செய்தி
சீனா, ரஸ்யா வெளியேற்றம்! ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கைக்கு மேலும் நெருக்கடி
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2012, 01:35.42 PM GMT ]
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவு வழங்கிய சீனா, ரஷ்யா உட்பட்ட நான்கு முக்கிய நாடுகள் ஜுன் மாதத்துடன் விலகிக் கொள்வதால், நவம்பர் 1ம் நாள் நடைபெறவுள்ள, மனித உரிமைகள் நிலை குறித்த மீளாய்வுக் கூட்டத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்று இலங்கை அரசாங்கம் கவலை கொண்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் மட்டுமே உறுப்புரிமை வகிக்க முடியும் என்பதால், சுழற்சி முறையில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி இந்த ஆண்டு யூன் மாதத்துடன் ரஸ்யா, சீனா, சவூதி அரேபியா, பங்களாதேஸ் ஆகிய நாடுகளின் பதவிக்காலம் முடிவடைகிறது.

இவற்றில் ரஸ்யாவும், சீனாவும் இலங்கைக்கு மிகவும் நெருக்கமான நாடுகளாகும்.

கடந்தமாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தைத் தோற்கடிப்பதற்கு இந்த நாடுகள் கடுமையாக முயன்றன.

குறிப்பாக சீனா, இந்தத் தீர்மானத்தைத் தோற்கடிப்பதற்கான பரப்புரைகளிலும் இறங்கியிருந்தது.

இந்தநிலையில் வரும் யூன் மாதத்துடன் ரஸ்யா மற்றும் சீனா உள்ளிட்ட இலங்கைக்கு ஆதரவான நான்கு நாடுகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்த விலகிக் கொள்வது  இலங்கையை கவலை கொள்ளச் செய்துள்ளது.

ஜெனிவாவில் வரும் நவம்பர் 1ம் நாள் இலங்கை தொடர்பான மீளாய்வு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்த நாடுகளின் ஆதரவைப் பெறமுடியாத நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நாடுகள் மீளாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது போவது  இலங்கையை கவலையில் ஆழ்த்தியுள்ளது என்றும், ஆனாலும் இந்த நாடுகள் வெளியில் இருந்து ஆதரவளிக்கும் என்று நம்புவதாகவும் இலங்கை அரசாங்க வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 26-05-2013, 02:15.24 AM ]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலை புலம்பெயர் தமிழர்களே தயாரித்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலேய இவ்வாறு தயாரிக்கப்படுகின்றது.

[ Sunday, 26-05-2013, 02:13.44 AM ]

இலங்கையின் சிரேஸ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான தமரா குணநாயகத்தை மீளவும் ஜெனீவா அனுப்பி வைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

[ Sunday, 26-05-2013, 01:51.10 AM ]

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மூன்று இடதுசாரி அமைச்சர்கள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

[ Sunday, 26-05-2013, 12:44.58 AM ]
சர்வதேச திரைப்பட விழாக்களில் முக்கியமான (Shanghai International Film Festival இல் கனடா, ஈழத்தமிழ் கலைஞர் லெனின்.எம்.சிவம் இயக்கிய A Gun & A Ring எனும் திரைப்படமும், புறுகினா பசோ நாட்டில் இடம்பெறுகின்ற Ciné Droit Libre de Ouagadougou விழாவில் பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழ்கலைஞர் விஜிதன் சொக்கா ஒளி-ஒலி பதிவு செய்த journalistes-vos-papiers ஆவணப்படமும் கலந்து கொள்கின்றன.
[ Saturday, 25-05-2013, 06:03.35 PM ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.
[ Sunday, 26-05-2013 02:00:40 GMT ]
ஜப்பானில் 6 மாதத்துக்கு முன்பு நடந்த தேர்தலில் ஷின்சோ அபே பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இவருக்காக அரசு சார்பில் தனி வீடு ஒதுக்கப்பட்டது.
[ Saturday, 25-05-2013 12:10:52 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
[ Sunday, 26-05-2013 01:25:57 GMT ]
ஐ.பி.எல். கிரிக்கெட் சுற்றுத்தொடரில் இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவானது.
[ Saturday, 25-05-2013 07:23:30 GMT ]
அப்பிளின் Mac, iOS இயங்குதளங்களிலும் சில இணைய பக்கங்களிலும் பயன்படுத்தப்படும் Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 19:40:13 GMT ]
ஸ்ரீகாந்த், சுனைனா நடிக்கும் நம்பியார் என்ற படத்தில் சந்தானம் இரண்டாவது ஹீரோவாக  நடிக்கின்றார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 25-05-2013 18:03:35 ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.