செய்தி
 Photo
கூட்டமைப்பை விமர்சிப்பது போன்று ஏனைய கட்சிகளை விமர்சித்தால் அவர்கள் கடத்தப்படலாம்: பா.அரியநேத்திரன்
[ செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2012, 03:21.08 PM GMT ]
இலங்கையில் இன்று உள்ள 67 அரசியல் கட்சிகளிலும் ஜனநாயகக் கட்சியென்று சொல்லக் கூடிய தகுதி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டும்தான் உண்டு என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு அரசடித்தீவு, விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற உடல் திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பை யார் வேண்டுமென்றாலும் விமர்சிக்கலாம். விரும்பினால் கூட்டமைப்பு வேட்பாளர்களின் கொடும்பாவியைக் கூட எரிக்கலாம். எங்களிடம் ஆயுதங்கள் இல்லை மக்கள் பலம் மட்டும்தான் உண்டு.

எனவே, கூட்டமைப்பை பற்றி எவரும் எந்த இடத்திலும் விமர்சித்து பேசலாம். உதாரணமாகக் கூறவேண்டுமானால் காத்தான்குடியில் பிறந்த அமைச்சர் கிஸ்புல்லா மகிழடித்தீவில் வந்து கூட்டமைப்பை விமர்சிப்பதற்கு உரிமையுண்டு. அதேபோன்று ஓட்டமாவடியில் பிறந்த சுபைர் கடுக்கமுனை வாணிவித்தியாலயத்தில் வந்து கூட்டமைப்பை விமர்சிப்பதற்கு உரிமையுண்டு.

இதேபோன்று சிங்கள பெரும்பான்மைக் கட்சிகளும், அரசாங்கமும் கூட கூட்டமைப்பை விமர்சிப்பதற்கு உரிமையுண்டு. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராகிய நான் காத்தான்குடிக்கு சென்று அமைச்சர் ஹிஸ்புல்லாவையோ அல்லது ஓட்டமாவடிக்கு சென்று சுபைரையோ அல்லது வேறு இடத்திற்கு சென்று அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களையோ விமர்சிக்க முடியாது.

எனவே ஜனநாயகக் கட்சியென்று சொல்லக் கூடிய தகுதி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டும்தான் உண்டு. ஆனால் இலங்கையில் வேறு எந்த கட்சியையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதைப் போன்று விமர்சிப்பார்களேயானால், அவர்கள் இனம் தெரியாத நபர்களினால் தாக்கப்படலாம் அல்லது கடத்தப்படலாம் அல்லது கொலைசெய்யப்படலாம் அல்லது வெளிநாட்டிற்கு தாப்பியோடவேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.

இது தனிநபராக இருந்தாலும் சரி கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும் சரி அல்லது தமிழ், சிங்கள ஊடகங்களாக இருந்தாலும் சரி எல்லோருக்கும் இதே நிலைதான். இந்த பயம் காரணமாகத்தான் இன்று இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிகள் உட்பட தமிழ் ஊடகங்கள் தமிழ் அரசியல் கட்சிகள் என எல்லோரும் கூட்டமைப்பை தங்கள் விரும்பியபடி விமர்சிக்கின்றனர்.

இன்று இலங்கையில் எல்லாக்கட்சிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஜனநாயகப் போக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு. இந்த ஜனநாயகப் போக்குத்தான் இன்று ஜெனிவா உட்பட உலகம் முழுவதும் கூட்டமைப்பை, இலங்கை அரசுக்கு சமமாக மதித்து நடப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

பாடசாலையின் அதிபர் வீ.கோபாலபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மேற்கு கல்விப்பணிப்பாளர் தேவசிங்கம், மண்முனை மேற்கு பிரதி கல்விப்பணிப்பாளர் சிறிநேசன், மண்முனை தென்மேற்கு பிரதேச தவிசாளர் எ.பேரின்பராசா ஆகியோருடன் பெற்றோர் அசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 10:01.20 PM ]
இலங்கையின் வட மாகாணத்துக்கான தேர்தல் வரவிருக்கும் நிலையில் இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்களின் சாராம்சத்தை குறைக்க திட்டமிடுவதாக வரும் செய்திகள் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தி அடைந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சின் ஊடக மையம் தெரிவித்துள்ளது.
[ Wednesday, 19-06-2013, 09:29.47 PM ]
எம் தமிழக உறவுகளின் தொப்புள்கொடி உறவாக, தமிழீழ விடுதலையை தாங்கி நிற்கும் தூண்களாக தாய்த் தமிழகத்தில் உள்ள தமிழின உணர்வாளர்களில் அமரர் மணிவண்ணன் அவர்களும் ஒருவர். அவருடைய இத் திடீர் மறைவு, தமிழகத்து மக்களுடன் தமிழீழ மக்களையும் மிகவும் பாதித்திருக்கின்றது.
[ Wednesday, 19-06-2013, 08:55.15 PM ]
அமைதி வழியில் "சிறிலங்காவைப் புறக்கணிப்போம்" என்று ஓவல் மைதானத்தின் முன் நின்று போராடிய எம் மக்கள் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்கள். இலங்கைத் தீவிற்குள் தலைவிரித்தாடிய அரச பயங்கரவாத வேர்கள் எல்லை கடந்து பிறநாடுகளிலும் தமிழ் மக்களைக் குறி வைப்பது அம்பலமாகின்றது.
[ Wednesday, 19-06-2013, 04:23.29 PM ]
படையினரை தொடர்ந்தும் நிலைநிறுத்துமாறு யாழ்ப்பாண மக்கள் கோருவதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 03:28.23 PM ]
அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013 18:43:29 GMT ]
தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 20:09:19 GMT ]
சாம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு தயாராக உள்ளோம் என்று இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன கூறியுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 20:27:33 GMT ]
தனுஷ் நடித்துள்ள ராஞ்சனா என்ற இந்திப் படமும், மரியான் படமும் இம்மாதம் 21ம் திகதி வெளியிடலாமென அப்படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:35:13 ]
மாயமான் வேட்டை போலாகிவிட்டது 13 வது திருத்தச் சட்டத்துள் தீர்வினைத் தேடுவது. பூச்சியத்துள் புள்ளியைத் தேட முடியாது. இது நிரந்தரமான அரசியல் தீர்விற்கான ஆரம்பப்புள்ளியுமல்ல , முற்றுப்புள்ளியுமல்ல என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதை, இந்த வாரம் மந்திரிசபையயில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களே உறுதிப்படுத்துகின்றது.