செய்தி
ஆளுநர் சந்திரசிறியின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் அத்துமீறி குடியேறும் சிங்கள குடும்பங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012, 02:10.50 PM GMT ]
முல்லைத்தீவு கொக்கிளாயில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் ஏற்பாட்டில், எதிர்வரும் 26ஆம் திகதி மேலும் 110 வரையான சிங்கள குடும்பங்கள் தமிழர் நிலங்களில் குடியேற்றப்படவுள்ளனர்.

கடந்த சனிக்கிழமையன்று குறித்த பகுதிக்குச் சென்றிருந்த ஆளுநரிடம் சிங்கள மக்கள் தமக்கான காணி மற்றும் வீடுகளை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இதற்கமைய, அத்துமீறி தமிழர் பகுதியில் குடியேறியுள்ள சிங்கள மீனவக் குடும்பங்களை அந்தப் பகுதிகளிலேயே நிரந்தரமாக குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை, ஏற்கனவே சுமார் 87 வரையான குடும்பங்கள் நிரந்தர பதிவுகள் மற்றும் மீள்குடியேற்றத்திற்கான இதர வசதிகளுடன் குடியேற்றப்பட்டிருக்கின்றனர்.

இந்த நிலையிலேயே சுமார் 110 குடும்பங்களைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் தமிழர் நிலங்களில் குடியேற்றப்படவுள்ளனர். இதற்கென சுமார் 100 ஏக்கர் வரையான நிலம் அபகரிக்கப்படவுள்ளது.

இதற்காக தமிழர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் எனவும் ஆளுநர் சிங்கள மக்களிடம் தெரிவித்திருக்கின்றார். மேலும் இந்த விஜயத்தின்போது எந்த விதமான அறிவித்தல்களையும் வழங்காமல் ஆளுநர் திடீரென சென்றிருந்தார்.

இதேவேளை இந்தப் பகுதியில் ஏற்கனவே தமிழருக்குச் சொந்தமான சுமார் 1500 ஏக்கர் நிலம் சிங்களவர்களால் இராணுவத்தினரின் ஆதரவுடன் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 04-10-2015, 04:33.28 PM ]
ஈழத் தமிழினம் அழிவின் விளிம்பில் இருந்து கதறும் இக்காலக்கட்டத்தில் அவர்களைக் காப்பாற்ற உலகத் தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்கவேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டுள்ளது.
[ Sunday, 04-10-2015, 04:31.07 PM ]
யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்காக சர்வதேச நீதிபதிகளை இணைத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிக்குகள் சங்கம் ஒன்று புத்தளத்தில் உணவுத் தவிர்ப்பை ஆரம்பித்துள்ளது.
[ Sunday, 04-10-2015, 04:09.29 PM ]
19வது அரசியல் அமைப்பு திருத்தத்தின்கீழ் அமைக்கப்படவுள்ள 10 சுயாதீனக் குழுக்களுக்காக சுமார் 500பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
[ Sunday, 04-10-2015, 03:55.25 PM ]
இலங்கையில் இருந்தும், துபாயில் இருந்து மதுரைக்கு வந்த மிஹின் எயார் விமானம் மற்றும் துபாயில் மதுரைக்கு வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்திலும் பயணித்த பயணிகளிடம் இருந்து சுமார் 8 கோடி ரூபா பெறுமதியான தங்கங்கள் இன்று கைப்பற்றப்பட்டுள்ளன.
[ Sunday, 04-10-2015, 02:36.26 PM ]
உலக போட்டியான (பொருளாதார) சுட்டெண்ணில் இலங்கை 5 இடங்களை தாண்டி முன்னேற்றியுள்ளது.
[ Sunday, 04-10-2015 08:40:03 GMT ]
ஜப்பானின் 390 வயதுடைய போன்சாய் மரம் வியக்க வைக்கும் வரலாற்றை கொண்டுள்ளது.
[ Sunday, 04-10-2015 06:53:09 GMT ]
ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு கிருஷ்ணா ஆற்றங்கரையோரம் கோயில் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுள்ளது.
[ Sunday, 04-10-2015 10:09:45 GMT ]
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ஷசாங் மனோகர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
[ Sunday, 04-10-2015 14:30:15 GMT ]
சுண்டைக்காய் வற்றலில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 04-10-2015 02:48:51 ]
மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் சர்வதேச விசாரணையை எதிர்க்கவில்லை. படையினரைக் காப்பாற்றவே உள்நாட்டு விசாரணையைக் கோருகிறோம் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க அண்மையில் கூறியிருந்தார்.