செய்தி
 Photo
தண்ணீருக்கு ஏங்கும் தட்டுவன் கொட்டி கிராமம்
[ செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012, 02:30.13 AM GMT ]
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் இருக்கின்ற பின்தங்கிய கிராமங்களில் ஒன்று தட்டுவன்கொட்டி. தமிழர் பிரதேசங்கள் மீதான இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் தம் வாழ்வைத் தொலைத்து இன்று ஏங்கும் கிராமங்களில் தட்டுவன்கொட்டி கிராமமும் அடங்கும்.

பெரும்பாலும் கடற்றொழிலில் ஈடுபடும் குடும்பங்களே அதிகம் வாழ்ந்து வருகின்றனர். சுமார் 98வரையான குடும்பங்கள் வாழ்ந்துவருகின்ற இக்கிராமத்தில், நீர் பிரச்சினை தற்போது இந்த மக்களுக்கு இடர் தருவதாக காணப்படுகின்றது.

இப்பிரச்சினை தொடர்பாக கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை உப தலைவர் நகுலேஸ்வரன், உறுப்பினர் பொன்னம்பலநாதன் இவர்களுடன் கிளிநொச்சி மாவட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரனும் மக்களை சந்தித்து கலந்துரையாடினர்.

தற்போது குறைந்த அளவு நீர்த்தாங்கிகள் இருந்தபோதும், கண்டாவளையின் குடிநீர் பற்றாக்குறையுள்ள பல கிராமங்களுக்கு கரைச்சி பிரதேசசபை, நீர் விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையிலும் தட்டுவன்கொட்டி போன்ற கிராமங்களின் தண்ணீர் தேவை பூரணப்படுத்தப்படாத நிலையாகவே காணப்படுகின்றது.

இக்கிராமத்தின் நீர் பிரச்சினை கருத்திலெடுத்துள்ள பிதேசசபை உறுப்பினர்கள் விரையில் தீர்வளிப்பதாக உறுதியளித்தனர்.

அக்கிராம மக்கள் கருத்து தெரிவிக்கும்போது, போருக்குமுன் விடுதலைப்புலிகளால் தட்டுவன்கொட்டி கிராமத்திற்கு இயக்கச்சியில் இருந்து குழாய்மூலம் சிறந்த முறையில் நீர்ப்பாசனம் செய்யப்பட்டதாகவும் அந்த திட்டத்தின் அடிப்படையில் நீர் விநியோகம் மேற்கொண்டால் கிராமத்தின் நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என குறிப்பிட்டனர்.

இதே வேளை தட்டுவன்கொட்டிக்குளம் இராணுவ ஆக்கிரமிப்பு காரணமாக பயன்தர முடியாதபடி இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்வி நிலையை பொறுத்தவரை தட்டுவன்கொட்டி பாடசாலை மாணவர்களுக்கு கணித விஞ்ஞான பாடத்திற்கு ஆசிரிய பற்றாக்குறை நிலவுவதாக அறியமுடிந்தது. தட்டுவன்கொட்டிகிராமத்தின் எதிர்பார்ப்புகளும் ஏக்கங்களும் அதிகம் என்பது அந்த மக்களின் முகங்கள் உணர்த்தியது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 14-10-2015, 02:06.56 AM ]
களனியில் அமைந்திருக்கும் தனியார் நிறுவனமொன்றின் ஊழியரின் மரண இழப்பீட்டை தொழில் ஆணையாளர் அலுவலகம் மோசடி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
[ Wednesday, 14-10-2015, 01:55.13 AM ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக கடமையாற்pய தயா மாஸ்டர் மற்றும் அந்த அமைப்பின் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றிய ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து துரித கதியில் பரிந்துரைகளை முன்வைக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய கோரிக்கை விடுத்துள்ளார்.
[ Wednesday, 14-10-2015, 01:54.03 AM ]
உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வதேச நிபுணர்கள் பங்கேற்றால் அதனை உரிய முறையில் நம்பகரமாக முன்னெடுக்க முடியும்.
[ Wednesday, 14-10-2015, 01:47.27 AM ]
ஊர்காவற்றுறைக்கு பிரசாரத்திற்கு சென்ற த.தே. கூட்டமைப்பினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உட்பட 22 பேர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையில் 3ம், 4ம்  சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
[ Wednesday, 14-10-2015, 01:37.04 AM ]
பிரபல போதைப் பொருள் வர்த்தகர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள வெலே சுதா எனப்படும் கம்பல விதானகே சமந்த என்பவர் தொடர்பில் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.
[ Tuesday, 13-10-2015 13:57:50 GMT ]
மலேசிய நாட்டிற்கு சொந்தமான பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஏவுகணை தான் என்பதை நிரூபிக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்றை நெதர்லாந்து பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ளது.
[ Tuesday, 13-10-2015 13:24:51 GMT ]
திருச்சி அருகே பேய் பிடித்ததாகக் கூறப்பட்ட இளம்பெண் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
[ Tuesday, 13-10-2015 13:35:43 GMT ]
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் யூனிஸ்கான்.
[ Tuesday, 13-10-2015 10:24:55 GMT ]
பலருக்கும் உள்ள தயக்கம் தினமும் முட்டை சாப்பிடலாமா என்பது தான்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 13-10-2015 12:05:13 ]
யார் இந்த அரசியல் கைதிகள்? தாய் நாட்டிலே அகதிகளாக இருப்பவர்களா? அல்லது தனது மண்ணையே தாரை வார்த்தவர்களா? அல்லது விடுதலை வேண்டும் என துடிக்கும் விடுதலை புலிகளா?