செய்தி
வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் மதிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012, 10:28.52 AM GMT ] [ புதினப்பலகை ]
அமெரிக்க டொலருக்கு எதிரான  இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று செவ்வாய்க்கிழமை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

வரும் மே மாதம் தொடக்கம் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கான கொடுப்பனவுகளை அமெரிக்க டொலரில் வழங்குவதில்லை என  இலங்கை மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

இதன்காரணமாக இலங்கை  ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் இன்று காலை முதலீட்டாளர்கள் டொலரை வாங்குவதற்கு முண்டியடித்தனர்.

இதனால், நேற்று மாலை, 131.35 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று காலை 132.20 ரூபாவாக வீழ்ச்சியடைந்தது.

அமெரிக்க டொலருக்கு எதிராகப் பதிவாகியுள்ள இலங்கை நாணயத்தின் ஆகக் குறைந்த மதிப்பு இதுவேயாகும்.

ஏற்கனவே, கடந்த மார்ச் 19ம் நாள் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான இலங்கை நாணய மதிப்பு 131.60 ரூபாவாக வீழ்ச்சியைச் சந்தித்தது.

அதன்பின்னர், சற்று நாணய மதிப்பு வீழ்ச்சி தடுக்கப்பட்ட போதும், கடந்த இருவாரங்களாக மீண்டும் வீழ்ச்சி கண்டுவருகிறது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 06-03-2015, 01:54.44 AM ]
கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவரின் 2800 கோடி ரூபா மோசடி அம்பலப்படுத்தப்படும் என அரசாங்கப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
[ Friday, 06-03-2015, 01:52.14 AM ]
நாட்டின் நிதிச் சட்டங்களுக்கு புறம்பான வகையில் உத்தரவுகளை அமைச்சர்கள் பிறப்பித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள ணே;டாம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அரச வங்கிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதி நிறுவனங்களின் அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.
[ Friday, 06-03-2015, 01:30.18 AM ]
ஒரு மாத காலத்திற்குள் சுயாதீன ஆணைக் குழுக்கள் நிறுவப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
[ Friday, 06-03-2015, 01:11.36 AM ]
இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டு வரும் நல்லெண்ண திட்டங்களை உலக தமிழர் பேரவை வரவேற்றுள்ளது.
[ Friday, 06-03-2015, 12:58.35 AM ]
நாடாளுமன்ற தேர்தல்கள் இன்று எட்டி பார்த்துக் கொள்ள விழையும் இந்த நேரத்தில் எங்களுக்குள் போட்டிகள் வளரட்டும். ஆனால் பொறாமை எழாது இருக்கட்டும். என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
[ Thursday, 05-03-2015 12:55:18 GMT ]
உலகின் முதல் மனிதர்களில் ஒருவனது உடல் பாகம் எத்தியோப்பியாவில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
[ Thursday, 05-03-2015 15:50:13 GMT ]
விடுதலைப்புலிகளுக்கு வெடிப்பொருட்கள் கடத்திய குற்றத்திற்காக இலங்கை அகதிகள் 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
[ Thursday, 05-03-2015 13:49:40 GMT ]
உலகக்கிண்ணத் தொடரில் பெர்த்தில் நடக்கும் நாளைய லீக் ஆட்டத்தில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.
[ Thursday, 05-03-2015 14:18:35 GMT ]
உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விடயம் அல்ல.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Thursday, 05-03-2015 08:31:25 ]
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்தினம் 3ந் திகதி வருகை தந்திருந்தார்.