Warning: Invalid argument supplied for foreach() in /var/www/html/sites/tamilwin/desktop/system/app/template/meta_view.php on line 4
கொள்ளுப்பிட்டி விடுதியொன்றில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு - Tamilwin

கொள்ளுப்பிட்டி விடுதியொன்றில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

கொள்ளுபிட்டி காலி வீதியில் உள்ள விடுதியின் அறையொன்றில் இருந்து, கழுத்து வெட்டப்பட்ட நிலையில் தமிழ் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொள்ளுபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண், தங்கியிருந்த அறை கடந்த சில தினங்களாக  திறப்பக்கடாமலுள்ளதை அவதானித்த விடுதி ஊழியர்கள், விடுதி நிர்வாகத்தின் உதவியுடன் அறையை திறந்தபோது, கூரிய ஆயுதத்தால் கழுத்து வெட்டப்பட்டு உயிரிழந்த நிலையில் பெண் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 48 வயதுடைய கனகசபை சுதர்ஷினி கஹீலா என தெரிவரிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கொள்ளுப்பிட்டிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  மேலும் குறித்த பெண்ணுடன் விடுதியில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரையும் சந்தேகத்தின் பெயரில் தேடிவருவதாகவும் கொள்ளுபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

advertisement