செய்தி
ஒலிவடிவம்:
அடி காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!- அம்பாறையில் சம்பவம்
[ புதன்கிழமை, 29 பெப்ரவரி 2012, 06:49.54 AM GMT ]

அம்பாறை கல்ஒயா சந்தி பாலத்திற்கு அருகில் அடி காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலையில் மீட்கப்பட்டுள்ளதாக அம்பாறை பொலிசார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று அம்பாறை, பிரதான வீதியில் அமைந்துள்ள கல்ஒயா சந்தி பாலத்திற்கு அருகில், சடலமாக மீட்கப்பட்டவர் செங்கல் உற்பத்தி செய்யும் வாடியில் வேலை செய்து வந்துள்ளார் எனவும் அம்பாறை நகர் கார்மீக பிரதேசத்தச் சேர்ந்த, இரண்டு பிள்ளையின் தந்தையான தரங்க (29 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று காலை வேலைக்கு சென்றவர், இரவு 12 மணியாகியும் வீடு திரும்பாததையடுத்து, உறவினர்கள் தேடிச்சென்ற போது பொல்லால் தாக்கப்பட்ட காயத்துடன் செங்கல் உற்பத்தி செய்யும் வாடிக்கு செல்லும் பாதையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அம்பாறை பொலிசார் தெரிவித்தனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 31-03-2015, 06:13.09 AM ]
கண்டி தவுலகல பகுதியில் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
[ Tuesday, 31-03-2015, 06:12.00 AM ]
குருக்கள்மடம் மனித புதை குழியினை தோண்டுவதற்குரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.றியால் கட்டளை பிறப்பித்தார்.
[ Tuesday, 31-03-2015, 05:57.41 AM ]
புலம்பெயர் அமைப்புக்களை தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லை என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 31-03-2015, 05:51.39 AM ]
வடக்கு மாகாணசபையில் உள்ள அமைச்சுச் செயலாளர்களுக்கு அதிரடி இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
[ Tuesday, 31-03-2015, 05:43.11 AM ]
பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவை பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
[ Tuesday, 31-03-2015 05:39:23 GMT ]
வடகொரியாவிற்கு எதிராக தென் கொரியா மற்றும் அமெரிக்க ராணுவப் படைகள் இணைந்து கூட்டு போர் ஒத்திகையை நிகழ்த்தியுள்ளன.
[ Tuesday, 31-03-2015 05:33:19 GMT ]
சிங்கப்பூரில் பேருந்தில் பயணித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இந்தியர் ஒருவருக்கு மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 31-03-2015 05:06:26 GMT ]
நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான டேனியல் வெட்டோரி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
[ Tuesday, 31-03-2015 06:01:08 GMT ]
விண்வெளியில் சூரிய மின் உற்பத்தி மையத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 29-03-2015 06:34:44 ] []
ஐ.நா மண்டபத்தில் கடந்த புதன்கிழமை திரையிடப்பட்ட தமிழின அழிப்பு தொடர்பான ஆவணப்படத்தினை பார்வையிட்ட தமிழ் மற்றும் வேற்றின பிரதிநிதிகள் கண்ணீர் சிந்தி கலங்கினர்..