செய்தி
யாழ்ப்பாணத்தில் காணாமல்போன லலித், குகன் புறக்கோட்டை 6ஆவது மாடியில் தடுத்து வைப்பு! தகவல்கள் அம்பலம்
[ சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2012, 01:29.08 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமற்போன, மக்கள் போராட்ட அமைப்பின் செயற்பாட்டாளர்களான லலித்குமார் மற்றும் குகன் ஆகியோர் பொலிஸ் புனர்வாழ்வுப் பிரிவு கட்டத்தின் 6 வது மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புறக்கோட்டை மன்னிங் சந்தைக்கு எதிரே இந்த புதிய கட்டடம் அமைந்துள்ளது. இலங்கைப் பொலிஸ் புனர்வாழ்வுப் பிரிவுக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் கொம்பலவிதான பொறுப்பாக இருந்தபோது இந்தக் கட்டடம் கட்டப்பட்டது.

பொலிஸாரின் புனர்வாழ்வுக்காக பல மில்லியன் ரூபா செலவிட்டுக் கட்டப்பட்ட இந்தக் கட்டடம், தற்போது இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலில் கடத்தப்படுவோருக்கும் கைதிகளுக்கும் சித்திரவதை செய்யப்படும் கூடமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த ஆறு மாடிக் கட்டடத்தின் கீழ்த்தளம் கொழும்பு பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்கவின் பொறுப்பில் உள்ளது. குறிப்பிட்ட சில பொலிஸார் மட்டும் தான் இந்தக் கட்டடத்துக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டத்தைச் சூழ சிறப்பு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெரேரா என்ற பொலிஸ் ஆய்வாளரின் கீழ் இந்த சித்திரவதைக் கூடம் செயற்படுகிறது. பொலிஸ் துணைச்சேவையில் ஒரு துணை ஆய்வாளராக இணைந்த இவர், இலங்கை பாதுகாப்புச் செயலாளரால் இரண்டு ஆண்டுகளில் நிரந்தர சேவைக்கு மாற்றப்பட்டு, ஆய்வாளராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளரின் சிறப்பு பிரிவில் முக்கியமான ஒருவராக உள்ள இவர், கடந்த சில மாதங்களில் இடம்பெற்ற ஆட்கடத்தல்களுடன் தொடர்புடையவராவார்.

கடந்த டிசெம்பர் மாதம் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட லலித்குமார், குகன் ஆகியோர் காவல்துறை புனர்வாழ்வு கட்டடத்தின் 6 ஆவது மாடியில் உள்ள அறை ஒன்றில் இந்த ஆய்வாளரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டபோதும், அரசாங்கம் இதுபற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்று கூறி வருகிறது. இவர்கள் கொல்லப்பட்டு விட்டதாக வெளியான தகவல்கள் தவறு. இவர்கள் இருவரும் பொலிஸ் புனர்வாழ்வு கட்டடத்தின் 6ஆவது மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கட்டடத்தின் வாகனத் தரிப்பிடத்துக்கு அருகேயுள்ள இரகசிய அறை ஒன்றில் வைத்து தான் பிறேம்குமார் குணரட்ணம் மற்றும் திமுது ஆட்டிக்கல ஆகியோரும் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை அடையாளம் காட்டுமாறு லலித் மற்றும் குகன் ஆகியோரிடம் கேட்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர்கள் வெலிசறையில் உள்ள சிறிலங்கா கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று ‘லங்கா நியூஸ்வெப்‘ இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவலில், குறிப்பிடப்பட்டுள்ளது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 22-05-2013, 05:34.40 PM ]
மட்டக்களப்பு புல்லுமலை, உறுகாமக் கிராமங்களுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக வருகை தந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையிலான குழுவினரிடம் துண்டுப் பிரசுரம் கையளித்த இருவரை இலங்கை புலனாய்வுத்துறையினர் கைது செய்துள்ளனர்.
[ Wednesday, 22-05-2013, 04:14.38 PM ]
பிரான்ஸின் கடற்படைக் கப்பல் 'ஜாக்குஸ் கார்டியர்"  இன்று புதன்கிழமை பிரான்ஸ் நாட்டுக்  கடற்படையினர் 53 பேருடன் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
[ Wednesday, 22-05-2013, 04:10.04 PM ]
மாற்றுத் திறனாளிகளிற்கான உதவு தொகை வழங்கும் நிகழ்வு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் கடந்த 19ம் திகதி  இடம்பெற்றுள்ளது.
[ Wednesday, 22-05-2013, 03:54.36 PM ]

போர்க் குற்றவாளியும் தற்போதைய வடமாகாண ஆளுநருமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, இணைய ஊடகவியலாளர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று மிகக் கேவலமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி திட்டியுள்ளமையானது குடாநாட்டு ஊடகவியலாளர்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

[ Wednesday, 22-05-2013, 03:39.55 PM ]

அவுஸ்திலேரலியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக திகழ்வதாகத் தெரிவித்து  கால வரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த  இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

[ Wednesday, 22-05-2013 17:51:25 GMT ]
போதை பொருள் கடத்தல், கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுதல் போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 60 இந்தியக் கைதிகள் தாய்லாந்து சிறைகளில் உள்ளனர்.
[ Wednesday, 22-05-2013 11:38:24 GMT ]
சினிமா, கிரிக்கெட்டிற்கு அடுத்தபடியாக அரசியல்வாதியாகவும் வலம் வரவிருக்கிறார் நடிகை ப்ரீத்தி ஜிந்தா.
[ Wednesday, 22-05-2013 18:32:41 GMT ]
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டு 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Wednesday, 22-05-2013 07:38:03 GMT ]
கடல் நீரில் இருந்து யுரேனியம் தயாரிக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
[ Wednesday, 22-05-2013 11:53:12 GMT ]
கமல்ஹசான் தயாரித்து இயக்கி நாயகனாக நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 22-05-2013 00:33:43 ]
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.