செய்தி
விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட முத்திரை குறித்து பிரான்ஸ் தூதரகம் விளக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 03 சனவரி 2012, 01:40.32 PM GMT ]
பிரான்ஸில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவம் பதித்த எந்த முத்திரையும் உத்தியோகபூர்வ வெளியிடப்படவில்லை என்றும் அவ்வாறானதொரு முத்திரை பிரான்ஸ் தபாலகங்களில் விற்பனைக்கு வைக்கப்படவில்லை எனவும் இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகம் இன்று அறிக்கை ஒன்றின் ஊடாகத் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரபாகரனிதும் மற்றும் புலிகள் இயக்கத்தின் சின்னங்கள் கொண்டதுமான முத்திரைகள் உத்தியோகபூர்வ பிரான்ஸில் வெளியிடப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை.

பிரெஞ்சு தபால் சேவையான "லா போஸ்ட்" டில் சில நிபந்தனைகளின் அடிப்படையில் பிரத்தியேக முத்திரைகளை குறித்த அளவில் அச்சிட்டுக்கொள்ளும் அனுமதியை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது.. இந்த வசதியை பயன்படுத்தியே தனி நபர்கள் சிலர் இவ்வாறான முத்திரைகளை அச்சிட்டுள்ளனர்.

இதேவேளை, முத்திரைகளுக்கான கட்டளை கொடுக்கப்பட்ட போது, அவை உரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதை அதிகாரிகள் கவனிக்க தவறியும் உள்ளனர் என்பதை லா போஸ்ட் உணர்ந்துள்ளது.என்றும் அது தெரிவித்துள்ளது.

அத்துடன் புலிகள் பயங்கரவாத இயக்கமாக ஐரோப்பிய ஒன்றியத்தினால். பட்டியல் படுத்தப்பட்டமை குறித்து பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ள நிலையில் இந்த முத்திரிகைகள் மேலும் அச்சிடப்படமாட்டாது எனவும் லா போஸ்ட் தெரிவித்திருந்தது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 04-09-2015, 07:37.42 AM ]
இயேசு பிரானின் இராப்போசனம் நடக்கிறது. இயேசுவின் சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் கரியோத் இயேசுவைக் காட்டிக் கொடுக்கிறான்.
[ Friday, 04-09-2015, 07:15.10 AM ]
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, காமனி சேனாரத்ன உட்பட கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக பணத்தை தூய்மைப்படுத்தும் சட்டமூலத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
[ Friday, 04-09-2015, 07:14.20 AM ]
யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக ஒன்றுகூடிய தமிழ் உறவுகள், தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையே பரிகார நீதியை நிலைநாட்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பை மேற்கொண்டனர்.
[ Friday, 04-09-2015, 07:09.00 AM ]
மக்கள் விடுதலை முன்னணியின் தேவைக்கு அமையவே தேசிய சுதந்திர முன்னணி நாடாளுமன்ற கட்சித் தலைவர்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக அதன் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
[ Friday, 04-09-2015, 07:03.28 AM ]
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய, குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பியை அந்நாட்டிடம் ஒப்படைக்க தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
[ Friday, 04-09-2015 06:51:50 GMT ]
துருக்கி நாட்டின் கடற்கரையில் இறந்து கிடந்த 3 வயது சிறுவன் இறப்பதற்கு முன்னர் கால்பந்து விளையாடிய புகைப்படம் இணையதளத்தி வைரலாக பரவி வருகிறது.
[ Friday, 04-09-2015 07:14:35 GMT ]
நீங்களும் மனது வைத்தால் ஆசிட் வீச்சை தடுக்கலாம் என்ற விழிப்புணர்வு வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
[ Friday, 04-09-2015 07:20:06 GMT ]
துபாய் சுற்றுலா சென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வீரரான டேவிட் மில்லர் அங்கு ஸ்கை டைவிங் செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
[ Friday, 04-09-2015 00:04:58 GMT ]
ஸ்மார்ட் போன்களின் சந்தையில் சாம்சுங் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட முன்னணியில் உள்ளது என்றே கூறலாம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Wednesday, 02-09-2015 18:16:29 ] []
இலங்கை வரலாற்றிலே புதிய சக்தி பாய்ச்சப்பட்டுள்ள ஒரு பாராளுமன்றமாக 8வது பாராளுமன்றம் உருவாகியுள்ளது. இடம்பெற்ற முதலாவது அமர்விலே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், உதய கம்மன்பில ஆகியோருக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள், உறுதியான ஒரு எதிர் கட்சியின் தேவையினை மிக தெளிவாக உணர்த்தியுள்ளது.