இலங்கைக்கெதிரான தீர்மானம் வங்கிக்கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும்!- பிரதான வங்கிகளின் அறிக்கையில்
ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில், மேற்குலக நாடுகள் இலங்கைக்கெதிரான தீர்மானத்தைக் கொண்டுவர முயற்சி செய்வதனால், இலங்கையின் பிரதான வணிக வங்கிகள் மற்றும் விசேட வங்கிகள் கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என குறித்த வங்கிகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான தீர்மானத்தின் மூலம் இலங்கையில் ஏற்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளுக்கு அழுத்தங்களையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். அந்தவகையில், இலங்கையின் பிரச்சினைக்கு உள்நாட்டு தீர்வு பொருத்தமானது என சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளும் என இலங்கையின் பல வங்கிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
யுத்தம் முடிவடைந்து, இலங்கை முன்னேற்றத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், இவ்வாறான யோசனை கொண்டு வரப்படுவது பொருத்தமற்றது என வங்கிகள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளன.
எனவே சர்வதேச சமூகம் இது தொடர்பில் நன்கு ஆராய்ந்து, இலங்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் செயற்பட வேண்டும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.