செய்தி
 Photo
47நாடுகளையும் பல அரசாங்கங்களையும் உள்ளடக்கிய மனிதவுரிமைகள் சபையில் நாம் சென்று எப்படி பங்குகொள்ள முடியும்? சுமந்திரன்
[ திங்கட்கிழமை, 05 மார்ச் 2012, 07:38.39 PM GMT ]
2009ம் ஆண்டின் பின்னர் ஜ.நா மனிதவுரிமைகள் அமையம் தற்போது 12ஆவது தடவை அமர்வினைக் கூட்டியிருக்கின்றது. இதற்கு முன்னரும் 11தடவை கூட்டப்பட்டிருக்கின்றது. அப்போது கூட்டமைப்பிடம் யாரும் கேட்காத கேள்வி இப்போது; ஏன் கேட்கப்படுகின்றது? இதை புரிந்தும் புரியாததுபோல சிலர் கேட்கத் தூண்டுகிறார்கள்.

47நாடுகளையும் பல அரசாங்கங்களையும் உள்ளடக்கியதாக மனிதவுரிமைகள் சபை உள்ளது. இதில் ஒரு நாட்டில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியான நாம் அங்கு சென்று எப்படி பங்கு கொள்ள முடியும்? என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கேட்டுள்ளார்.

“ஜெனீவா அமர்வுகளிற்கு கூட்டமைப்பு செல்லாமைக்கான காரணம்” குறித்து விளக்கமளிக்கும் வகையில் இன்று நல்லூர் - இளங்கலைஞர் மன்றத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் பிரதேச சபை உறுப்பினர்களுடனான சந்திப்பிலேயே இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் பேசுகையில் இந்த அமர்வுகளில் பதிவு செய்யப்பட்ட மனிதவுரிமை அமைப்புக்கள் சிலவற்றுக்கு அனுமதியிருக்கின்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றக் கிடைத்தாலும் 3நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும் அதேபோன்று பேசுகிறவர் தான் சார்ந்த கட்சியின் பெயரைக் கூறி பேசமுடியாது.

அவ்வாறு பேசினால் அங்குள்ள ஒழுங்கு விதிகளை மீறியதாக அந்த மனிதவுரிமைகள் அமைப்பின் பதிவு ரத்துச் செய்யப்படும். அரசு மட்டுமே பேச முடியும். இது எழுதப்பட்டிருக்கின்ற சட்டம். ஆனால் பக்க நிகழ்வு என்ற ஒன்றில் அமர்வில் கலந்து கொண்ட தூதுவர்கள் இராஜதந்திரிகளை அழைத்துப் பேசமுடியும்.

அதுவும் நுழைவாயிலில் நின்று சாப்பாடு வைத்திருக்கின்றோம் என கூறி சிலரை அழைத்து சில விடயங்களை அவர்களுக்குச் சொல்லமுடியும் அதுவும் அந்த மனிதவுரிமைகள் அமைப்பின் சார்பில். தமிழ் தேசிய கூட்டமைப்பு பல அரசினால் அரசியல் இயக்கமான அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது.

உதாரணத்திற்கு சென்ற ஐப்பசி மாதம் அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் எம்மை அழைத்துப் பேசியிருக்கின்றது. வேறு யாரையும் அவ்வாறு அழைக்கவில்லை அமெரிக்காவினுடையதும் இந்தியாவினுடையதும் அறிக்கைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசுங்கள் என கூறுகிறார்கள்.

அந்தளவுக்கு உலகளவில் எமக்கு அங்கீகாரம் இருக்கின்றது. அப்படியான தமிழ்தேசிய கூட்டமைப்பு அப்படியான அமைப்பின் தலைவர் ஒரு நுழைவாயிலில் நின்று எதோவொரு மனிதவுரிமை அமைப்பின் பெயரில் நான் பேச விழைகிறேன் எனக்கு நேரம் தாருங்கள் எனக்கேட்டு பேசுவது முறையா?.

அப்படியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நுழைவாயிலில் நின்று கொண்டு சாப்பாட்டுப் பொதி கொடுத்து அங்கு வருபவர்களை அறைகளுக்கு அழைத்துச் செல்வது முறையா? அப்படி செய்வது பிழை என்று நான் சொல்லவில்லை அப்படியானதொரு நிலை எதிர்வரும் யூன் மாதத்திலோ செப்ரெம்பர் மாத்திலோ வரலாம்.

