செய்தி
அனைத்து மக்களும் அனைத்து உரிமைகளுடன் வாழ வேண்டும் - சம்பந்தன்
[ திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2012, 05:57.54 PM GMT ]
தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் சிறுபான்மை சிங்கள மக்களுடன் சம உரிமைகள் வழங்கப்பட்ட ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதனையே தாம் எதிர்பார்ப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஏசியன் ட்ரிபியுன் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களோ முஸ்லிம் மக்களோ இலங்கையில் இரண்டாம் பட்ச மக்களாக வாழ்வதை தாம் விரும்பவில்லை, அனைத்து மக்களும் அனைத்து உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதையே தாம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களிடமும் இதனையே தாம் தெரிவித்ததாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டை பிரிக்காமல், ஒரே இலங்கையில் அரசியல் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்பதையும் தாம் இந்திய குழுவிடம் தெரிவித்ததாகவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 18-12-2014, 10:28.12 AM ]
அண்மையில் ஆளும் தரப்பில் இருந்து வெளியேறி பொது வேட்பாளருடன் இணைந்துகொண்ட துமிந்த திசாநாயக்கவின் தீவிர ஆதரவாளர் நிஹால் என்பவர் ராஜாங்கனை பகுதியில் சடலாமாக மீட்கப்பட்டுள்ளார்.
[ Thursday, 18-12-2014, 10:21.48 AM ]
அமைச்சர் விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணியின் மற்றுமொரு தொகுதி அமைப்பாளர் எதிரணியில் இணைந்து கொண்டுள்ளார்.
[ Thursday, 18-12-2014, 10:16.55 AM ]
தேர்தல் சட்டம் சரியான முறையில் அமுல்படுத்தப்படுவதில்லை எனக் கூறி ஐக்கிய தேசியக் கட்சி, ஜாதிக ஹெல உறுமய, ஜனநாயகக் கட்சி மற்றும் பல சிவில் அமைப்புகள் இணைந்து தேர்தல் செயலகத்திற்கு எதிரில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
[ Thursday, 18-12-2014, 09:36.48 AM ]
அம்பாந்தோட்டை பிரதேசத்தில் நிதி மோசடியுடன் தொடர்புடைய ஜப்பான் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
[ Thursday, 18-12-2014, 09:27.59 AM ]
மைத்திரி ஆட்சியின் கீழ் எவரையும் பழிவாங்க தயாரில்லை எனவும் அந்த ஆட்சியில் சட்டத்தின் ஆட்சிக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
[ Thursday, 18-12-2014 09:09:28 GMT ]
பாகிஸ்தானின் பெஷாவர் ராணுவ பள்ளி தாக்குதலுக்கு ஆப்கான் தலிபான்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
[ Thursday, 18-12-2014 07:37:11 GMT ]
டெல்லியில் நடந்த முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது மடியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் படத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்ததாக நடிகை குஷ்பு பேசியுள்ளார்.
[ Thursday, 18-12-2014 05:54:55 GMT ]
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 408 ஓட்டங்கள் குவித்துள்ளது.
[ Thursday, 18-12-2014 07:35:54 GMT ]
காய்கறிகள் நமது அன்றாட வாழ்வில் பெரும் பங்கு வகிக்கின்றது.
[ Thursday, 18-12-2014 00:31:40 GMT ]
கத்தி படத்திற்கு பிறகு விஜய், சிம்பு தேவன் இயக்கத்தில் ஒரு புதிய படம் நடித்து வருகிறார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Thursday, 18-12-2014 06:00:54 ]
இலங்கையில் மிகவும் சூடு பிடித்துள்ள தேர்தல் களமானது இலங்கை வரலாற்றில் 70 வருடங்களுக்கு முன்பு நடந்த நல்லாட்சியை உருவாக்குவதற்காக ஒருவருக்கும் ஆசியாவின் அதிசயமிக்க நாடாக மாற்றியுள்ளதாக சொல்லும் அதிபருக்கும் இடையில் நடக்கும் இந்த தேர்தல் போர் முற்றிலும் தம் இனம் சார்ந்த நடவடிக்கைகளுக்காக மட்டுமே.