செய்தி
அதிகரித்துவரும் படையினரின் அட்டகாசம்! அச்சத்தில் மூழ்கியுள்ள முல்லைத்தீவு மக்கள்
[ செவ்வாய்க்கிழமை, 03 ஏப்ரல் 2012, 02:36.03 PM GMT ]
முல்லைத்தீவு மாவட்டம் - சறாட்டிகுளம் கிராமத்தில், ஆண் துணையில்லாத வீடுகளில் இராணுவத்தினரின் தொல்லை அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள பிரதேச மக்கள் நேற்றிரவும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பாண்டியன்குளம், நெட்டாங்கண்டல் பிரதேசங்களிலிருந்து 6 கிலோமீற்றர் காட்டுப் பகுதிக்கு அப்பாலுள்ள இந்தக் கிராமத்தில், சுமார் 70 குடும்பங்கள் வரை மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் மற்றும் வெளித்தொடர்புகள் அதிகமில்லாத இந்தக் கிராமத்தில், அண்மைக்காலமாக இவ்வாறான சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுகின்றது.

நேற்றிரவும் இக்கிராமத்திலுள்ள இளம் விதவைப் பெண்ணொருவரின் குடிசைக்குள் சீருடையுடன் சிப்பாயொருவர் புகுந்துள்ளார். இதனை அவதானித்த குறித்த பெண் கூச்சலிட்டுள்ளார்.

இதனையடுத்து, எரிந்து கொண்டிருந்த விளக்கை தூக்கி எறிந்துவிட்டு, சிப்பாய் காட்டுப்பக்கம் ஓடிச்சென்று மறைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து பலதடவை பொலிஸாருக்கும், இராணுவத்தின் தலைமை அதிகாரிக்கும் தெரியப்படுத்திபோதும், இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை என அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சம்பவங்களினால், இரவு வேளைகளில் மிகவும் அச்சத்துடனே வாழவேண்டியுள்ளதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 22-04-2015, 03:15.57 AM ]
இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[ Wednesday, 22-04-2015, 03:09.22 AM ]
ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
[ Wednesday, 22-04-2015, 03:02.07 AM ]
19ம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்பிக்கப்படுவது தாமதமாவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
[ Wednesday, 22-04-2015, 02:39.13 AM ]
வலி. வடக்கு மீள்குடியேற்றத்திற்காக நடக்கும் எல்லா கவனயீர்ப்பு போராட்டங்களிலும் கலந்து கெொண்டிருக்கிறோம். இடம்பெயர்ந்து 25 வருடங்கள் சகலவற்றையும் இழந்து 15ற்கும் மேற்பட்ட வாடகை வீடுகளில் வாழ்ந்து உழைக்கும் சம்பளம் வீட்டு வாடகைக்கே போதாத நிலையில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதித்த உடனேயே எங்கள் சொந்த மண்ணுக்கு வந்துவிட்டோம்.
[ Wednesday, 22-04-2015, 02:23.18 AM ]
அரசியல்வாதிகள் அல்லாத, மீனவர்கள் அல்லாத மாணவர்களது வருகை இது! இலங்கை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் விமான நிலையச் செயல்​பாடுகள் குறித்த பயிற்சிக்காக சென்னை சென்றிருந்தனர்.
[ Tuesday, 21-04-2015 13:46:55 GMT ]
எகிப்து நாட்டின் முன்னாள் அதிபரான முகமது மொர்ஸிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
[ Tuesday, 21-04-2015 13:43:39 GMT ]
பஞ்சாபை சேர்ந்த ஆனந்த் அர்னால்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் வீழ்த்தப்பட்டாலும் விடாமுயற்சியால் 3 முறை தேசிய ஆணழகனான தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
[ Wednesday, 22-04-2015 03:16:14 GMT ]
தென் ஆப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்பது எனது கனவாகும் என அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 21-04-2015 10:55:15 GMT ]
உடலில் உள்ள பிரச்னைகளில் மிக மோசமானதும், சகிக்க முடியாததும் என்றால் அது வாய் துர்நாற்றம் தான்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 21-04-2015 13:38:45 ]
இலங்கை நாடு பௌத்தத்தை முதன்மைப்படுத்துகின்ற நாடு என்பதை நாம் இங்கே பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தோம்.