும் நுகர்வோருக்கு சுத்தமான, சுகாதாரமான பொருட்களை வழங்கும் நோக்கில் சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, குறைபாடுகளுடன் காணப்பட்ட சில வர்த்தக நிலையங்களுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், நடைபாதை கடைத்தொகுதியாளர்களுக்கு பொது இடங்களில் கழிவுகளை கொட்டுதல் உட்பட பல ஆலோசனை நிபந்தனைகளும் வழங்கப்பட்டதாக ஹட்டன் டிக்கோயா நகரசபை சுகாதார பரிசோதகர் ராமையா பாலகிருஸ்னன் தெரிவித்துள்ளார்.