செய்தி
ஒலிவடிவம்:
 Photo
பிரான்சிலும்- சுவிசிலும் ஐ.நா மனித உரிமைச் சபை கூட்டத்தொடர் குறித்து அரசியல் கருத்தரங்கம் : பேராசிரியர் மணிவண்ணன் - பேராசிரியர் பொல் நியூமன் பங்கெடுக்கின்றனர்
[ வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2012, 03:14.08 PM GMT ]
ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் குறித்து பிரான்சிலும், சுவிசுலும் அரசியல் கருத்தரங்கம் ஒன்று இடம்பெறவுள்ளது.

தமிழகத்தில் இருந்து வருகை தந்து, தற்போது ஐ.நா மனித உரிமைச் சபையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வள அறிஞர் குழுவில் பங்கெடுத்திருக்கும் பேராசிரியர் மணிவண்ணன், பேராசிரியர் பொல் நியூமன் ஆகியோர், இக்கருத்தரங்கில் பங்கெடுக்கவுள்ளனர்.

சிறிலங்கா தொடர்பில்அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையின் நிலையென்ன, சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணைக்காளன வழிமுறையென்ன, போன்ற பல்வேறு விடயங்கள் குறித்தும் இக்கருத்தரங்கில் கலந்துரையாடப்படவுள்ளது.

சுவிசில் 17-03-12 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, Sivan Kovil , Industrie Strasse.34,, CH-8152 Glattbrugg ,ZURICH இந்த முகவரியிலும், பிரான்சில் 18-03-12 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு, 4-6 Place de le Republique,93100 Montreuil, Metro : ROBESPIERRE, Lingne 9 இந்த முகவரியிலும் இடம்பெறவுள்ளது.

இக்கருத்தரங்கில் அனைவரும் பங்கெடுத்து, சுதந்திர தமிழீழம் நோக்கிய விடுதலைப்பயணத்துக்கு வலுவூட்டுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 02-03-2015, 06:34.24 AM ]
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நவீன தொழிநுட்பத்துடனான செய்மதி உபகரணங்களுடன் யாத்திரீகர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
[ Monday, 02-03-2015, 06:31.27 AM ]
ஊவா மாகாண முதலமைச்சர் பதவியில் இருந்து தன்னை நீக்கியமை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி முன்னாள் முதலமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
[ Monday, 02-03-2015, 06:21.27 AM ]
மட்டக்களப்பு கிரான் தொப்பிகல இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் நேற்று கடமையில் இருந்த போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
[ Monday, 02-03-2015, 06:21.02 AM ]
இந்தியா, சீனாவைவிட எமது வளங்கள் முக்கியம் வாய்ந்தவை என்பதால் இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது அவர் யாழிற்கு சென்று என்ன பேசப்போகின்றார் என்பது குறித்து ஆராய வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் இணைத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
[ Monday, 02-03-2015, 05:58.33 AM ]
கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோல்வியடைவார் என தான் முன்னரே அறிந்திருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் எதிராகவே காணப்பட்டதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த துணைத் தலைவர் ஏ.எச்.எம் பெளசி தெரிவித்துள்ளார்.
[ Monday, 02-03-2015 06:03:47 GMT ]
அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று தீவிரவாதி புகைப்படத்திற்கு பதிலாக ரஷ்ய ஜனாதிபதி புடினின் புகைப்படத்தை ஒளிபரப்பியுள்ளது.
[ Monday, 02-03-2015 06:46:27 GMT ]
நாமக்கலில் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்ட 16 வயது மாணவியை தற்போது அவரது கணவரிடம் இருந்து பொலிசார் மீட்டுள்ளனர்.
[ Monday, 02-03-2015 05:05:55 GMT ]
இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
[ Monday, 02-03-2015 00:45:49 GMT ]
BlackBerry நிறுவனமானது மற்றுமொரு தொடுதிரை தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்து வருகின்றது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 01-03-2015 06:02:30 ]
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் ஆட்சி மாற்றம் ஏற்படாமல் போயிருந்தால், இந்த மாதம், இலங்கை அரசாங்கத்துக்கு மிகப்பெரிய சோதனைக் களமாகவே அமைந்திருக்கும்.