செய்தி
ஒலிவடிவம்:
(2ம் இணைப்பு)
Photo
ஜெனீவா மகாநாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளுக்கு ஆதரவாக கனடாவிலும் மக்கள் எழுச்சி
[ புதன்கிழமை, 29 பெப்ரவரி 2012, 03:06.19 AM GMT ]
ஈழத் தமிழர் பிரச்சனைக்கான விவாதம் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக்கு பெப்ருவரி 27 ம் நாள் வருவதையொட்டி நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமையில் முன்னெடுக்கப்படும் சர்வதேச ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு ஆதரவாக மக்கள் ஆதரவு எழுச்சிப் பேரணிகளும் இடம் பெற்றன.

இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஜெனீவாவில் 2000இற்று மேற்பட்ட மக்கள் அங்கு கூடிக் குரல் எழுப்பினார்கள்.

அதன் தொடர்ச்சியாக அதே நாளில் நாடு கடந்த தமிழீழ அரசின் அனுசரணையில், கனடாத் தமிழர் இணையத்தின் ஒருங்கிணைப்பில் கனடாவிலும் மக்கள் பெருமளவில் கூடி தமது ஆதரவு எழுச்சியை வெளிப்படுத்தினார்கள்.

டொரோண்டோ நகரில் அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் முன்பாக பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு மாலை 6 மணிக்குப் பின் நிறைவடைந்தது.பல நூற்றுக் கணக்கான பதாதைகளை மக்கள் தாங்கியிருந்தார்கள். கூடி நின்ற மக்கள் பல கோசங்களையும் எழுப்பி அனைவரதும் கவனத்தைக் கவர்ந்தார்கள்.

உலகப் புகழ் பெற்ற பத்திகையாளர், முள்ளிவாய்க்கால் இறுதி நிகழ்வுகளில் இருந்த ஒரே சாட்சி வெள்ளைக்கொடி சரணடைதலை ஒருங்கிணைக்க முன்னின்றவர், தனது ஒரு கண்ணையும் அங்கே பறிகொடுத்தவர், சிரியாவில் நடக்கும் போர் வலயத்தில் செய்தி சேகரிக்கும் போது காலமானவர் ஆகிய மேரி கொல்வின் அம்மையாரின் திருவுருவப் படம் வைக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தச் சிறப்பான நிகழ்வின் நிறைவு நிகழ்ச்சிகள் அகவணக்கத்தோடு ஆரம்பித்து உரைகள் இடம்பெற்றன.

அங்கு உரையாற்றிய கனடாத் தமிழர் இணையத்தின் தலைவரும் நாடு கடந்த தமிழீழ அரசின் அரசவை உறுப்பினருமான வின். மகாலிங்கம்,

"ஈழத் தமிழர் பிரச்சனை சரித்திரத்தில் முதல் முறையாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக்குச் சென்றுள்ளது. இது தமிழரின் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாகும்.

இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் அமைப்புகளும் நடத்தும் அரசியல் ராஜதந்திரச் செயற்பாடுகளுக்கு மக்கள் பலமும் சேரவேண்டுமென்ற பிரதமர் உருத்திரகுமாரனின் சிந்தனைக்கேற்ப ஜெனீவாவில் இன்று மாபெரும் மக்கள் ஆதரவுப் பேரணி ஐரோப்பியத் தமிழரால் நடுத்தப்பட்டுள்ளது.

அதற்குப் பக்கபலமாக அமெரிக்க நியுயோர்க்கிலும் இந்த இடத்திலும் மக்கள் எழுச்சிப் பேரணிகள் நடத்தப்பட்டது. சர்வதேச ராஜதந்திரச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் தமிழர் தரப்புகளுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் ஆதரவையும் உற்சாகத்தையும் கொடுத்து அவர்கள் தளர்வடையாமலும் பின்வாங்காமல் முன்னகர்த்தவும் மக்கள் பேரெழுச்சி அவசியம்.

இலங்கையில் முப்படையினரதும் அரச இயந்திரத்தினதும் உதவியோடு நடக்கும் மகிந்தவின் போலித்தனமான மக்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு தமிழ் மக்களும் பதிலடி கொடுக்க வேண்டும்.

