செய்தி
ஐ.நா. தீர்மானம் இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு சிறந்த நடவடிக்கை!– ராதிகா சிற்சபைஈசன் பா.உ.
[ வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012, 03:18.21 PM GMT ]
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை அமர்வில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இலங்கைத் தீவில் நீதியை நிலைநாட்டுவதற்கான முதற்படி என்று கனடியப் பராளுமன்ற உறுப்பினர் செல்வி. ராதிகா சிற்சபைஈசன் தெரிவித்துள்ளார்.

கனடாவின் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையிலேயே மேற்படி கருத்தை மேற்படி கட்சியின் மனிதவுரிமைகளிற்குப் பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வெளிவிவகாரங்களிற்குப் பொறுப்பான உறுப்பினருடன் இணைந்து தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயகக் கட்சியின் வெளிவிவகாரங்களிற்கு பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் லவடிர் கருத்துத் தெரிவிக்கையில் தங்களது கட்சி நீணட காலமாக இந்த விவகாரத்தை சர்வதேச நாடுகள் கவனத்திலெடுத்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கேட்டு வருவதாகத் தெரிவித்தார்.

மேற்படி கட்சியின் மனிதவுரிமை விவகாரங்களிற்கான பாராளுமன்ற உறுப்பினர் வெய்ன் மார்சன் கருத்துத் தெரிவிக்கையில் இந்த ஆரம்ப முயற்சி இலங்கையில் நீண்டு நிலைக்கும் ஒரு நிரந்தர சமாதான சூழலிற்கு வழிவகுக்கும் எனத் தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த ராதிகா சிற்சபைஈசன் உலகின் பார்வை தற்போது இலங்கையில் நிலை கொண்டுள்ள இத் தருணத்தைப் பயன்படுத்தி நாங்கள் அனைவருமே மரியாதையுடன் வாழக்கூடிய ஒரு தீர்வுக்கு வழி செய்ய வேண்டுமென்றும் இந்தப் போரில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 06-10-2015, 08:04.08 AM ]
களனிப் பல்கலைக்கழகத்தின் அனைத்து விரிவுரையாளர்களும் இன்று திடீர் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர்.
[ Tuesday, 06-10-2015, 07:44.29 AM ]
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் குற்றம் தொடர்பில், குற்றம் சாட்டப்பட்டவர்களே, குற்றங்களை விசாரிப்பது என்பது பொருத்தமானதாக இருக்காது என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 06-10-2015, 07:28.33 AM ]
அநுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கெக்கிராவை நீதிமன்றத்தில் இன்று திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
[ Tuesday, 06-10-2015, 07:18.22 AM ]
மஹிந்த ராஜபக்ச அமர்வதற்கு ஆயத்தமாக இருந்த மின்சார நாற்காலியை மெத்தைகளிலான நாற்காலியாக நாங்கள் மாற்றிவிட்டோம் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 06-10-2015, 07:10.12 AM ]
போலந்து நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் லெஸ்ஸெத் செத்வெசிகா இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
[ Tuesday, 06-10-2015 00:20:41 GMT ]
பெரு நாட்டில் சூட்கேசில் மறைந்துகொண்டு வெளிநாடு செல்ல முயன்றவரை மோப்ப நாய் கண்டுபிடித்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
[ Tuesday, 06-10-2015 06:28:04 GMT ]
பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு சந்திப்பிலும் தீவிரமான கலந்துரையாடலில் ஈடுபட்டிருக்கும் போதும் கமெரா மீதும் ஒரு ஞாபகம் கொண்டிருக்கிறார் என்ற கருத்து, வைரலாக ஊடகங்களில் தற்சமயம் பரவி வருகிறது.
[ Tuesday, 06-10-2015 06:55:38 GMT ]
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் புனே அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
[ Tuesday, 06-10-2015 07:12:06 GMT ]
பெண்களை அழகாக காட்டுவது முகத்தில் உள்ள அவர்களது ஒவ்வொரு பாகங்களும்தான்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 04-10-2015 02:48:51 ]
மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் சர்வதேச விசாரணையை எதிர்க்கவில்லை. படையினரைக் காப்பாற்றவே உள்நாட்டு விசாரணையைக் கோருகிறோம் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க அண்மையில் கூறியிருந்தார்.