செய்தி
ஒலிவடிவம்:
அரசுக்கு ஆசி வேண்டி மணியோசை எழுப்புமாறு விடுத்த அரசின் உத்தரவை புறக்கணித்த யாழ்.மக்கள்!
[ புதன்கிழமை, 14 மார்ச் 2012, 03:51.31 AM GMT ] [ உதயன் ]
நாட்டுக்கு ஆசிர்வாதம் வேண்டி ஆலய மணிகளை ஒலிக்கச் செய்யுமாறு அரசு விடுத்த வேண்டுகோளை யாழ். மக்கள் புறக்கணித்துள்ளனர். எனினும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களில் படையினரின் வற்புறுத்தலின் பேரில் விசேட பூசைகளும், மணி ஓசை எழுப்பும் நிகழ்வும் நடைபெற்றன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:

நாட்டுக்கு ஆசிர்வாதம் வேண்டி நேற்று சகல ஆலயங்களிலும் மணி ஒலிக்க வேண்டும் என்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு பணித்திருந்தது.

ஆயினும் அரசின் இந்தக் கட்டளையைப் புறக்கணிக்குமாறு கூட்டமைப்பு மக்களை கோரியிருந்தது. மக்களினதும், மாவீரர்களினதும் நினைவாக மணி ஒலி எழுப்பத் தடை போட்ட அரசுக்கு ஆசீர்வாதம் வேண்டி மணி ஒலி எழுப்புமாறு கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்று கூட்டமைப்பு கேட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழ் மக்கள் அரசின் கோரிக்கையை உதாசீனம் செய்து ஆலயங்களில் மணி ஒலியை எழுப்பவில்லை. குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் எந்தவொரு ஆலயத்திலும் குறித்த நேரத்தில் மணி ஓசை எழுப்பப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

எனினும் படைத்தரப்பின் நிர்ப்பந்தத்தின் பேரில் யாழ். மாவட்டம் தவிர்ந்த வடக்கின் ஏனைய பகுதிகளில் பின்னர் மணி ஓசை எழுப்பப்பட்டது. அத்துடன் விசேட பூஜைகளும் வற்புறுத்தலின் பேரில் இடம்பெற்றன.

கிளிநொச்சி, துணுக்காய், நெடுங்கேணி போன்ற பகுதிகளில் இத்தகைய பலவந்தப்படுத்தப்பட்டு மணி ஒசை எழுப்பப்பட்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் அரச அதிபர் திருமதி சாள்ஸ் தலைமையில் பண்டாரிக்குளம் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விசேட பூசைகளும் மணி ஓசை எழுப்பும் நிகழ்வும் இடம்பெற்றது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 04-08-2015, 06:57.41 AM ]
மஹிந்த ராஜபக்‌ஷவின் பக்கத்தில் இனி எந்தக் காலத்திலும் நிற்கப் போவதில்லை என ஐக்கிய தேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரான ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 04-08-2015, 06:46.33 AM ]
நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த 18 இலட்சத்து 70 ஆயிரத்து 73 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
[ Tuesday, 04-08-2015, 06:38.42 AM ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்புரிமை தொடர்பில் தேர்தலின் பின்னர் கூடும் முதலாவது மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 04-08-2015, 06:35.37 AM ]
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த காலத்தில் காணாமல்போனவர்களளின் உறவுகள் கண்டன போராட்டம் ஒன்றை இன்று  காலை 09.30 மணிக்கு திருகோணமலை சிவன் ஆலயத்திற்கு முன்பாக நடத்தினர்.
[ Tuesday, 04-08-2015, 06:23.37 AM ]
தேர்தல் பிரசாரங்களின் போது அரசியல்வாதிகள் பல்வேறுபட்ட தந்திரோபாயங்களை பயன்படுத்துவர். சில தந்திரோபாயங்களை முறியடிக்க முடியாமல் மறுதரப்புகள் தவிக்கும். சிலருக்கு தேர்தல் பிரசாரம் கைவந்த கலை. தேர்தல் பிரசாரங்களின் போது உண்மைக்குப் புறம்பான கருத்துக்களையும் சில அரசியல்வாதிகள் முன்வைப்பர்.
[ Tuesday, 04-08-2015 00:26:17 GMT ]
பாஸ்டன் பகுதியில் உள்ள பொது மருத்துவமனை ஒன்றில் நரம்பியல் நிபுணராக பணியாற்றி வருபவர் மருத்துவர் ஜோயல் சலினாஸ். இவர்தான் தம்மிடம் வரும் நோயாளிகளின் வலியை தாமே உணர்ந்துகொள்பவர்.
[ Tuesday, 04-08-2015 06:45:56 GMT ]
திருநெல்வேலியில் டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 12 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
[ Tuesday, 04-08-2015 05:51:11 GMT ]
போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நண்பருக்கு திருமண பரிசாக கிரீஸ் தீவை வழங்க முடிவு செய்துள்ளார்.
[ Tuesday, 04-08-2015 06:25:19 GMT ]
சோனி நிறுவனம் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Monday, 03-08-2015 02:22:26 ]
பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும், இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையில், எல்லாக் கட்சிகளுமே தம்மால் இயன்றளவுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதற்கான பிரசார உத்திகளைக் கையாண்டு வருகின்றன. வடக்கு தேர்தல் களத்திலும், பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கின்றன.