செய்தி
(3ம் இணைப்பு)
Video
தொம்பே பொலிஸ் நிலையம் மீது பொது மக்கள் தாக்குதல்! : பெரும் பதற்றம் நீடிப்பு
[ வெள்ளிக்கிழமை, 30 செப்ரெம்பர் 2011, 06:46.30 AM GMT ]
கம்பஹா மாவட்டத்தில் உள்ள தொம்பே பொலிஸ் நிலையத்தின் மீது பிரதேச மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த காரணத்தினால் இந்த குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.

சந்தேக நபர் திடீரென உயிரிழந்தமையினால் ஆத்திரமுற்ற மக்கள் தொம்பே பொலிஸ் நிலைத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து, பொலிஸ் நிலையத்திற்கு தீ வைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் நிலையத்திற்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றிய விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.

பிரதேசத்தில் பதற்றம் நிலவி வருவதாகவும், பாதுகாப்பு கடமைகளுக்கு விசேட அதிரடிப்படை பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


தொம்பே பொலிஸ் நிலைய மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து மக்கள் எதிர்ப்பு

தொம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக பிரதேசவாசிகளால் பொலிஸ் நிலைய சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மெக்சி புரொக்டர் தெரிவித்துள்ளார்.

தொம்பே பொலிஸ் நிலையப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட அங்கு விசேட அதிரடிப்படையினரும் கம்பஹா பொலிஸ் நிலையப் பொலிஸாரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குற்றச்செயல்கள் பலவற்றுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் வழங்கிய தகவலின்படி மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர், களவாடியதாகக் கூறப்படும் பொருட்கள் இருக்கும் இடத்தை காண்பிப்பதாக பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து பொலிஸார் அவரை ஜீப் ஒன்றில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது குறித்த சந்தேகநபர் ஜீப்பில் இருந்து விழுந்து மரணமானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த மரணத்தை அடிப்படையாகக் கொண்டு தொம்பே பிரதேசவாசிகள் பொலிஸ் மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு தீ வைத்ததாகவும் அத்தீ பொலிஸ் நிலைய கட்டடம் வரை பரவியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 24-09-2014, 04:08.59 AM ]
ஊவா மாகாண சபைத் தேர்தல் தோல்வி தொடர்பாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ மீது பகிரங்க முக்கிய அமைச்சர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Wednesday, 24-09-2014, 03:36.31 AM ]
ஊவா மாகாண சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
[ Wednesday, 24-09-2014, 03:16.26 AM ]
பிரித்தானியாவில் அரசியல் அடைக்கலம் பெற்றுள்ள இலங்கை தமிழர்கள் நாடு கடத்தப்படும் போது சித்திரவதைகளுக்கு உள்ளாவர் என்ற அச்சத்துக்கு மத்தியிலும் பிரித்தானிய அதிகாரிகள் அவர்களை தொடர்ந்தும் நாடு கடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
[ Wednesday, 24-09-2014, 02:53.54 AM ]
சுவிட்ஸர்லாந்தில் 14 வருடங்களுக்கு முன்னர் இலங்கை யுவதியை கொலை செய்த குற்றத்துக்காக நியூஸிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளவருக்கு பிணை மனு இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
[ Wednesday, 24-09-2014, 02:42.39 AM ]
இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமிக்கு எதிராக மேலும் இரண்டு அவதூறு வழக்குகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தாக்கல் செய்துள்ளார்.
[ Wednesday, 24-09-2014 03:51:59 GMT ]
ஐ.எஸ். மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக போரிட அரபு நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கோரிக்கை விடுத்துள்ளார்.
[ Tuesday, 23-09-2014 15:08:43 GMT ]
பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசன் இலங்கை அகதிகள் முகாமில் தங்கி உளவு பார்த்ததாக தகவல்கள் வெளியாகிள்ளது.
[ Tuesday, 23-09-2014 13:58:35 GMT ]
சர்வதேச டி20 போட்டிகளில் எதிரணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் இலக்கு வைத்த அணியாக இலங்கை உள்ளது.
[ Wednesday, 24-09-2014 03:21:04 GMT ]
அண்மையில் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியாகிய iPhone 6 இனை அறிமுகம் செய்த அப்பிள் நிறுவனம் அடுத்த மாதமளவில் IPad Air 2 மற்றும் iPad Mini 3 ஆகிய சாதனங்களை வெளியிடவுள்ளது.
[ Tuesday, 23-09-2014 11:40:27 GMT ]
அரசியலில் இருந்த தப்பித்து தினமும் ட்விட்டரில் எதாவது ஒன்றை தட்டி விட்டு மற்றவர்களிடம் சண்டை போடுவதை வழக்கமாக வைத்து உள்ளவர் குஷ்பூ.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 23-09-2014 05:47:30 ] []
அரசியலில் குடும்ப ஆதிக்கம் தொடர்பில் மீண்டும் பல்வேறு கருத்துக்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.