செய்தி
யாழ். பொது எதிரணி மேதின கூட்டத்தில் தமிழ்மக்கள் அணி திரள வேண்டும்!- மனோ கணேசன் அழைப்பு
[ சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2012, 08:31.34 AM GMT ]
அரசின் மேலாதிக்கத்திற்கு எதிரான ஜனநாயக போராட்டங்கள் தமிழ் மாகாணங்களில் வெகுவிரைவில் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்தகைய போராட்டங்களுக்கு பிள்ளையார்சுழி போடுவதாக எமது பொது எதிர்க்கட்சிகளின் மேதின கூட்டம் யாழ்ப்பாணத்தில் அமைய வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எதிர்க்கட்சிகளின் பொது மேதினகூட்டம் யாழ்நகரில் நடத்தப்படுவது தொடர்பில் தமிழ் தேசியவாத நண்பர்கள் சிலவிமர்சனங்களை முன்வைத்துள்ளார்கள்.இந்த நடவடிக்கை தமிழ் தேசியத்தை சிங்கள பெரும்பான்மை கட்சிகளின் ஆதிக்கத்தின் கீழ்கொண்டுவரும் செயல் என்றும், ஐக்கிய தேசிய கட்சிக்கு யாழ்ப்பாணத்தை திறந்து விடும் நடவடிக்கை என்றும் எம்மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

விமர்சனங்களை முன் வைக்கும் தமிழ் தேசியவாத நண்பர்களை நான் மிகவும் மதிக்கின்றேன். அவர்கள் இதை நல்ல எண்ணத்திலேயே முன்வைக்கிறார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் ஐதேக யாழ்ப்பாணத்தில் ஒரு கூட்டத்தில்,கலந்துகொள்வதன் மூலம் யாழ் மக்கள் ஐதேக விற்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு வழங்க ஆரம்பித்து விடுவார்கள் என்று நான் நம்பவில்லை. ஐதேகவிற்கு கடந்த காலங்களில் கண்ணை மூடிக்கொண்டு வழங்கிய ஆதரவை தமிழ் மக்கள் இன்று கொழும்பிலேயே வழங்கவில்லை.

தமிழ் தேசியவாத அணியினரின் ஆதரவுடனும்,முற்போக்கு சிந்தனை கொண்ட சிங்கள அணியினரின் துணையுடனும் அதை நாம் கடைசியாக கொழும்பு மாவட்டத்தில் நடந்த தேர்தலில் நிரூபித்து காட்டியுள்ளோம். இன்று கொழும்பு மாநகரசபையை எமது ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவு மூலமாகவே ஐதேக கொண்டு நடத்தும் சூழலை தமிழ் மக்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.

எனவே கொழும்பிலேயே நிலைமை இவ்விதம் இருக்கையில், யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் ஒரு மேதின கூட்டத்தை கண்டு ஐதேகவுக்கு ஆதரவு வழங்க ஆரம்பித்து விடுவார்கள் என்பது ஏற்றுகொள்ள முடியாத கருத்து ஆகும்.

விமர்சனங்களை முன்வைக்கும் தமிழ் தேசியவாத அணியினரை மதிப்பதுபோல், நான் யாழ்ப்பாணத்து தமிழர்களையும் மதிக்கின்றேன். வடமாகாண மக்கள் ஒருபோம்து தமிழ் தேசியத்திற்கு வெளியில் செல்ல மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கை.

யாழ்ப்பாணத்தில் நடக்க உள்ள மேதின கூட்டம், ஐக்கிய தேசிய கட்சி கூட்டம் அல்ல. ஐதேகவுடன் மாத்திரம் இணைந்து மேதின கூட்டம் நடத்தும் தேவை எமக்கு கிடையாது. இது ஜனநாயக மக்கள் முன்னணி, நவ சமசமாஜகட்சி, ஐக்கிய சமவுடைமை கட்சி ஆகிய கட்சிகளுடன், வடக்கின் தலைமை கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பும் பங்குபற்றும் பொது எதிரணி நிகழ்வாகும்.

தென்னிலங்கையில் நாம் நடத்திய பொது எதிர்க்கட்சி போராட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்பி கலந்துகொண்டார். இத்தகைய ஒரு பொது எதிர்க்கட்சி நிகழ்வையே நாம் தற்சமயம் வடக்கிற்கும் விரிவுபடுத்த விளைகிறோம்.

மே முதலாம் திகதி காலை 10 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கூட்டமைப்பு கிளையினரால், கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடத்தப்படும் மேதின கூட்டத்திலும், பின்னர் நல்லூர் கோயில் வீதி, கைலாசபதி பிள்ளையார் கோவிலடியில் பிற்பகல் 1.30 மணிக்கு ஊர்வலமாக ஆரம்பித்து யாழ் புனித ரோச் விளையாட்டரங்கில் நடைபெற உள்ள பிரதான பொது எதிரணி மேதின கூட்டத்திலும் நான் கலந்துகொள்ள உள்ளேன்.

இந்த இரண்டு கூட்டங்களிலும் தமிழ் மக்கள் அணி திரண்டு கலந்துகொள்ள வேண்டும் என வேண்டுகிறேன்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 20-06-2013, 04:43.14 AM ]
மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்கப் போவதில்லை என்ற இலங்கை அரசாங்கம், இந்தியாவுக்கு அறிவித்துள்ளதாக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ Thursday, 20-06-2013, 03:02.46 AM ]
நாவல திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பாரிய வெட்டுக்காயங்களுக்கு உள்ளான விரிவுரையாளர் யசோதரா கதிர்காமதம்பி சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
[ Thursday, 20-06-2013, 02:53.42 AM ]

திருகோணமலை சீனக்குடா மீன்பிடி துறைமுகத்திற்கு முன்னால் வீதியில் நடந்து சென்ற நபர் மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

[ Thursday, 20-06-2013, 02:43.36 AM ]

இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை தம்மால் எந்த அளவு மீற முடியும் என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஏற்கனவே இந்தியாவிடம் காட்டிவிட்டதாக உள்நாட்டு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

[ Thursday, 20-06-2013, 02:38.27 AM ]
13ம் திருத்தச் சட்டம் பலவந்தமான முறையில் இலங்கை மீது திணிக்கப்பட்டது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
[ Wednesday, 19-06-2013 18:43:29 GMT ]
தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 20:09:19 GMT ]
சாம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு தயாராக உள்ளோம் என்று இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன கூறியுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 20:27:33 GMT ]
தனுஷ் நடித்துள்ள ராஞ்சனா என்ற இந்திப் படமும், மரியான் படமும் இம்மாதம் 21ம் திகதி வெளியிடலாமென அப்படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:35:13 ]
மாயமான் வேட்டை போலாகிவிட்டது 13 வது திருத்தச் சட்டத்துள் தீர்வினைத் தேடுவது. பூச்சியத்துள் புள்ளியைத் தேட முடியாது. இது நிரந்தரமான அரசியல் தீர்விற்கான ஆரம்பப்புள்ளியுமல்ல , முற்றுப்புள்ளியுமல்ல என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதை, இந்த வாரம் மந்திரிசபையயில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களே உறுதிப்படுத்துகின்றது.