தமிழருக்கான விடிவு காலம் எதிரே தெரிகின்றது.தியாகம் நிறைந்த எமது விடுதலைப் போராட்டங்கள் வீண் போகவில்லை. மக்கள் புத்தெழுச்சி பெற்று மீண்டும் இன்னும் இன்னும் அதிகமாகச் செயற்பட வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

அங்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் உரை ஆற்றிய நாடு கடந்த தமிழீழ அரசின் அரசவை உறுப்பினர் ஈழவேந்தன் நாடு கடந்த தமிழீழ அரசு வெளியிட்ட "WE ACCUSE WAR CRIMES AND GENOCIDE" என்ற புத்தகத்தில் இருந்து "ஸ்ரீலங்காவின் LLRC அறிக்கையில் உள்ள விடயங்களையும் சேர்த்து அனைத்துப் போர்க் ற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் விசாரிப்பதற்கு ஒரு சர்வதேச விசாரணையை ஏற்படுத்தக் கூடிய பிரேரணையை நிறைவேற்றுமாறு மனித உரிமை உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொள்வதாக நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் கூறி இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

நிறைவாக வின் மகாலிங்கம் சர்வதேசத்திற்கான விண்ணப்பம் ஒன்றை முன்வைத்தார்.

"ஐ.நா சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அறிக்கையின் படி 40,000 தமிழர்கள் யுத்தத்தின் கடைசி கட்டத்தில் கொல்லப்பட்டுள்ளனர். யுத்தத்தின் போது, இலங்கை அரசு பொது மக்களைக் கொல்ல கொத்து குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள் மற்றும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி உள்ளனர்.

மேலும், பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகள் ,பள்ளிகள், தேவாலயங்களில் மற்றும் கோயில்கள் போன்ற இடங்களில் தாக்குதல்களை நடத்தினர்.

இலங்கை நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கைகளின் படி 146, 000 தமிழர்கள் கணக்கில் இல்லை.

எனவே, எங்களுக்கு நீதி கிடைக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம். சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கு மற்றும் தமிழர்கள் தங்கள் தொலைந்த அரசியல் சுதந்திரம் மற்றும் கௌரவம் மற்றும் சமத்துவத்துடன் வாழ சர்வதேச சமூகத்திற்கு வலியுறுத்துகின்றோம். என்று அவர் கூறியதோடு,

இலங்கையில் உண்மையான ஜனநாயகம், நல்லாட்சி, மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்த அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நன்றியையும் தெரிவித்தார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 23-05-2013, 07:06.32 AM ]
முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் சிலாவத்தை கிராம அபிவிருத்திச் சங்க உத்தியோகத்தர்கள் தெரிவு நீண்டகால இழுபறியின் பின்னர் நேற்று முன்தினம் முறையாக இடம்பெற்றது.
[ Thursday, 23-05-2013, 06:54.09 AM ]

பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவும் முளைத்துள்ள பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பை நாட்டு மக்கள் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆவேசத்துடன் தெரிவித்தார்.  

[ Thursday, 23-05-2013, 06:53.11 AM ]
தேசிய ஐக்கிய முன்னணி கட்சியின் பொதுச் செயலாளர்  அஸாத் சாலி முஸ்லிம் மக்கள் தொடா்பாக நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவா் இரா. சம்பந்தனுக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.
[ Thursday, 23-05-2013, 06:42.04 AM ]
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச காட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிப்பொருட்களை பிரதேச விசேட அதிரடிப்படையினர் நேற்று புதன்கிழமையன்று மீட்டுள்ளனர்.
[ Thursday, 23-05-2013, 06:34.08 AM ]
வடமராட்சி, திக்கம் பிரதேசத்தில் படையினரின் தேவைக்காகச் சுவீகரிக்கப்படும் காணியை அளவீடு செய்வதற்காக கடந்த திங்கட்கிழமை அங்கு சென்ற நில அளவை திணைக்களத்தினர் காணி உரிமையாளர்கள் காட்டிய எதிர்ப்பினால் நில அளவைப் பணியைக் கைவிட்டுத் திரும்பினர்.
[ Thursday, 23-05-2013 07:09:41 GMT ]
வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏசியை பயன்படுத்துவது ஒழுக்கமற்ற செயல் என்று சவுதியை சேர்ந்த இஸ்லாமிய மத குரு ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Thursday, 23-05-2013 01:44:57 GMT ]
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அஸ்தி எங்கு இருக்கிறது என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 06:57:07 GMT ]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரியான குருநாத் மெய்யப்பன் சூதாட்ட புகாரில் சிக்கியிருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சில போட்டிகள் மீதும் சந்தேகப் பார்வை வலுவாக படிந்துள்ளது.
[ Thursday, 23-05-2013 06:03:17 GMT ]
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலாவிகளின் வரிசையில் முன்னணியில் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 04:45:11 GMT ]
இயக்குனர் விஷ்ணுவர்த்தன் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் அஜித் தற்போது நடித்துக் கொண்டிருக்கின்றார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 22-05-2013 00:33:43 ]
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.