செய்தி
ஒலிவடிவம்:
 Photo
மகசின் சிறைச்சாலைக்கு தீவைத்து விட்டு கைதிகள் தப்பியோட திட்டம் தீட்டினர்!- அமைச்சர் சந்திரசிறி
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 03:31.25 PM GMT ]
கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள ஆவண வைப்பகத்தை எரித்து விட்டு தப்பிச் செல்வதற்குக் கைதிகள் திட்டமிட்டிருந்ததாக, ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறைச்சாலை அதிகாரிகளின் உதவியின்றி கைதிகளால் தனித்து இவ்வாறானதொரு பாரிய குற்றச்செயலில் ஈடுபட முடியாது.

எனவே, இவ்வாறான குழப்பங்களுக்கு பின்னணியிலிருந்து செயற்பட்டவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


சிறைச்சாலை நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துமாறு கோரும் அதிகாரம் கைதிகளுக்குக் கிடையாது. அவர்களின் குழப்பங்களால் அதிகாரத்தை அவர்களிடம் வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கைதிகளின் தமது நலன் தொடர்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் அதனைத் தெரிவிப்பதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் அதற்கு இவ்வாறான நடவடிக்கைகள் உகந்ததல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 18-04-2015, 08:23.55 AM ]
வடக்கு புகையிரத பாதையின் நிர்மாண பணிகளுக்கான செலவை பார்க்கிலும் தெற்கு புகையிரத பாதை நிர்மாண பணிகளுக்கான செலவை அதிகரித்து காட்டியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை இலங்கை – சீன வர்த்தக சபை நிராகரித்துள்ளது.
[ Saturday, 18-04-2015, 08:14.23 AM ]
தேசிய துக்க தினமன்று மதுபானம் விற்பனை செய்த நபருக்கு 13 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
[ Saturday, 18-04-2015, 08:10.46 AM ]
இந்நாட்டில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தேவை பட்டியலில் முன்னுரிமை கொண்ட விடயம் அல்ல என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 18-04-2015, 08:08.32 AM ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஹெலிகொப்டர் கட்டணங்களை செலுத்த முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
[ Saturday, 18-04-2015, 07:32.04 AM ]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் சகோதரரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான பசில் ராஜபக்ச தனக்கு மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.

[ Saturday, 18-04-2015 08:23:46 GMT ]
அமெரிக்காவில் பெண் ஒருவர் தன் தாயை 38 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்ததால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
[ Saturday, 18-04-2015 07:40:31 GMT ]
மைசூரில் மாணவி ஒருவர் ஆபாச குறுஞ்செய்திகளால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Saturday, 18-04-2015 05:23:41 GMT ]
ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் யுவராஜ் சிங்.
[ Saturday, 18-04-2015 07:36:24 GMT ]
உடல் மெலிவாக இருக்க வேண்டும் என்பதற்காக பட்டினி கிடந்த பல்வேறு நோய்கள் வர நாமே காரணமாக இருக்கிறோம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 17-04-2015 07:03:52 ]
இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியது மிகப்பெரிய தவறு என இந்திய இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதியும் தற்போதைய இந்திய வெளியுறவுத்துறை துணை அமைச்சருமான வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.