செய்தி
சுயாதீன தேர்தல் ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும்: ஐ.தே.க
[ சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2012, 02:09.29 AM GMT ]
இலங்கையில் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு நிறுவப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட வேண்டியது அவசியமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜெனீவா மனித உரிமை பேரவை அமர்வுகளில் அரசாங்கம் அடைந்த தோல்வியை ஈடு செய்யும் நோக்கில் சில மாகாண சபைகளுக்கான தேர்தல்களை துரிதப்படுத்த முயற்சிக்கப்படுகின்றது.

வடமத்திய, கிழக்கு மற்றும் சபரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான தேர்தல்களை விரைவாக நடாத்த அரசாங்கம் ஆர்வம் காட்டி வருகின்றது.

சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்படும் வரையில் தேர்தல்கள் பக்கச்சார்பின்றி நடைபெறும் என்பதனை நம்ப முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜெனீவா பிரச்சினை காரணமாக தேர்தல்கள் நடத்தப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 24-05-2013, 09:14.25 PM ]
நாளை சுவிஸில் தமிழ் பெண்களின் அழகுராணி போட்டி நடைபெறவுள்ளது. இதில் பல சுவிஸ் நாட்டு தமிழ் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
[ Friday, 24-05-2013, 05:58.20 PM ]

முல்லைத்தீவு பனிச்சங்குளம் பாலத்திற்குள் இருந்து துவிச்சக்கர வண்டி ஒன்றுடன் இரண்டு படையினரின் உடலங்கள் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

[ Friday, 24-05-2013, 05:55.17 PM ]
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் நிறைவடைந்த நிலையில் வடபகுதியின் மனிதாபிமான உதவிக்கான தேவைகள் குறித்து ஐநாவின் முக்கிய அதிகாரி ஒருவர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை இன்று கிளிநொச்சியில் சந்தித்து உரையாடியிருக்கின்றார்.
[ Friday, 24-05-2013, 03:31.36 PM ]
கடந்த 18ம் நாள் காலி முகத்திடலில் நடைபெற்ற போர் வெற்றி விழா அணிவகுப்பின் போது, சிறிலங்கா கடற்படைப் படகு ஒன்று கடலில் மூழ்கிய சம்பவம் தொடர்பாக, இலங்கை கடற்படைத் தளபதியிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
[ Friday, 24-05-2013, 03:01.54 PM ]

தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

[ Friday, 24-05-2013 19:34:02 GMT ]
அபுதாபியின் மலைப்பிரதேசமான அல்- பாயாவின் பாலைவனப் பகுதியில் சிக்கிக்கொண்ட இரண்டு சுற்றுலாப் பயணிகளை, துபாய் காவல்துறையின் விமானப்பிரிவு காப்பாற்றியது.
[ Friday, 24-05-2013 10:45:18 GMT ]
முறைகேடுகளை தடுக்க ராணுவ தளவாடங்கள் கொள்முதலை வெளிப்படையாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
[ Friday, 24-05-2013 19:54:44 GMT ]
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர்-2 சுற்றில் மும்பை இண்டியன்ஸ் அணி, ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை எதிர்கொண்டு 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Friday, 24-05-2013 08:46:56 GMT ]
வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி தெரியாது.
[ Friday, 24-05-2013 13:33:12 GMT ]
கொலிவுட்டில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால் தற்போது, தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக காணப்படுகிறார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.