செய்தி
இலங்கைக்கு ஐ.நாவில் ‘ஆப்பு‘ வைக்கிறது ஏசிஎவ்
[ செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012, 01:31.08 PM GMT ]
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தொடருக்கு, மூதூர் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் படுகொலை தொடர்பான அறிக்கை ஒன்றை, பிரான்சை தளமாகக் கொண்ட ஏசிஎவ் எனப்படும் பட்டினிக்கு எதிரான நிறுவனமும், ஸ்பீக் எனப்படும் மனிதஉரிமைகள் அமைப்பும் இணைந்து கையளிக்கவுள்ளன.

2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 ஏசிஎவ் பணியாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு முட்டுக்கட்டை போடப்படுவதைக் கண்டிக்கும் வகையிலும், இந்த வழக்கில் இலங்கை அதிகாரிகள் நீதியை நிலைநாட்டத் தவறியுள்ளதைக் சுட்டிக்காட்டும் வகையிலும், இந்த அறிக்கை அமையவுள்ளது.

மூதூர் படுகொலைகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும், இலங்கை அதிகாரிகள் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடிக்கவோ, சட்டத்தின் முன் நிறுத்தவோ இல்லை.

இந்த விடயத்தில் இலங்கை அதிகாரிகள் நீதியை நிலைநாட்டத் தவறியுள்ளதை இந்த அறிக்கை குறிப்பிட்டுக் கூறவுள்ளது.

நீதித்துறையின் மீதான அரசியல் தலையீடுகள் மற்றும் வெளிப்படைத் தன்மையில் உள்ள குறைபாடுகள் என்பனவற்றை இலங்கை தரப்பில் உள்ள தவறுகளாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டவுள்ளது.

இந்த அறிக்கை எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி ஜெனிவாவில் இடம்பெறவுள்ள மீளாய்வுக் கூட்டத்தில் இலங்கைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 05:27.29 AM ]

கொள்ளுப்பிட்டி பூமாரியம்மன் ஆலயம் முன்னர் அமைந்திருந்த இடத்தில் இருந்து அடாவடியாக அகற்றப்பட்டமைக்கும், பொருத்தமான மாற்று இடம் இதுவரையில் தரப்படாமைக்கும்  இந்த ஆலயத்தின் பரிபாலன சபையினரே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்.

[ Wednesday, 19-06-2013, 04:43.40 AM ]
இலங்கை அரசாங்கம் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிலைமாறாமல் தொடர்ந்தும் தோல்வி கண்டுவருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளது.
[ Wednesday, 19-06-2013, 04:16.26 AM ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகிந்த சிந்தனை சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
[ Wednesday, 19-06-2013, 03:11.54 AM ]
அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தினர் இன்று ஒரு மணிநேர அடையாள பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரியவருகின்றது.
[ Wednesday, 19-06-2013, 02:58.49 AM ]

வவுனியா- நெளுக்குளம், பாரதிபுரம் பகுதியில் தமிழர்களின் சில வீடுகளை முஸ்லிம்கள் தீயிட்டு எரித்துள்ளதோடு, தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

[ Wednesday, 19-06-2013 04:48:54 GMT ]
பாகிஸ்தானுக்குள் நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் புனிதப் போர் ஆகாது என லஷ்கர்- இ- தொய்பா இயக்கத்தை நிறுவிய ஹபீஸ் சயீத் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013 05:15:54 GMT ]
திருமணம் ஆகாத பெண்ணும், ஆணும் உறவு வைத்து கொண்டால் சட்டப்படி அவர்களை கணவன்- மனைவியாக கருத வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
[ Wednesday, 19-06-2013 03:42:01 GMT ]
ஒருநாள் சர்வதேச போட்டி அரங்கில் 11 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை இலங்கை அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் மஹேல ஜெயவர்தன கடந்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013 01:57:01 GMT ]
தற்போது காணப்படும் உலங்கு வானூர்திகளிலேயே அதி வேகம் கொண்ட புதிய உலங்கு வானூர்தி உருவாக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 19-06-2013 05:39:33 GMT ]
நேரம் படத்தில் ஜோடியாக நடித்த நிவின் பௌலி, நஸ்ரியா நசீம் மலையாள படமொன்றில் மீண்டும் இணைய உள்ளனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.