செய்தி
ஒலிவடிவம்:
இலங்கைக்கு தொடர்ந்தும் பிரித்தானியா ஆயுத உதவி! விளக்கமளிக்குமாறு ஆயுத விற்பனைக்கு எதிரான அமைப்பு கோரிக்கை
[ சனிக்கிழமை, 17 மார்ச் 2012, 01:53.58 AM GMT ]
இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றிய மேலதிகமான சட்சியங்களை சனல் 4 ஆவணப்படம் வெளிப்படுத்தியுள்ள நிலையில், இலங்கைக்கான ஆயுதங்களை பிரித்தானியா தொடர்ந்தும் விற்பனை செய்து வருவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்காக அனுமதி தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது ஏன் என்று விளக்கமளிக்கமாறு, பிரித்தானிய அரசிடம் ஆயுத விற்பனைக்கு எதிரான பரப்புரை அமைப்பு கோரியுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009 மே மாதம் முடிவுக்கு வந்த பின்னர் பிரித்தானியா, 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பெறுமதியான இராணுவ மற்றும் இருபயன்பாட்டு கருவிகளை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேவேளை, பிரித்தானிய அனுமதி பெற்ற ஆயுதங்களை, இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் பயன்படுத்தவில்லை என்று உத்தரவாதம் அளிக்க முடியாது என்று பிரித்தானிய நாடாளுமன்றக் குழுநிலைக் கூட்டத்தில், ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டகம் தெரிவித்துள்ளது.

பிந்திய தகவல்களின்படி, 2011ம் ஆண்டின் முதல் 9 மாதங்களில், பிரித்தானியா 1.5 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான ஆயுதங்கள் ஏற்றுமதிக்கு அனுமதியளித்துள்ளது. இவற்றில் 1.3 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான கருவிகள் இலங்கை இராணுவத்துக்குரியவையாகும்.

இவற்றில் கவச வாகனங்கள், குண்டுதுளைக்காத உடற் கவசங்கள், “ பொறியில் சிக்க வைக்கும் எதிர் நடவடிக்கை கருவிகள் மற்றும் கூறுகள்” என்ற தலைப்பின் கீழ் வரும் கைக்குண்டுகள், குண்டுகள், ஏவுகணைகள் என்பன அடங்கியுள்ளன.

இது பற்றிக் கருத்து வெளியிட்டுள்ள ஆயுத விற்பனைக்கு எதிரான பரப்புரை அமைப்பின் பேச்சாளர் காயி ஸ்ரியமன், “கிளர்ச்சியில் ஈடுபடும் சொந்த மக்களுக்கு எதிரான அரசாங்கங்களின் அடக்குமுறைகளை அரபுலக எழுச்சி உலகின் கவனத்துக்கு கொண்டு வந்தது.

“இலங்கையின் கொலைக்களங்கள்- தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்‘ அதேபோன்று. தனக்கு எதிரானவர்கள் மற்றும் போர் வலயத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீது ஏவி விடப்பட்ட இலங்கை அரசின் கொடூரமான நடவடிக்கைளை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் பிரித்தானிய அரசு தொடர்ந்தும் இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது ஏன் என்று நாம் கேட்க வேண்டியுள்ளது,“என்று அவர் தெரிவித்துள்ளார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 26-05-2013, 04:49.59 AM ]
திருகோணமலை, கிண்ணியாவில் 13 வயதுச் சிறுமியை பாலியல் பாலாத்காரத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
[ Sunday, 26-05-2013, 04:07.05 AM ]
போருக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்த போராளிகளில் பலர் புகலிடம் கோரி வெளிநாட்டுத் தூதரகங்களை நாடுவது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது என்று அறியவருகின்றது.
[ Sunday, 26-05-2013, 03:34.32 AM ]
டொமினிக் குடியரசில் வைத்து அண்மையில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் குறித்த தகவல்கள் இன்னும் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
[ Sunday, 26-05-2013, 03:27.30 AM ]

இலங்கையில் தமக்கு பாதுகாப்பு இல்லை என்று கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வரும், முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி, அமெரிக்க தூதரிடம் தெரிவித்துள்ளார்.

[ Sunday, 26-05-2013, 03:26.12 AM ]
ஈரான் மீதான தடைகளை இலங்கை மீறுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[ Sunday, 26-05-2013 04:52:23 GMT ]
துருக்கி தலைநகர் அங்காரா பாதாள ரயிலில் முத்தமிட்டுக்கொண்டு செல்லும் ஜோடிகளின் காட்சிகள் ரகசியக் கமெராக்களில் நிறைய பதிவாகியிருந்தன.
[ Sunday, 26-05-2013 04:53:49 GMT ]
திருமண விழாவில் மின்சாரம் தடைபட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காதலனுடன் மணப்பெண் ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Sunday, 26-05-2013 02:44:35 GMT ]
ஐ.பி.எல் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் சாம்பியன் கிண்ணம் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்றாகும்.
[ Sunday, 26-05-2013 05:08:46 GMT ]
வெளிநாட்டில் இருக்கும் ஒருவருடன் நாம் இலவசமாக எளிதில் பேச இன்று பலரும் பயன்படுத்துவது ஸ்கைப் நெட்வொர்க்கை தான்.
[ Sunday, 26-05-2013 05:32:48 GMT ]
தமிழில் விகடகவி படத்தின் மூலம் அறிமுகமான அமலா பால், மைனா படத்தின் மூலம் புகழ் பெற்றார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 25-05-2013 18:03:35 ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.