செய்தி
(2ம் இணைப்பு)
 
ஹிருனிகா பிரேமசந்திரவிற்கு அநாமதேய கொலை அச்சுறுத்தல்: விசாரணை மேற்கொள்ள நீதவான் பணிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012, 03:09.10 AM GMT ]
முல்லேரிய துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் கொல்லப்பட்ட பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மகளான ஹிருனிகா பிரேமசந்திர, நேற்றிரவு தமக்கு அநாமதேய கொலை அச்சுறுத்தல் விடுக்கும் தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்ததாக முறையிட்டுள்ளார்.

ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் தம்மை கொலை செய்ய திட்டம் ஒன்று உள்ளதாக அந்த தொலைபேசி குரல் கூறியதாக ஹிருனிகா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் பெயர் குறிப்பிடப்படாத தொலைபேசி அழைப்பொன்றின் மூலம் அச்சுறுத்தப்பட்டேன். என்னை கொலை செய்வதற்கு ஒப்பந்த அடிப்படையில் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளதாக அந்த குரல் எச்சரித்தது.

தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில் இது முதன் முறையாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும். அது சிலவேளைகளில் உண்மையாகவும், இருக்கலாம் என நான் நம்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுகுறித்து ஹிருனிகா காவல்துறையில் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளார். தமது வாழ்க்கைக்கு இது பெரும் அச்சுறுத்தலாக அமையும் என அவர் குறிப்பிடுகிறார்.

தற்போது நிலைமையில் தமக்கு உறுதியாக புலப்படாத ஒருவிடயம் தொடர்பாக காவல்துறையின் பாதுகாப்பை பெறுவதற்காக தாம் காவல்துறையை நாடி முறைப்பாடுகளை செய்துள்ளதாகவும் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

ஹிருணிக்காவின் முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நீதவான் பணிப்பு

கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருணிக்கா பிரேமச்சந்திர செய்துள்ள கொலை அச்சுறுத்தல் முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோனுக்கு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் பணித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் பற்றி  பிரதான நீதவானுக்கு பாதிக்கப்பட்ட தரப்பு  சட்டத்தரணிகள் தெரியப்படுத்தினர். இந்த நிலையிலேயே ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் கொலை அச்சுறுத்தல் முறைப்பாடு தொடர்பான விசாரணையை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு பிரதான நீதவான் பணித்துள்ளார்.

இம்முறைப்பாடு தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி சமர்ப்பிக்குமாறும் பொலிஸ் மா அதிபருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 26-07-2014, 04:51.12 PM ]
நாட்டுக்குள் சட்டவிரோத அகதிகள் வருவதை தடுப்பதற்காகவே 157 இலங்கை அகதிகளையும் நடுக்கடலில் தடுத்து வைத்து, விசாரணை செய்ததாக அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபாட் தெரிவித்துள்ளார்
[ Saturday, 26-07-2014, 04:20.08 PM ]
ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் வகையிலும், அவமானப்படுத்தும் வகையிலும் எத்தகைய இழிசெயல்களை எவர் மேற்கொண்டாலும் உண்மைகளை ஒருபோதும் உறங்கவைக்க முடியாது என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார்.
[ Saturday, 26-07-2014, 04:15.02 PM ]
பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய 13 பயிலுனர் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[ Saturday, 26-07-2014, 03:05.31 PM ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காப்பற்றும் இயக்கம் ஒன்று அந்த கட்சிக்குள் உருவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Saturday, 26-07-2014, 03:02.28 PM ]
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளிப்பவர்கள் இலங்கைப் படையினரால் அச்சுறுத்தப்படுவதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.
[ Saturday, 26-07-2014 11:50:43 GMT ]
ரஷ்யாவில் சிங்கம் ஒன்று குழந்தையை கடித்து இழுத்த போது குழந்தையின் தாய் குழந்தையை லாபகமாக தாவி பிடித்துள்ளார்.
[ Saturday, 26-07-2014 10:57:04 GMT ]
கார்கில் போர் வெற்றியின் 15–வது ஆண்டு நினைவு தினமான இன்று பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
[ Saturday, 26-07-2014 08:50:15 GMT ]
தனது ரசிகர் தன்னை கட்டித்தழுவ வந்ததையடுத்து அவரை காவலாளியிடம் இருந்து காப்பாற்றினார் கொலம்பிய அணியின் நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ்.
[ Saturday, 26-07-2014 12:21:42 GMT ]
வெயில் காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் பனைமரம்.
[ Saturday, 26-07-2014 17:43:32 GMT ]
சூப்பர் ஸ்டார் இதுவரை விளம்பரங்களில் நடித்ததே இல்லை என்று அனைவருக்கும் தெரியும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 26-07-2014 14:19:47 ]
ஜனாதிபதி ராஜபக்ச என்ன வீரம் பேசினாலும், உலகில் தனது உண்மை நிலை எப்படியாக உள்ளது என்பதை மிக நன்றாக அறிந்தவராக உள்ளார். இதன் காரணமாக கடந்த சில மாதங்கள், வருடங்களாக இவர்கள் உலகில் பலம் பொருந்திய நாடுகளை தமது நணபர்களாக்கும் நோக்கில் செய்யும் முயற்சிகள் எண்ணில் அடங்காது!