செய்தி
ஒலிவடிவம்:
அமெரிக்காவின் உற்பத்தி பொருட்களை இலங்கையில் தடைசெய்ய வேண்டும்!- விமல் வீரவன்ச
[ புதன்கிழமை, 14 மார்ச் 2012, 01:33.07 AM GMT ] [ வீரகேசரி ]
அமெக்காவின் பொருட்களை இலங்கையில் தடைசெய்ய வேண்டும். கூகுல் மற்றும் ஜிமெயில் போன்ற இணையத்தளங்களையும், கோலா குளிர்பானம் கே.எப்.சி. உணவு வகைகளையும் இளைய சமூகத்தினர் புறக்கணிக்க வேண்டுமென்று அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஜெனீவாவில் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் ஐந்து நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்குள் வந்து இராணுவத்தினரை சுதந்திரமாக விசாரணை செய்வார்கள். எனவே, அரசு பிரேரணைக்கு அடிபணிந்து விடக் கூடாது.

மீறி அடிபணிந்தால் அடுத்த நிமிடம் அரசாங்கத்தைவிட்டு வெளியேறி விடுவேன் என்று அவர் குறிப்பிட்டார்.

ஜெனீவா பிரேரணைக்கு எதிரான பேரணியினை நேற்று செவ்வாய்க்கிழமை ஹைட்பாக் மைதானத்தில் தேசிய சுதந்திர முன்னணி நடத்தியது. இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஜெனீவாவில் ருத்திரகுமாரன் தலைமையிலான புலிகள் கூடாரமிட்டு இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்துகின்றனர்.

எதிர்வரும் 22 ம் அல்லது 23 ம் திகதிகளில் பிரேரணைக்கு உறுப்பு நாடுகளிடையே வாக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டால் அது நாட்டிற்கு பெரும் ஆபத்தாகவே அமையும்.

புலிகளை தோற்கடித்தமைக்காகவே அமெரிக்கா இலங்கையை பழிவாங்குகிறது.

யுத்தத்தை காரணம் காட்டி நன்மைகளை பெற்றுக்கொள்ளவோ பிரச்சினைகளை மூடி மறைக்கவோ அரசிற்கு தேவையில்லை. இலங்கைக்கு எதிராக செயற்படும் அமெரிக்காவின் பொருட்கள் உள்நாட்டில் தடை செய்யப்பட வேண்டும்.

இளைய சமூகத்தினர் அமெரிக்காவின் உற்பத்திப் பொருட்களை புறக்கணித்து விட்டு நாட்டை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் இணைந்துகொள்ள வேண்டும்.

அரசாங்கம் பிரேரணை நிறைவேற்ற அனுமதியளிக்கக் கூடாது என்றார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-04-2015, 06:07.44 AM ]
கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை புதிய அரசாஙகம் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதினால் எங்கே தாமும் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில் எதிர்கட்சியினர் இன்று பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 21-04-2015, 06:03.59 AM ]
நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளப்படும் போது அது குறித்து முன்னரே தமக்கு அறிவிக்க வேண்டுமென சபாநாயகர் சமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 21-04-2015, 06:02.26 AM ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும், தன்னையும் அவமதிப்பதற்காக தற்போதைய அரசாங்கம் முயற்சித்து வருகின்றதென பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 21-04-2015, 05:52.30 AM ]
ஆட்சி மாற்றத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் மிகவும்  பாதிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 21-04-2015, 05:51.50 AM ]

கல்பிட்டி நுரைச்சோலை அனல் மின் நிலையம் தொடர்பில் புத்தளம் நகர மத்தியில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

[ Tuesday, 21-04-2015 06:11:43 GMT ]
ஜப்பானில் குடிகார ஓட்டுநர்களை பிடிக்கும் செயலில் புத்த துறவி ஒருவர் ஈடுபட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 21-04-2015 06:00:43 GMT ]
ஓரினச்சேர்க்கையாளர் கணவரின் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்த பெண் மருத்துவர், தான் தற்கொலை செய்யப்போவதாக தனது தந்தைக்கு முன்பே தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 21-04-2015 05:12:54 GMT ]
ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
[ Tuesday, 21-04-2015 06:07:37 GMT ]
ஜார்ஜியா தொழிநுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களுக்காக காகித ஒலிவாங்கி ஒன்றை தயாரித்துள்ளனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 19-04-2015 02:17:31 ]
கடந்த மாத இறுதியில் சீன - இலங்கைப் படையினருக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்ட போர்ப்பயிற்சிக்கு, சீனா வைத்திருக்கும் பெயர் பட்டுப்பாதை ஒது்துழைப்பு 2015  என்பதாகும்.