செய்தி
(2ம் இணைப்பு)
 
யாழ்.வடமராட்சியில் பட்டப்பகலில் ஒருவர் அடித்துக்கொலை இனந்தெரியாதவர்கள் அட்டகாசம்
[ செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012, 09:51.39 AM GMT ]
யாழ்.வடமராட்சிப் பகுதியில் பட்டப்பகலில் பொது மக்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் இளைஞர் ஒருவர் இனத் தெரியாதவர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.

இச்சம்பமவ் இன்று மதியம் 1.30 மணியளவில் வடமராட்சி வதிரிச் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்களில் வந்த இனம் தெரியாதவர்களே இவ்விளைஞரை அடித்துக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரது உடைமைகள் யாவும் வீதியில் சிதறிக்கிடப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவரது சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் தொடர்பான விபரங்கள் எவையும் உடனடியாக எமக்கு கிடைக்கப்பெறவில்லை

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் வடமராட்சியில் தற்போதும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் இணைப்பு

வடமராட்சியில் அடித்துக்கொலை செய்யப்பட்டவர் தொண்டமானாற்றுப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் என அடையாளங் காணப்பட்டதோடு இச்சம்பம் இராணுவ காவலரணுக்கு அருகிலும் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இன்று மதியம் வதிரிச் சந்தியில் இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார். இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டபோதே இது தெரியவந்துள்ளது.

தொண்டமனாறு கோவில் வீதியைச் சேர்ந்த சிவஞானம் சிவறூபன் (வயது 28)  என்றவரே இச்சம்பவத்தில் இவ்வாறு அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவரை கறுப்பு நிறமோட்டார் சைக்களில் வந்த முகமூடியணிந்த இருவர்கொண்ட குழுவினரே வாள் மற்றும் பொல்லுகளால் தாக்கி கொலை செய்துள்ளனர் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து 50 மீற்றர் பகுதியில் இராணுவக் காவலரண் ஒன்றும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 31-08-2015, 06:37.35 AM ]
தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவர் குமரன் பத்மநாதனை கைது செய்வதற்கு போதுமான சாட்சிகள் இல்லை என சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
[ Monday, 31-08-2015, 06:35.37 AM ]
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் பதுளை மாவட்டத்தின் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள, சாமர சம்பத் திஸாநாயக்கவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஊவா மாகாண முதலமைச்சராக நியமிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Monday, 31-08-2015, 06:24.29 AM ]
எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை எதிர்க்கட்சிகளிடம் ஒப்படைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விருப்பம் வெளியிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
[ Monday, 31-08-2015, 06:14.29 AM ]
நாடாளுமன்றமும் அரசாங்கமாக மாறுவதனை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
[ Monday, 31-08-2015, 06:08.25 AM ]
நடந்துமுடிந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தேர்தல் மாவட்டத்தில் வெற்றி பெற்ற சி.சிறீதரன் வாக்களித்த பெருமக்களுக்கு கிராமங்களில் சென்று நன்றிகளை தெரிவித்து வருகின்றார்.
[ Monday, 31-08-2015 00:19:23 GMT ]
மேற்கு ஆப்பிரிக்காவில் இறந்துபோன இரட்டையர் குழந்தைகளுக்கு உருவபொம்மை செய்து அதை குழந்தையாக பாவிக்கும் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
[ Monday, 31-08-2015 06:29:08 GMT ]
உத்தர பிரதேசத்தில் ஈவ் டீசிங் செய்தவர்களை தடுத்த 2 சகோதரர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
[ Monday, 31-08-2015 06:07:17 GMT ]
இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3வது டெஸ்ட் கொழும்புவில் உள்ள எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடக்கிறது.
[ Sunday, 30-08-2015 13:39:57 GMT ]
கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆரோக்கியமானதாகும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 30-08-2015 06:43:52 ]
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்டு, காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் இப்போது தீவிரம் பெற்றிருக்கின்றன.