செய்தி
ஒலிவடிவம்:
நியூஸிலாந்தில் இலங்கையர் ஒருவர் கொலை
[ சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2012, 02:28.06 AM GMT ]
நியூஸிலாந்தின் ஒக்ஸ்போட் கென்டபெரியில் கடந்த புதன்கிழமை இலங்கையர் ஒருவர் எரியூட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொமைன் என்ற வீதியில் அமைந்திருக்கும் வீட்டில் வைத்து 28 வயதான சமீர சந்திரசேன என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். சடலம் முழுமையாக தீயினால் எரிந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் இரண்டு பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பவட்ட சந்தேக நபர்கள் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தீயினால் பாதிக்கப்படுவதற்கு முன்னர், சந்திரசேனவின் உடலில் அடிகாயங்கள் ஏற்பட்டுள்ளதாகவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 11:34.58 PM ]
ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் ஒன்றிணைவதை தடுக்கும் நோக்கில் கொண்டுவர தீர்மானித்திருந்த 19வது திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் பிற்போட்டுள்ளதாக தெரியவருகின்றது.
[ Wednesday, 19-06-2013, 10:01.20 PM ]
இலங்கையின் வட மாகாணத்துக்கான தேர்தல் வரவிருக்கும் நிலையில் இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்களின் சாராம்சத்தை குறைக்க திட்டமிடுவதாக வரும் செய்திகள் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தி அடைந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சின் ஊடக மையம் தெரிவித்துள்ளது.
[ Wednesday, 19-06-2013, 09:29.47 PM ]
எம் தமிழக உறவுகளின் தொப்புள்கொடி உறவாக, தமிழீழ விடுதலையை தாங்கி நிற்கும் தூண்களாக தாய்த் தமிழகத்தில் உள்ள தமிழின உணர்வாளர்களில் அமரர் மணிவண்ணன் அவர்களும் ஒருவர். அவருடைய இத் திடீர் மறைவு, தமிழகத்து மக்களுடன் தமிழீழ மக்களையும் மிகவும் பாதித்திருக்கின்றது.
[ Wednesday, 19-06-2013, 08:55.15 PM ]
அமைதி வழியில் "சிறிலங்காவைப் புறக்கணிப்போம்" என்று ஓவல் மைதானத்தின் முன் நின்று போராடிய எம் மக்கள் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்கள். இலங்கைத் தீவிற்குள் தலைவிரித்தாடிய அரச பயங்கரவாத வேர்கள் எல்லை கடந்து பிறநாடுகளிலும் தமிழ் மக்களைக் குறி வைப்பது அம்பலமாகின்றது.
[ Wednesday, 19-06-2013, 04:23.29 PM ]
படையினரை தொடர்ந்தும் நிலைநிறுத்துமாறு யாழ்ப்பாண மக்கள் கோருவதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013 18:43:29 GMT ]
தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 20:09:19 GMT ]
சாம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு தயாராக உள்ளோம் என்று இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன கூறியுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 20:27:33 GMT ]
தனுஷ் நடித்துள்ள ராஞ்சனா என்ற இந்திப் படமும், மரியான் படமும் இம்மாதம் 21ம் திகதி வெளியிடலாமென அப்படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:35:13 ]
மாயமான் வேட்டை போலாகிவிட்டது 13 வது திருத்தச் சட்டத்துள் தீர்வினைத் தேடுவது. பூச்சியத்துள் புள்ளியைத் தேட முடியாது. இது நிரந்தரமான அரசியல் தீர்விற்கான ஆரம்பப்புள்ளியுமல்ல , முற்றுப்புள்ளியுமல்ல என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதை, இந்த வாரம் மந்திரிசபையயில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களே உறுதிப்படுத்துகின்றது.