செய்தி
 Photo
தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சினை குறித்து ஹிஸ்புல்லாவின் கருத்துக்கு உலமா சபை கண்டனம்!
[ செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012, 10:53.44 AM GMT ]
தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாரையின் விகாராதிபதி இனாமலுவ தேரரை நேற்று திங்கட்கிழமை சந்தித்த பின்னர், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஒவ் ஸ்ரீலங்கா ஆகியன கண்டனம் தெரிவித்துள்ளன.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொது செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஒவ் ஸ்ரீலங்காவின் தலைவர் என்.எம்.அமீன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"பிரதி அமைச்சரின் குறித்த அறிக்கை முற்றிலும் தவறானதும் பிழையாக வழிநடத்துவதுவதுமாகும். தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் சில பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினரால் சேதமாக்கப்பட்டவில்லை என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த பள்ளிவாசல் சேதமாக்கப்பட்டதை ஊடகங்கள் மூலம் முழுநாடும் அறிந்தது. பள்ளிவாசல் தேசமாக்கப்பட்டமைக்கு சாட்சியான வீடியோ மற்றும் புகைப்படங்கள் யூ ரியூப் மற்றும் இணையத்தளங்களில் உள்ளன.

இந்நிலையில், பிரதி அமைச்சர் தேவையான விசாரணைகளை மேற்கொள்வதுடன் குறித்த ஆதாரங்களை பார்வையிட்டு தனது அறிக்கையை தெளிவுபடுத்துமாறும் நாம் வலியுறுத்துகின்றோம்.

இந்த உண்மை நிலையினை வெளிப்படுத்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தவறும் பட்சத்தில் முஸ்லிம் சமூகத்தை பலவீனப்படுத்துவதற்கான நோக்கத்துடன் அவர் செயற்படுகின்றார் என கருதும் நிலைக்கு இச்சமூகம் தள்ளப்படும்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 05-09-2015, 03:48.25 PM ]
வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக படுகொலை நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
[ Saturday, 05-09-2015, 03:47.45 PM ]
இலங்கைப்  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அடுத்தடுத்து  இந்தியாவிற்கான பயணத்தினை மேற்கொள்ளவுள்ளனர் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Saturday, 05-09-2015, 03:41.08 PM ]
நாட்டின் ஆட்சி மாற்றத்தில் ஒட்டுமொத்தமாக சில நன்மைகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அதனால் தமிழ் மக்களுக்கு பெரிய நன்மைகள் எவையும் ஏற்படவில்லை.
[ Saturday, 05-09-2015, 03:31.20 PM ]
வெண்ணை திரண்டுவரும் வேளையில் தாழியை உடைக்கும் கதையாக எமது செயற்பாடு இருக்ககூடாது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
[ Saturday, 05-09-2015, 03:21.53 PM ]
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியக் குழுவின் தீர்மானத்தின்படியே தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
[ Saturday, 05-09-2015 15:13:55 GMT ]
திருட்டு என்பது பெரியதாக இருந்தாலும் சிறியதாக இருந்தாலும் குற்றம்தான்.
[ Saturday, 05-09-2015 11:53:56 GMT ]
நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள திதாகிபே என்ற இடத்தில் வசித்தவர் பிரசாத் மஜும்தார்.
[ Saturday, 05-09-2015 08:02:30 GMT ]
எதிரணியை மிரள வைக்கும் முன்னணி பந்துவீச்சாளர்களும் சில நேரங்களில் தடுமாறிய நிகழ்வுகளும் அதிகம் நடந்துள்ளது.
[ Saturday, 05-09-2015 10:49:35 GMT ]
இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை காளானுக்கு உள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 04-09-2015 04:54:42 ] []
மொரட்டுவ பிரதான தபால் நிலைய மலசலகூட குழிக்குள் இருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமாக சாதாரண கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.