செய்தி
தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படாமைக்கு கூட்டமைப்பும், ஐ.தே.கட்சியுமே பொறுப்பு: அராசங்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 ஏப்ரல் 2012, 03:27.36 AM GMT ]
தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படாமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஐக்கிய தேசியக் கட்சியும் பொறுப்பை ஏற்க வேண்டுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தீர்வுத் திட்ட பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளத் தவறியுள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பிரபல வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் குறித்த கட்சிகள் உரிய பதில் அளிக்கத் தவறியுள்ளன.

13ஆம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென இந்தியா கட்டாயப்படுத்தவில்லை.

தமிழ் மக்களின் ஏகப் பிரதிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது. பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டியது அவசியமானது.

ஹிலாரி கிளிண்டனிடமோ அல்லது எஸ்.எம். கிருஸ்ணாவிடமோ தெரிவிப்பதன் மூலம் இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.

கடத்தல்கள், காணாமல் போதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஊடகங்கள் அரசாங்கம் மீது சுமத்தி வருகின்றன.

எவரேனும் மறைந்து கொண்டால், யாரேனும் காணாமல் போனால் அவரைக் கடத்தியது அரசாங்கம் தான் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அரசாங்கம் முஸ்லிம் ஒருவரை நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகி வரும் செய்திகள் வெறும் வதந்தியே என தெரிவித்துள்ளார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 12:18.29 AM ]
இலங்கையிலிருந்து தமிழகம் மண்டபம் முகாமில் உள்ள தனது மனைவி மற்றும் புதல்விகளை சந்திக்க சென்ற இலங்கைத் தமிழர் அந்த முகாமிற்கு அருகாமையில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மரணமானார்.
[ Wednesday, 19-06-2013, 12:09.23 AM ]
தங்காலையில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான இறைச்சிக் கடையொன்று பௌத்த பிக்குகள் உள்ளிட்ட குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 19-06-2013, 12:00.25 AM ]
இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடாது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாக இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
[ Tuesday, 18-06-2013, 11:35.13 PM ]
மாயமான் வேட்டை போலாகிவிட்டது 13 வது திருத்தச் சட்டத்துள் தீர்வினைத் தேடுவது. பூச்சியத்துள் புள்ளியைத் தேட முடியாது. இது நிரந்தரமான அரசியல் தீர்விற்கான ஆரம்பப்புள்ளியுமல்ல , முற்றுப்புள்ளியுமல்ல என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதை, இந்த வாரம் மந்திரிசபையயில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களே உறுதிப்படுத்துகின்றது.
[ Tuesday, 18-06-2013, 11:17.45 PM ]
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.
[ Tuesday, 18-06-2013 19:56:16 GMT ]
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் இவ்வளவு காலமும் அங்கு முகாமிட்டு தலிபான் தீவிரவாதிகளை முற்றிலுமாக விலக்கி, பாதுகாப்பு பொறுப்புக்களை அந்த நாட்டின் ராணுவத்திடம் ஒப்படைத்தது.
[ Tuesday, 18-06-2013 13:04:07 GMT ]
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் மோசடி வழக்கில் பிரபல மலையாள நடிகை சாலு மேனன் சிக்குகிறார்.
[ Tuesday, 18-06-2013 21:06:02 GMT ]
ஒப்புதல் வாக்குமூலம் தருமாறு பொலிசார் கட்டாயப்படுத்துவதாகவும், கடுமையாக சித்ரவதை செய்வதாக டெல்லி நீதிமன்றத்தில் புக்கிகள் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
[ Tuesday, 18-06-2013 13:20:08 GMT ]
செம்பருத்தியின் பூக்களில் வைட்டமின் சி மற்றும் தாதுப் பொருட்கள் அதிகம் அடங்கியுள்ளதால், உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
[ Tuesday, 18-06-2013 13:26:49 GMT ]
கொலிவுட்டில் தனுஷ், பார்வதி ஜோடியாக நடிக்கும் ‘மரியான்’ படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.