செய்தி
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கனடா கொண்டு வரலாம்- இலங்கை அச்சம்
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 02:22.48 AM GMT ]

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது உறுதியாகியுள்ள நிலையில், இந்தத் தீர்மானத்தைச் சமர்ப்பிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தத் தீர்மானத்தை சமர்ப்பிக்கவுள்ள நாடு எது என்று தீர்மானிக்க முடியாமல் இலங்கை வெளிவிவகார அமைச்சு குழப்பமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் இந்தத் தீர்மானத்தை அமெரிக்காகவே சமர்ப்பிக்கலாம் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு நம்பியிருந்தது.

ஆனால், அமெரிக்கா இராஜதந்திரிகள் பிளேக்கும், மரியா ஒரேரோவும் கொழும்பில் வைத்து இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அறிவித்ததை அடுத்து, அமெரிக்கா இதனை சமர்ப்பிக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளது.

இதேவேளை, அண்மையில் இலங்கையில் வெளிவிவகார அமைச்சுக்கு கிடைத்த மற்றொரு அறிக்கை, கனடா இந்த முயற்சியில் ஈடுபடலாம் என்று கூறியது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அமர்வில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வரும் முயற்சியில் கனடா ஈடுபட்டிருந்தது. ஆனால், அதற்குப் போதிய ஆதரவு கிடைக்காததால் அந்த முடிவைக் கனடா கைவிட்டிருந்தது.

எனினும், இம்முறை இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு கனடா இதற்குத் தலைமை தாங்கலாம் என்று அந்தத் தகவல் கூறியது. இந்தநிலையில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் வேறொரு நாடு இந்தத் தீர்மானத்தை முன்மொழியலாம் என்றும் கருதுகின்றனர்.

அமெரிக்கா அல்லது கனடா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தால், அவற்றின் வெளிநாட்டுக் கொள்கை நிலைப்பாடுகள் காரணமாக, சில உறுப்பு நாடுகள் குழப்பமடையலாம் என்பதாலேயே வேறொரு நாட்டின் மூலம் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று இலங்கை அதிகாரிகள் நம்புகின்றனர்.

அது, அணிசேரா அமைப்பிலுள்ள ஆபிரிக்க நாடாக இருப்பதற்கான வாய்ப்புகளையும் நிராகரிக்க முடியாது என்று சிறிலங்கா அதிகாரிகள் கருதுகின்றனர்.

இன்னொரு பக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கலாம் என்ற பரவலான கருத்தும் நிலவுவது குறிப்பிடத்தக்கது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 08-07-2015, 05:57.52 AM ]
இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் மைத்திரிபால சிறிசேனவிடம் தமது அறிமுக ஆவணங்களை வழங்கியுள்ளனர்.
[ Wednesday, 08-07-2015, 05:55.31 AM ]
எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி உருவாகும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் நாட்டை அடுத்த 10 வருடங்களுக்கு ஆட்சி செய்யும் என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 08-07-2015, 05:06.48 AM ]
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூறியது போல தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை பெற்றுகொடுக்க வேண்டுமென அழுத்தம் கொடுத்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையில் சத்தியாகிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
[ Wednesday, 08-07-2015, 04:51.01 AM ]
தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைத் தவிர்ந்த வேறு கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழர் ஒருவரை நாடாளுமன்ற பிரதிநிதியாகத் தெரிவு செய்ய முடியாது என மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 08-07-2015, 04:45.32 AM ]
பொறாமை, வெறுப்பு, கோபங்கள் அழித்து தோழமையுடன் நாட்டை வெற்றியடைய செய்ய அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 08-07-2015 06:32:42 GMT ]
ஐ.எஸ் இயக்கத்தினர் சிறுவர்களை கடத்திச் சென்று அவர்களை தீவிரவாதிகளாக மாற்ற பயிற்சி அளித்து வருகின்றனர்.
[ Wednesday, 08-07-2015 06:26:13 GMT ]
சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த ஹிந்தி நடிகையும், எம்.பியுமான ஹேமமாலினி, அந்த விபத்துக்குக் காரணம் என்ன என்பதை ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார்.
[ Wednesday, 08-07-2015 06:17:45 GMT ]
வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் விலகியுள்ளார்.
[ Tuesday, 07-07-2015 15:31:16 GMT ]
உணவு வகைகளில் ருசிக்காகவும் மணத்திற்காகவும் சேர்க்கப்படும் இந்த கருவேப்பிலையை நாம் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 07-07-2015 18:33:46 ]
தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கையில் பெண்களை இலக்கு வைத்து பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.