செய்தி
ஒலிவடிவம்:
புலி தபால் முத்திரைகளை பிரான்ஸ் தடை செய்யவேண்டும்- இலங்கை முத்திரை சங்கம்
[ வியாழக்கிழமை, 12 சனவரி 2012, 03:03.22 AM GMT ]
பிரான்ஸில் வெளியிடப்பட்டுள்ள புலிகளின் உருவப்படங்கள் அடங்கிய தபால் முத்திரைகள் தடை செய்யப்பட வேண்டுமென இலங்கை முத்திரை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பிரான்ஸின் லா போஸ்ட் என்னும் அந்த நாட்டு தபால் திணைக்களம், விடுதலைப்புலிகளின் சின்னங்கள் அடங்கிய நான்கு தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளது.

இந்தத் தபால் முத்திரைகளை உடனடியாக இரத்து செய்ய வேண்டுமென இலங்கை முத்திரை சங்கம் சர்வதேச தபால் சங்கத்திடம் கோரவுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் குறித்த முத்திரைகளை பிரான்ஸ் அரசாங்கம் இதுவரையில் உத்தியோகபூர்வமாக தடை செய்யவில்லை என இலங்கை முத்திரைகள் சங்கத்தின் பொருளாளர் துமிந்த கொடஹேவா தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் தூதுவர் மன்னிப்பு கோரியுள்ளாரே தவிர, முத்திரைகளை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

முத்திரைகள் தடை செய்யப்படாவிட்டால் சர்வதேச முத்திரைகளின் விலையை நிர்ணயம் செய்யும் ஸ்டென்லி கிபன் பட்டியலில் இந்த முத்திரைகள் இடம்பெறக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. இதன்மூலம் பயங்கரவாத அமைப்பு ஒன்றை போஷிக்கும் வகையில் எந்தவொரு நாட்டிலும் முத்திரைகள் அச்சிடப்டக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 31-01-2015, 03:36.03 AM ]
இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதில் மத்திய அரசு அவசரம் காட்டக்கூடாது என்று காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
[ Saturday, 31-01-2015, 03:12.43 AM ]
பிரித்தானிய பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களின் மீது ஐ. நா நடாத்தும் சர்வதேச, சுயாதீன விசாரணைக்கான தமது ஆதரவை மீண்டும் உறுதி செய்தனர்.
[ Saturday, 31-01-2015, 03:06.27 AM ]
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்த சர்ச்சை அரசியலாகி இருக்கும் சூழலில், ''இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் ஓர் உண்மை தெரிந்தாக வேண்டும்'' என்ற போஸ்டர்கள் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.
[ Saturday, 31-01-2015, 02:33.05 AM ]
"நீங்கள் எல்லாம் கானலின் நீரோ!! வெறும் காட்சிப் பிழைதானோ - மாகவி பாரதி"-  எல்லாம் சுமுகமாகவே நடந்து கொண்டிருப்பதாகவே தோன்றும். ஆனால் அப்படி இருக்காது.
[ Saturday, 31-01-2015, 02:16.18 AM ]
வன்னியின் புதுகுடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
[ Friday, 30-01-2015 11:05:18 GMT ]
தங்கள் பிடியிலுள்ள ஜோர்டான் விமானியை விடுவித்தால், பெண் தீவிரவாதி சஜிதாவை ஒப்படைப்பதாக ஜோர்டான் அரசு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளது.
[ Friday, 30-01-2015 14:27:58 GMT ]
கர்நாடகா மாநிலத்தில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் படிப்பை கைவிட்ட சிறுமிகள் தெருக்களில் கலைப்பொருட்களை விற்பனை செய்து வரும் அவலம் அரங்கேறியுள்ளது.
[ Friday, 30-01-2015 13:36:15 GMT ]
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா, பெண் ஒருவருடன் இருந்தது தொடர்பான விசாரணைக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
[ Friday, 30-01-2015 12:29:17 GMT ]
வலிப்பு நோய்க்கு வயது வரம்பே கிடையாது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Saturday, 31-01-2015 02:33:05 ]
"நீங்கள் எல்லாம் கானலின் நீரோ!! வெறும் காட்சிப் பிழைதானோ - மாகவி பாரதி"-  எல்லாம் சுமுகமாகவே நடந்து கொண்டிருப்பதாகவே தோன்றும். ஆனால் அப்படி இருக்காது.