செய்தி
(2ம் இணைப்பு)
 
சிரேஸ்ட வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் காலமானார்
[ வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012, 02:52.19 PM GMT ]
வானொலிக்குயில் என்று செல்லமாக அழைக்கப்படும்,  பிரபல வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமானார்

தமிழ் வானொலி வரலாற்றில் இராஜேஸ்வரி சண்முகம் என்கிற இந்தப் பெயர் காலத்தால் அழிக்க முடியாத ஒரு வரலாறு.

இராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் இலங்கை வானொலியில் 35வருடங்களுக்கு மேலாக பணியாற்றினார்.

கொழும்பை பிறப்பிடமாக கொண்ட இராஜேஸ்வரி சண்முகம் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான நாடகங்களில் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பேசி பாராட்டை பெற்றவராவார்.

சிறந்த செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் திகழ்ந்த இராஜேஸ்வரி சண்முகம் இன்றைய இளையதலைமுறை ஒலிபரப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.

அன்னாரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.

இரண்டாம் இணைப்பு:

யாழ்ப்பாணத்தில் வைத்து மாரடைப்பால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் காலை நேர நிகழ்ச்சியான பொங்கும் பூம்புனல் உட்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை திறம்பட வழங்கியதில், ராஜேஸ்வரி சண்முகம் பிரபல்யம் பெற்று விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 யாழ்ப்பாணத்துக்கு சென்று கொழும்பு திரும்புவதற்காக புறப்பட்ட வேளையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு காலமானார். அவரின் பூதவுடல் தற்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 24-05-2013, 05:58.20 PM ]

முல்லைத்தீவு பனிச்சங்குளம் பாலத்திற்குள் இருந்து துவிச்சக்கர வண்டி ஒன்றுடன் இரண்டு படையினரின் உடலங்கள் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

[ Friday, 24-05-2013, 05:55.17 PM ]
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் நிறைவடைந்த நிலையில் வடபகுதியின் மனிதாபிமான உதவிக்கான தேவைகள் குறித்து ஐநாவின் முக்கிய அதிகாரி ஒருவர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை இன்று கிளிநொச்சியில் சந்தித்து உரையாடியிருக்கின்றார்.
[ Friday, 24-05-2013, 03:31.36 PM ]
கடந்த 18ம் நாள் காலி முகத்திடலில் நடைபெற்ற போர் வெற்றி விழா அணிவகுப்பின் போது, சிறிலங்கா கடற்படைப் படகு ஒன்று கடலில் மூழ்கிய சம்பவம் தொடர்பாக, இலங்கை கடற்படைத் தளபதியிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
[ Friday, 24-05-2013, 03:01.54 PM ]

தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

[ Friday, 24-05-2013, 02:37.52 PM ]
சிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும்.
[ Friday, 24-05-2013 19:34:02 GMT ]
அபுதாபியின் மலைப்பிரதேசமான அல்- பாயாவின் பாலைவனப் பகுதியில் சிக்கிக்கொண்ட இரண்டு சுற்றுலாப் பயணிகளை, துபாய் காவல்துறையின் விமானப்பிரிவு காப்பாற்றியது.
[ Friday, 24-05-2013 10:45:18 GMT ]
முறைகேடுகளை தடுக்க ராணுவ தளவாடங்கள் கொள்முதலை வெளிப்படையாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
[ Friday, 24-05-2013 19:54:44 GMT ]
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர்-2 சுற்றில் மும்பை இண்டியன்ஸ் அணி, ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை எதிர்கொண்டு 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Friday, 24-05-2013 08:46:56 GMT ]
வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி தெரியாது.
[ Friday, 24-05-2013 13:33:12 GMT ]
கொலிவுட்டில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால் தற்போது, தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக காணப்படுகிறார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.