ஆனால் இன்றுள்ள நிலையிலே நாம் எங்களை நாம் இருக்கிற ஸ்தானத்திலிருந்து நாங்களே எங்களை கிழே இற்க்கும் நிர்ப்பந்தம் எமக்குக் கிடையாது. இந்த சபையில் கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் பிரேரணை எப்படி உருவானது. உலகின் வல்லரசு தானாக முன்வந்து ஒரு பிரகடனத்தை எப்படிக் கொண்டு வந்திருந்தது.

நாலு மாதங்களுக்கு முன்னர்தானே நாம் அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் அழைப்பை ஏற்று அங்கு சென்று வந்திருந்தோம். எனவே மக்களுக்கு எல்லாம் புரிந்திருக்கும் என நான் நினைத்திருந்தேன். நாலையும் நாலையும் கூட்டிப்பார்க்கத் தெரியாதா?

அந்தச் சந்திப்பின் பின்னர் அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தினர் சொன்னார்கள். இலங்கை தொடர்பான எமது கொள்கையை மீள வகுத்துக் கொள்ளவிருக்கின்றோம். நீங்கள் சொன்னதை கருத்திலெடுத்து இலங்கை தொடர்பான எமது புதிய கொள்கையை வகுப்போம் அது உங்கள் மக்களுக்குத்தான் பயனுள்ளதாக இருக்கும் என சொன்னார்கள்.

கனடா சென்றிருந்தபோது அதில் ஒருநாள் வாசிங்டன் சென்றிருந்தேன். இராஜங்கத் திணைக்களத்துடன் ஒன்றரை மணிநேரம் பேசினேன். ஐ.நா நிறைவேற்றப் படக்கூடிய தீர்மானங்கள் 3 வகைப்படும். ஒன்று செயற்பாடுடைய தீர்மானம். சென்ற செப்ரெம்பர் மாதம் கனடா கொண்டு வந்த தீர்மானம் கலந்துரையாடல் தீர்மானம் இரண்டாவது.

இந்த இரண்டையும் தள்ளிப்போட்டோம். இந்த இரண்டிற்கும் இடைப்பட்டது. ஒன்றை பிரகடனப்படுத்தும் தீர்மானம். அந்த பிரகடனத்தின் குறிப்பிடப்படும் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படா விட்டால் அடுத்த கூட்டத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் அவ்வாறானதொரு தீர்;மானமே இன்று அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம்.

ஜனவரி மாதம் அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தில் பேசியிருந்தேன். அதை மட்டுமே நான் கூறமுடியும் அதன் பின்னர் எழுந்ததே அமெரிக்காவின் இந்தப் பிரகடனத் தீர்மானம். 2009ம் ஆண்டு இலங்கை தொடர்பாக ஒரு விசேட தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அது 12அதிக படி வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

ஆதனால்தான் இலங்கை தொடர்பான தீர்மானம் கொண்டுவர 3வருடங்களாகியது. உலக அரசியல் நிலைமைகளை சீர்தூக்கிப் பார்த்து என்ன விதமான இது செய்யப்படக்கூடும் என சிந்தித்தோம். மேற்குலக நாடு கொண்டுவந்தால் அது தோற்கடிக்கப்படும் அமெரிக்கா கொண்டு வருவதாக இருந்தாலும்,

அடுத்த வாரம் யார் இந்த தீர்மானத்தை கொண்டுவரப் போகிறார்கள் என்பது வெளியே கொண்டுவரப்படும். ஜெனீவாவில் எமது பிரசன்னம் உதவியாக இருக்குமா? பிரச்சினையாக இருக்குமா என்றும் ஆலோசித்தோம் உலகத்தின் வல்லரசு ஒரு தீர்மானத்தை கொண்டு வரும்போது உலகத்தின் சிறிய அமைப்பு அதன் உந்துதலால் தான் இது கொண்டுவரப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ளுமா?

யூன் செப்ரெம்பர் மாதத்தில் நிலை வேறாக இருக்கமுடியும். ஆனால் இன்றிருக்கின்ற நிலைமையில் எமக்கு கேடாக அமையும் என்ற தீர்மானத்தை சந்தேகத்திற்கிடமற்ற தீர்மானத்தை எடுத்துள்ளோம். அதுவே மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. மக்களுடைய எதிர்பார்ப்பு வித்தியாசமாய் இருந்திருக்கிறது.

