செய்தி
யாழ்ப்பாணத்து தமிழ் மக்களை பயங்கரவாதிகளாக காட்ட அரசு முற்படுகிறது!- ரணில்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2012, 02:35.18 PM GMT ]
யாழ்ப்பாணத்து தமிழ் மக்களை பயங்கரவாதிகளாக காட்ட அரசு முற்படுகின்றது என யாழ். நெடுந்தீவில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டினார்.

யாழ்.தீவகத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட ஐக்கிய தேசிய கட்சிக் குழுவினர், தீவக மக்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அதன் போது அந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போது ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாத அரசினால் தமிழ் மக்களுக்கு நிச்சயம் தீர்வுத்திட்டத்தை முன்வைக்க முடியாது. நெடுந்தீவில் நடைபெற்றுவரும் நீதிக்குப் புறம்பான செயல்களினால் தமிழ் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மக்களின் பேச்சுரிமையைப் பறித்து அராஜகம் செய்கிறது அரசுடன் இயங்கும் ஈ.பி.டி.பி. கட்சி. நெடுந்தீவில் நடைபெறும் படுகொலைகள், கடத்தல்கள் நீதிக்குப் புறம்பான சட்ட விரோத செயற்பாடுகள் இவை நீக்கப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் ஏற்படுத்த வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி நடைபெறுகின்றது என அரசு சொல்கிறது. வந்து பார்த்தால் அது ஆமை வேகத்தை விட சற்றுக் குறைவாக இருக்கிறது. இந்த மக்களின் அபிவிருத்தியில் அவர்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அபிவிருத்திப் பணி செய்யப்பட வேண்டும்.

ஜெனீவாவில் கூட நெடுந்தீவில் நடைபெறும் நீதிக்குப் புறம்பான சட்ட விரோத படுகொலைகள் பற்றி விவாதிப்பதற்கு அரசு சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறது. நெடுந்தீவு மக்கள் மிகவும் பயப்பீதியுடன் வந்திருக்கிறார்கள். தங்களுக்கு ஏதும் நடைபெறும் என அச்சப்படுகிறார்கள். அவர்கள் என்னுடன் பேசுவதற்கு பயப்படுகிறார்கள்.

நான் நெடுந்தீவுக்கு வருவதை அறிந்தும் மக்களை எனது கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என ஈ.பி.டி.பி. கட்சியினரால் எச்சரிக்கப்பட்டு இருக்கின்றனர். என்னைச் சுற்றி மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் சுற்றிச் சுற்றி வந்ததை நான் அவதானித்தேன்.

எனக்கு செல்வதற்கு வாகனம் கொடுக்கக்கூடாது என இங்குள்ள அரசியல் கட்சியினர் சொன்னதினால் நான் சிறிய லான்ட்மாஸ்டரில் இந்த மக்களைச் சந்திப்பதற்கு நெடுந்தீவுக்கு வந்தேன்' என்றார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 25-01-2015, 03:03.23 AM ]
புதிய அரசியல் கூட்டமைப்பிற்கு தலைமை தாங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
[ Sunday, 25-01-2015, 02:49.02 AM ]
சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த விசேட நிபுணர் குழு ஒன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
[ Sunday, 25-01-2015, 02:46.32 AM ]
ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
[ Sunday, 25-01-2015, 02:41.01 AM ]
அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளது.
[ Sunday, 25-01-2015, 02:34.18 AM ]
கடந்த அரசாங்கம் 1200 பில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக புதிய அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
[ Saturday, 24-01-2015 07:42:44 GMT ]
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் (நாசா) சோலார் டைனமிக்ஸ் கண்காணிப்பு செயற்கைக்கோள் எடுத்த சூரியனின் 10 கோடியாவது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
[ Saturday, 24-01-2015 06:11:59 GMT ]
திருப்பூர் மாவட்டத்தில் குடிகார தந்தை ஒருவர் இரண்டு வயது குழந்தையிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Saturday, 24-01-2015 08:31:56 GMT ]
முத்தரப்பு ஒருநாள் தொடரில் அடுத்தடுத்த தோல்விகளால் இந்திய அணி இக்கட்டனான நிலையில் இருக்கிறது.
[ Saturday, 24-01-2015 05:27:50 GMT ]
இயற்கையின் அருட்கொடைகளில், எளிதில் கெட்டுப் போகாத அற்புதமான பொருட்களில் ஒன்று தான் தேன்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Saturday, 24-01-2015 15:47:25 ]
எக்கட்சியினாலும் வீழ்த்த முடியாதளவு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் இலங்கையை ஆட்சி செய்து கொண்டிருந்த மகிந்த ராஜபக்ஸவின் பலத்தினை மிகவும் குறுகிய காலப்பகுதியினுள் தவிடு பொடியாக்கி, ஆட்சி பீடத்திலிருந்து மகிந்தரவ வெளியேற்றி ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன வெற்றி வாகை சூடி கொண்டார்.