செய்தி
கேரள கஞ்சாவைக் கடத்திய நபர் மன்னாரில் கைது
[ செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012, 01:57.34 PM GMT ]
மன்னாரில் போதைப் பொருள் கடத்திய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடற்படை உத்தியோகத்தர்களும், பொலிஸாரும் கூட்டாக இணைந்து பிரதேசத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில், போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர், எழுதூர் சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபரிடமிருந்து கேரள கஞ்சா ஒன்பது கிலோ கிராம் மற்றும் 890 கிராம் எடையுடைய விஷ போதைப் பொருள் வகையொன்றென சந்தேகிக்கப்படும் ஹெரோயின் வகைப் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இந்த தேடுதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

சந்தேக நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 29-07-2015, 11:18.03 AM ]
யாழ்.நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல்போனதாக கூறப்பட்ட 19 வயது இளைஞர் கொழும்பு வெள்ளவத்தை பொலிஸாரினால் நேற்றய தினம் மீட்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 29-07-2015, 11:17.39 AM ]
பிரித்தானிய முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் அவரது குடும்பத்தினருடன் அடுத்த மாதம் 11 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Wednesday, 29-07-2015, 10:35.58 AM ]
பொதுத் தேர்தலில் தமது தரப்பின் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்து கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேலிக்குரிய வாக்குறுதிகளை வழங்கி வருவதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 29-07-2015, 10:26.54 AM ]
அரசாங்க தலைவர்களில் துரதிஷ்டமான தலைவர் ரணில் விக்ரமசிங்க எனவும் அவர் பிரதமராகியமையினால் முழு நாடும் வீணடிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 29-07-2015, 09:41.24 AM ]
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், மக்களுக்கு அன்றிருந்த வெள்ளை வான் பீதி இல்லாமல் போயுள்ளதுடன் சிரித்த முகத்துடன் இருப்பதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 29-07-2015 06:27:36 GMT ]
விமானத்தின் காக்பிட் அறைக்குள் ஆபாச பட நடிகையுடன் இணைந்து விமானி ஒருவர் மது அருந்தி உற்சாகத்தில் திளைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Wednesday, 29-07-2015 06:35:25 GMT ]
பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பேருந்து ஓட்டுனர் ஒருவரின் வீரச் செயலால் 75 பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
[ Wednesday, 29-07-2015 07:21:39 GMT ]
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர்கான் தனது துல்லியமான பந்துவீச்சால் எதிரணியை மிரட்டியவர்.
[ Wednesday, 29-07-2015 06:56:16 GMT ]
அன்னாசிப்பழத்தில் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Monday, 27-07-2015 08:51:57 ] []
முள்ளிவாய்க்காலில் எம்மால் தவிர்க்க முடியாமல் போன அவமானகரமான தோல்வி, அதற்கடுத்து வந்த நாட்களில் எம்மீது தொடர்ச்சியான அவமானங்களை குவித்துகொண்டே இருக்கின்றது.... என குறிப்பிடுகின்றது முன்னாள் போராளிகளுக்கான ஓர் கடிதம்.