இந்த தடவை அவ்வாறான எதிர்பார்ப்பு வந்திருக்கின்றது. இந்த நிலையில் தமிதேசியக் கூட்டமைப்பு வரலாற்றுத் துரோகத்தை செய்து விட்டது என்பதை நம்பிக் கொண்டிருக்காமல் அவர்களிடம் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் உன்மையை சொல்லவேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தனதுரையில் நாம் சிலவேளை பார்க்கின்ற விடயங்கள் பிழையாக இருந்தால் வரலாற்றில் தவறான மனிதர்களாக மாற்றப்படுவோம் சரியாக நடந்தால் வரலாற்றில் நல்ல தீர்மானத்தை எடுத்தவர்களாக கருதப்படுவோம்.

பல பிரச்சினைகளை சந்திக்கின்றபோது நாம் பட்டை தீட்டப்படுகின்றோம். இன்று ஜெனீவாவிலுள்ள பிரச்சினைதான் இன்று எமக்கு ஒரு வெளிச்சத்தை காண்பிப்பதாகவுள்ளது. ஆனால் இன்று ஜெனீவாவில் கொண்டுவரப்படும் தீர்மானம் கூட இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை நிறைவேற்றுங்கள் என்பதாக இருக்கின்றது.

ஆனால் அது பொருத்தமற்றது. அது எமக்கு எதையுமே தராது என்பதை வெளிப்படையாவே நிராகரித்திருக்கின்றோம். எனவே அதை ஆமோதிப்பதாக அதை நிறைவேற்றுங்கள் என்பதாக அங்கு சென்று வலுச்சேர்க்க முடியுமா என்ற கேள்வி எமக்கிருக்கின்றது.

நாம் ஒரு பகிரங்கமான சர்வதேச விசாரணையினை நாம் வலியுறுத்தி வருகின்றோம். இன்று மக்களை வழி நடத்தவேண்டிய கடப்பாட்டில் இன்றிருக்கின்றோம் அதனையே சம்பந்தன் செய்திருக்கின்றார். நாம் எடுத்த முடிவில்தான் எமது வரலாற்று இருப்பும் மறைவும் இருக்கின்றது என்றார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 22-12-2014, 11:52.58 PM ]
அரசாங்கம் இராணுவத்தை இழிவுபடுத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ Monday, 22-12-2014, 11:43.18 PM ]
எதிர்வரும் ஜனாதிபதி தோதலின் போது தேவையென்றால் இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்கினையும் அளிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
[ Monday, 22-12-2014, 11:32.27 PM ]
எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
[ Monday, 22-12-2014, 11:13.09 PM ]
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் சட்டவிரோத ஆயுதங்களைக் களைவதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
[ Monday, 22-12-2014, 06:38.55 PM ]
அரசாங்கத்தில் இருந்து விலகியவர்கள் தொடர்பாக இன்று இரத்தினபுரியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கருத்து தெரிவிக்கைல்.
[ Monday, 22-12-2014 13:49:05 GMT ]
பிணத்திலிருந்து எபோலா பரவுவதால், இறுதிச்சடங்கை பாதுகாப்பாக மேற்கொள்ளுமாறு சியாரா லியோன் வலியுறுத்தியுள்ளது.
[ Monday, 22-12-2014 13:23:00 GMT ]
புதுவை அரவிந்தர் ஆசிரம பெண்ணுக்கு மது கொடுத்து மாறி மாறி கற்பழித்தோம் என கைதான வாலிபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
[ Monday, 22-12-2014 13:29:18 GMT ]
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததற்கு பல காரணங்களை கூறியுள்ளார் இந்திய அணித்தலைவர் டோனி.
[ Monday, 22-12-2014 11:27:33 GMT ]
தற்போது உள்ள வாழ்க்கை முறையில் அனைவரையும் சர்க்கரை நோய் எளிதாக தாக்கிவிடுகிறது.
[ Monday, 22-12-2014 06:10:08 GMT ]
கத்தி திரைப்படம் 50 நாட்களை கடந்து தமிழகத்தின் சில திரையரங்குகளில் மட்டும் ஓடுகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 21-12-2014 03:06:35 ]
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும், மூன்று வாரங்கள் கூட இல்லாத நிலையில், ஜனநாயக ரீதியான தேர்தலை விரும்புவோருக்கு உள்ளூர கலக்கம் அதிகரித்து வருகிறது. இந்தத் தேர்தல் நியாயமாக நடத்தப்படுமா என்பதே அந்தக் கலக்கத்துக்கான காரணம்.