செய்தி
ஒலிவடிவம்:
தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்ததற்கான காரணங்கள்!- ஐ.நா. வில் இந்திய பிரதிநிதி
[ வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012, 12:00.49 AM GMT ] [ பி.பி.சி ]
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்துள்ளது. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிப்பதற்கான காரணங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இந்தியப் பிரதிநிதி விளக்கியிருந்தார்.

இலங்கையின் படிப்பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை இந்தியா வரவேற்றிருந்தது.

இலங்கையில் வாழும் அனைத்து இன மற்றும் மதக் குழுக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையிலான அரசியல் தீர்வு மூலமான நல்லிணக்கத்தை அந்நாட்டில் கொண்டுவருவதற்கு இந்த பரிந்துரைகள் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருவதாய் இந்தியா நம்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வை இலங்கை அரசாங்கம் ஆர்வத்துடன் தலைமையேற்று முன்னெடுக்க வேண்டும் என இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

13ஆவது அரசியல் சாசன சீர்திருத்தத்தையும் அதற்கும் மேற்பட்டும் இலங்கையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதை நோக்கி இலங்கை நடைபோட வேண்டும் என்று,ம் பரந்துபட்ட கலந்துரையாடலுடன் அரசியல் நடவடிக்கைகளை அது முன்னெடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

செய்த காரியத்துக்கு ஆட்களைப் பொறுப்பேற்கச் செய்வதிலும் மனித உரிமைகளை பேணுவதிலும் தனக்கு இருக்கின்ற சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றும் நோக்கில் இலங்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் நல்லிணக்கம், சமாதானம் போன்ற இலக்குகளை அடைய இலங்கை போன்ற ஒரு ஜனநாயக நாட்டுக்கு போதிய அவகாசமும் செயல்படுவதற்கான இடமும் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்தியா தெரிவித்தது.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவை இலங்கை தமது இலட்சியங்களை எட்ட உதவியாக இருக்க வேண்டுமே ஒழிய தடையாக இருக்கக்கூடாது என்றும் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 22-05-2015, 05:25.02 PM ]
இலங்கையின் ஆட்சி மாற்றத்துக்கு அமெரிக்காவும் பிரித்தானியாவுமே காரணம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று குற்றம் சுமத்தியுள்ளார்
[ Friday, 22-05-2015, 05:12.45 PM ]
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சரை சந்தித்துள்ளார்.
[ Friday, 22-05-2015, 04:58.26 PM ]
பாரம்பரிய சமூக மற்றும் நிர்வாக முறையின் வீழ்ச்சியே யாழ்ப்பாணத்தில் 18 வயது மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Friday, 22-05-2015, 04:40.08 PM ]
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையினை கண்டித்து கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தினை நடாத்தியதுடன் மெழுகுவர்த்தியேற்றி பிரார்த்தனையும் மேற்கொண்டனர்.
[ Friday, 22-05-2015, 04:35.18 PM ]
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் தம்மீது குற்றம் சுமத்துவதற்கு எவ்வித சாட்சியங்களும் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
[ Friday, 22-05-2015 14:18:26 GMT ]
காணாமல் போன மலேசிய விமான பயணிகளின் வங்கி கணக்குகளிலிருந்து முறைகேடாக பணத்தை திருடிய பெண் வங்கி ஊழியருக்கு நீதிமன்றம் 6 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
[ Friday, 22-05-2015 14:37:50 GMT ]
மாட்டு கறி சாப்பிட முடியாமல் போராடுபவர்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு ஓடுங்கள் என பாஜக அமைச்சர் கூறிய கருத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
[ Friday, 22-05-2015 14:54:48 GMT ]
ஐபிஎல் போட்டியின் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் பெங்களூரு அணி 139 ஓட்டங்கள் எடுத்துள்ளது
[ Friday, 22-05-2015 14:11:43 GMT ]
இன்றைய நவீன உலகில் கால்வலி, கைவலி, தலைவலி என பல்வேறு வலிகளை உடல்ரீதியாக சந்திக்கிறோம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 22-05-2015 09:01:34 ]
புங்குடுதீவு வித்தியாவுக்கு நீதி வேண்டும், கொலையாளி தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோசத்துடன் முஸ்லிம் மாணவ மாணவிகளை பெரும்பான்மையாகக் கொண்ட ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைககழக மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.