செய்தி
இலங்கையின் மனிதஉரிமை மீறல்கள்! ஆதாரமிருந்தால் மட்டுமே விசாரணையாம்! இலங்கை அரசாங்கம்
[ சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2012, 11:33.07 AM GMT ] [ புதினப்பலகை ]
மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றமிழைத்தவர்கள் நீதிமன்றங்களின் மூலம் தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இலங்கை அமைச்சரவையின் மூத்த சட்ட ஆலோசகரான மொகான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவிடம் அளிக்கப்பட்ட அனைத்து மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தப்படும். இதன்மூலம் குற்றமிழைத்தவர்கள் என்று கண்டறியப்படும் குற்றவாளிகள்  தண்டிக்கப்படுவார்கள்.

ஐ.நா மனிதஉரிமை பேரவைக் கூட்டத்தொடரில் பல்வேறு அரசசார்பற்ற அமைப்புகள் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் பல இடம்பெற்றிருப்பதாகவும், அவற்றை நிரூபிக்கும் ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் குற்றம்சாட்டின.

இலங்கை அரசுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட தாக்கல் இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று, அரசதரப்பில் கூறப்பட்டது.

ஆனாலும், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மனிதஉரிமை மீறல்கள் அனைத்தையும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மூலம் தனித்தனியாக, ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்கள் குற்றமிழைத்திருக்கிறார்களா என்பதைக் கண்டறிந்து, அதற்கான ஆதாரங்கள் இருப்பின் அவர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கும் இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர்.

இலங்கைப் படையினர் மனிதஉரிமை மீறில்களில் ஈடுபட்டதற்கோ, பொதுமக்களைத் துன்புறுத்தியதற்கோ ஆதாரங்கள் இருந்தால், இலங்கை இராணுவத் தளபதிக்கு எவரும் நேரடியாக முறைப்பாடு செய்யலாம்.

அதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு, அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையானால் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும்.

ஆதாரமற்ற வெறும் குற்றச்சாட்டுகளின் மீது இலங்கை அரசாங்கத்தினால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்டு மூன்று மாதங்கள் தான் ஆகியுள்ளன.

இந்தநிலையில், இலங்கை அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளது என்று குற்றம்சாட்டுவது நியாயமற்றது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 12:18.29 AM ]
இலங்கையிலிருந்து தமிழகம் மண்டபம் முகாமில் உள்ள தனது மனைவி மற்றும் புதல்விகளை சந்திக்க சென்ற இலங்கைத் தமிழர் அந்த முகாமிற்கு அருகாமையில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மரணமானார்.
[ Wednesday, 19-06-2013, 12:09.23 AM ]
தங்காலையில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான இறைச்சிக் கடையொன்று பௌத்த பிக்குகள் உள்ளிட்ட குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 19-06-2013, 12:00.25 AM ]
இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடாது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாக இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
[ Tuesday, 18-06-2013, 11:35.13 PM ]
மாயமான் வேட்டை போலாகிவிட்டது 13 வது திருத்தச் சட்டத்துள் தீர்வினைத் தேடுவது. பூச்சியத்துள் புள்ளியைத் தேட முடியாது. இது நிரந்தரமான அரசியல் தீர்விற்கான ஆரம்பப்புள்ளியுமல்ல , முற்றுப்புள்ளியுமல்ல என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதை, இந்த வாரம் மந்திரிசபையயில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களே உறுதிப்படுத்துகின்றது.
[ Tuesday, 18-06-2013, 11:17.45 PM ]
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.
[ Tuesday, 18-06-2013 19:56:16 GMT ]
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் இவ்வளவு காலமும் அங்கு முகாமிட்டு தலிபான் தீவிரவாதிகளை முற்றிலுமாக விலக்கி, பாதுகாப்பு பொறுப்புக்களை அந்த நாட்டின் ராணுவத்திடம் ஒப்படைத்தது.
[ Tuesday, 18-06-2013 13:04:07 GMT ]
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் மோசடி வழக்கில் பிரபல மலையாள நடிகை சாலு மேனன் சிக்குகிறார்.
[ Tuesday, 18-06-2013 21:06:02 GMT ]
ஒப்புதல் வாக்குமூலம் தருமாறு பொலிசார் கட்டாயப்படுத்துவதாகவும், கடுமையாக சித்ரவதை செய்வதாக டெல்லி நீதிமன்றத்தில் புக்கிகள் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
[ Tuesday, 18-06-2013 13:20:08 GMT ]
செம்பருத்தியின் பூக்களில் வைட்டமின் சி மற்றும் தாதுப் பொருட்கள் அதிகம் அடங்கியுள்ளதால், உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
[ Tuesday, 18-06-2013 13:26:49 GMT ]
கொலிவுட்டில் தனுஷ், பார்வதி ஜோடியாக நடிக்கும் ‘மரியான்’ படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.