யாழ். குருநகரில் வாள்வெட்டு! கணவன்- மனைவி படுகாயம்
இன்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், ம.சகாயராசா (வயது 49), ச.ரதி (வயது44) என்ற இருவருமே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்கான அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த குடும்பத்தினரின் வீட்டிற்குள் நுழைந்த சுமார் 10பேர் வரையிலான குழுவினரே இத்தாக்குதலை நடத்தியதாகவும், அவர்களுக்கும் இந்த குடும்பத்தினருக்கும் இடையிலிருந்த தனிப்பட்ட தகராறே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில், ஐந்து இளைஞர்களை இன்று நண்பகல் யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏனையவர்களை தொடர்ந்தும் தேடிவருவதாக தெரிவித்துள்ளனர்.