செய்தி
ஒலிவடிவம்:
 Photo
மட்டு.புதூர் மக்கள் வங்கியில் கொள்ளையிடப்பட்ட நகை உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு
[ புதன்கிழமை, 14 மார்ச் 2012, 07:06.14 AM GMT ]
மட்டக்களப்பின் புறநகர்ப்பகுதியான புதூரில் உள்ள மக்கள் வங்கியில் கடந்த வருடம் கொள்ளையிடப்பட்ட நகைகளின் உரிமையாளர்களுக்கு நஸ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஆனி மாதம் 30ஆம் திகதி வானில் வந்த கொள்ளையர்களினால் புதூர் மக்கள் வங்கிக்கிளை கொள்ளையிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில், தீவிர விசாணை மேற்கொண்டிருந்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்த நபர்களை கைதுசெய்திருந்ததுடன் அவர்களிடம் இருந்து நகைகளையும் மீட்கப்பட்டனர்.

எனினும், சந்தேகநபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்றுவருவதால், அவற்றின் காலதாமதத்தை உணர்ந்து வங்கியில் வைப்புச் செய்திருந்த வாடிக்கையாளர்களுக்கான நஸ்ட ஈடு வழங்கும் பணியை வங்கி மேற்கொண்டுள்ளது.

இதன் ஆரம்ப வைபவம் இன்று, மட்டக்களப்பு மக்கள் வங்கியின் நகரக் கிளையில் வங்கி முகாமையாளர் எஸ்.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக மக்கள் வங்கியின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் ஏ.அப்துல் அஸீஸ் கலந்துகொண்டார்.

குறித்த வங்கியில் இருந்து 2660 பேரின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்ததாகவும் அவர்களுக்கான முழுமையான நஸ்ட ஈடு வழங்கப்பட்டு வருவதாகவும் அதற்காக, சுமார் 20 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.

தற்போது சந்தைப் பெறுமதிக்கு ஏற்ப உரியவர்களின் நகைகளுக்கு நஸ்ட ஈடு வழங்கப்பட்டுவருவதாக தெரிவித்த அவர், அதற்கு மேலதிகமாக சேதாரம் மற்றும் செய் கூலிக்குரிய பணமும் வழங்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு அனைத்து வாடிக்கையாளர்களுக்குரிய நஸ்டஈடும் வழங்கப்படும் என மாவட்ட பிராந்திய முகாமையாளர் ஏ.அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 23-05-2013, 07:55.46 PM ]
வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் 7 வயதுடைய சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[ Thursday, 23-05-2013, 07:39.49 PM ]
இலங்கை அரசு தம் தவறை மூடி மறைக்க எத்தனிக்காமல் தமிழர்களின் பிரச்சினைகளை சர்வதேசத்தின் உதவியோடு தீர்க்க முன்வரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.
[ Thursday, 23-05-2013, 04:11.57 PM ]
ரக்பி போட்டி மைதானத்தில் நடுவரைத் தாக்கிய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் குறித்து  இலங்கை ரக்பி அதிகாரசபை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பிபிசி தகவல் வெளியிட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013, 02:56.38 PM ]
இலங்கையில் தமிழினத்தை அழித்தொழித்த நாள் 2009, மே 18. ஒட்டுமொத்த உலக நாடுகளும் இலங்கையுடன் கைக்கோர்த்து நின்று ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்துவிட்டு தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்ட நாள்.
[ Thursday, 23-05-2013, 02:51.21 PM ]
பேருந்தில் பயணம் செய்த பெண்ணொருவர் மீது தவறாக நடக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரி ஒருவரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை பதில் நீதவான் எஸ்.திருச்செந்தில்நாதன் உத்தரவிட்டுள்ளார்.
[ Thursday, 23-05-2013 18:20:27 GMT ]
ஈக்குவடார் நாட்டின் முதல் செயற்கைக் கோளான பெகாசஸ், சென்ற மாதம் சீனாவின் ஜியுகுவான் விண்வெளி நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டது.
[ Thursday, 23-05-2013 11:12:23 GMT ]
தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
[ Thursday, 23-05-2013 17:13:15 GMT ]
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது.
[ Thursday, 23-05-2013 06:03:17 GMT ]
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலாவிகளின் வரிசையில் முன்னணியில் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 17:03:09 GMT ]
மகன்களை சினிமாவுக்கு கொண்டு வரும் ஆர்வத்தில் நூற்றில் ஒரு பங்கை மகள்கள் விஷயத்தில் எந்த சினிமா தந்தையும் காட்டுவதில்லை.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.