செய்தி
இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு நாளை போராட்டம்! வைகோ அறிவிப்பு!
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2012, 01:27.39 AM GMT ]

இலங்கையில் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை ஏப்ரல் 30-ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை, இலங்கை அரசு தாக்குவது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

ஏப்ரல் 20-ம் தேதி மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ள என்ற இடத்தில் உள்ள மசூதியை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் மற்றும் சிங்கள காடையர்கள்  முற்றுகையிட்டு ஆயுதங்களால் இடித்துள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஏப்ரல் 30-ம் தேதி சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி நடத்த உள்ளது.

இந்தப் போராட்டத்தில் மதிமுகவும் பங்கேற்கும் என்று  வைகோ கூறியுள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 05-07-2015, 09:12.16 AM ]
முன்னாள் ஜனாதிபதிக்கு வேட்பு மனு வழங்குவதற்கு தீர்மானித்ததற்கான காரணம் ஐக்கிய தேசியக் கட்சி 3ல் 2 அதிகாரம் பெற்றுக்கொள்வதனை தடுப்பதற்காகவே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
[ Sunday, 05-07-2015, 09:07.54 AM ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தன் மூலம் கடந்த ஜனவரி 8ம் திகதி நாட்டு மக்கள் வழங்கிய ஆணை சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
[ Sunday, 05-07-2015, 08:46.04 AM ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கருத்து வெளியிடுவதனை நிறுத்திக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக சேறு பூசும் பிரச்சாரங்களை ஆரம்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி தனது குழுவுக்கு அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
[ Sunday, 05-07-2015, 08:38.10 AM ]
யாழ்.மாவட்டத்தில் 5 இலட்சத்து 29 ஆயிரத்து 239 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
[ Sunday, 05-07-2015, 08:36.06 AM ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி ஒருபோதும் தாம் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துக் கொள்ளப் போவதில்லை என அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன மற்றும் பிரதியமைச்சர் சாந்த பண்டார ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
[ Sunday, 05-07-2015 09:05:41 GMT ]
நைஜீரியாவில் கடந்த இரண்டு நாட்களாக போகோஹராம் தீவிரவாதிகள் மேற்கொண்டு வரும் தாக்குதலில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
[ Sunday, 05-07-2015 06:41:49 GMT ]
தஞ்சாவூரைச் சேர்ந்த ஒருவர் கை, கால்கள் செயலிழந்த மனைவியைக் கருணைக் கொலை செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
[ Sunday, 05-07-2015 07:27:30 GMT ]
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்கள் எடுத்தது.
[ Sunday, 05-07-2015 08:12:52 GMT ]
கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 05-07-2015 01:45:50 ]
ஏழு மாதங்களுக்கு முன்னர் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வந்திருக்கிறார்.