செய்தி
 Photo
மே தின ஏற்பாட்டை செய்ய வடக்கை நோக்கி பயணித்த ரணில்
[ சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2012, 05:52.30 PM GMT ]
மே தின ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கென இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று கிளிநொச்சி நகரப்பகுதி, மற்றும் பூநகரி பகுதிகளுக்கு விஜயம் செய்து மக்களுடன் கலந்துரையாடியதுடன், வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.

இன்று காலை யாழ்.சென்ற ரணில், பூநகரி பகுதிக்குச் சென்று நல்லூர், நாகதேவன்துறை, போன்ற பகுதி மக்களுடன் கலந்துரையாடல்களை செய்தார். இதன்போது தண்ணீர் பிரச்சினை, வைத்தியத்தேவை போன்றன குறித்து பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.

இதற்கு அந்த விடயங்கள் குறித்து தான் பாராளுமன்றில் அரசிடம் கேள்வியெழுப்புவதாக தெரிவித்திருந்தார். மேலும் கிளிநொச்சி நகருக்குச் சென்றிருந்த ரணில் பேருந்து நிலையத்தில் மக்களுடன் கலந்துரையாடினார்.

இதன்போதும் மக்களின் குறைகள் குறித்து கேட்டறிந்து கொண்ட ரணில் காணாமல்போனோர் குறித்தும் கேள்வியெழுப்பினார், எனினும் அதற்கு மக்கள் பதிலளிக்கவில்லை, இதனையடுத்து அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இதன் பின்னர் கிளிநொச்சி நகரிலுள்ள கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்றிருந்த பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டுவிட்டு யாழ்.வந்த ரணில் நாளை தீவுப்பகுதிகளுக்குச் செல்லவுள்ளதாகவும் அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இன்றைய விஜயத்தின்போது, மே தினத்தின் அவசியம் குறித்தும், அதில் சகல வேற்றுமைகளையும் மறந்த நிலையில், நியாயத்திற்காக ஒன்றுபடவேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 18-06-2013, 05:17.15 AM ]
பாடசாலை ஆசிரியையை முழங்காலில் நிறுத்தி தண்டனை வழங்கிய வட மேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமார ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
[ Tuesday, 18-06-2013, 04:34.20 AM ]

கொழும்பு பல்கலைக்கழக கட்டடத்திலிருந்து கீழே குதித்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவ பீட மாணவி உயிரிழந்துள்ளார்.

[ Tuesday, 18-06-2013, 04:18.29 AM ]

13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

[ Tuesday, 18-06-2013, 03:08.14 AM ]

யாழ்ப்பாணம் அல்வாய் பகுதியில் இரண்டு வயதுக் குழந்தையை பணயம் வைத்து, 22 பவுண் நகை மற்றும் ஒரு லட்சத்திற்கு அதிகம் பெறுமதியான இரண்டு கையடக்கத் தொலைபேசி, 60 ஆயிரம் ரூபா பணம் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

[ Tuesday, 18-06-2013, 02:33.16 AM ]
ஐக்கிய தேசியக் கட்சியின் சில முக்கியஸ்தர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
[ Tuesday, 18-06-2013 03:11:29 GMT ]
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் போராளிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், இதுவரை 93,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
[ Tuesday, 18-06-2013 03:21:16 GMT ]
வட மாநிலங்களில் சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு வட மாநிலங்களில் இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர்.
[ Tuesday, 18-06-2013 04:17:49 GMT ]
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரையடுத்து, மேற்கிந்திய தீவுகளில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
[ Tuesday, 18-06-2013 01:56:47 GMT ]
கணனிப் பாவனை அதிகரிக்கு ஏற்ப அவற்றிற்கு ஊறு விளைவிக்கும் வைரஸ் தாக்கங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
[ Monday, 17-06-2013 19:05:12 GMT ]
தமிழில் சசி இயக்கத்தில் வெளியான பூ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் மரியான் பார்வதி.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 16-06-2013 04:00:13 ]
இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.