செய்தி
யாழ். மாணவர்களுக்கு இரவு வகுப்புக்கள் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றதல்ல! பெற்றோர் கவலை
[ சனிக்கிழமை, 30 யூன் 2012, 07:19.33 AM GMT ]
யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இரவு நேரங்களில் மேலதிக வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன. இரவு 7.50 மணி வரை நடைபெறும் இவ்வாறான வகுப்புக்கள் நடாத்தப்படுவது தற்போது குடாநாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்றதொன்றல்ல என பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த மேலதிக வகுப்புக்களிற்கு சகல மாணவர்களும் சமூகமளிக்க வேண்டும் எனவும் சமூகமளிக்காதவர்களிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்லூரி அதிபரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான இரவு நேர வகுப்புக்கள் நடாத்தப்படுவது தற்போது குடாநாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்றதொன்றல்ல. குடாநாட்டில் தற்போது கலாசார சீரழிவுகள் மிகவும் மலிந்து காணப்படுகின்றது.

மதுபாவனை, பாலியல் வன்புணர்வுகள், இளவயது கர்ப்பம், சட்டவிரோத கருக்கலைப்புக்கள் என்பன நாளாந்தம் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. சுகாதார வைத்தியத் துறையின் தகவல்படி அண்மைக்காலத்தில் இளவயது கர்ப்பம்,கருக்கலைப்புக்கள் என்பன பாடசாலை மாணவியரையே அதிகளவில் தாக்கியுள்ளது.

எனவே இரவு நேர வகுப்புக்கள் நடாத்தப்படுவது இவ்வாறான சம்பவங்கள் மேலும் நடைபெறுவதற்கு வழிகோலுவதாக அமையும்.

மாணவிகள் மட்டுமல்ல மாணவர்களும் தவறான பாதையில் செல்வதற்கு இவை அடித்தளமிடுகின்றன. யாழ் குடாநாட்டுப் பெற்றோராகிய நாம் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கின்றோம். ஆனால் எமது பிள்ளைகளின் வாழ்க்கை, எதிர்காலம் என்பன அதை விட முக்கியம்.

பிள்ளைகளை அனுப்பிவிட்டு நாம் ஏக்கத்துடன் இருக்க வேண்டியுள்ளது. இரவு நேரத்தில் பெற்றோர் வீதிகளில் காத்திருக்க வேண்டியுள்ளது. எல்லா பெற்றோருக்கும் பிள்ளைகளை கூட்டிச் சென்று அழைத்து வரக்கூடிய வசதிகள் இல்லை. தூர இடங்களில் இருந்து வரும் மாணவர்கள் இதனால் மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள்.

யாழ். மாநகர முதல்வர் அண்மையில் தனியார் கல்வி நிலையங்களில் மாலை 5.30 மணிக்குப் பின்னர் வகுப்புக்கள் நடாத்தப்படக் கூடாது என அறிவுறுத்திய நிலையில் பாடசாலைகளில் இரவு நேர வகுப்புக்கள் நடாத்துவது பொருத்தமானதா?

மாணவர்களின் நன்மை கருதியே முதல்வர் இந்த முடிவை எடுத்தார். தனியார் கல்வி நிலையத்திற்கு ஒரு நீதி. பாடசாலைக்கு வேறொரு நீதியா? எல்லாம் எமது பிள்ளைகளே. எனவே
பாடசாலையிலும் இரவு நேர வகுப்புக்கள் நடாத்தப்படக் கூடாது.

அண்மையில் பிரதேச செயலர் ஒருவர் மாலை 5.30 மணிக்கு பின்னர் வகுப்புக்கள் நடாத்தும் கல்வி நிலையங்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

பாடசாலைகளில் மேலதிக வகுப்புக்கள் வைப்பது வரவேற்கத்தக்க விடயம். ஆனால் இரவு நேரத்தில் வைப்பது பொருத்தமற்றது.

எனவே மாணவர்களின் நலன் கருதி இரவு நேர வகுப்புக்கள் நடைபெறுவதை நிறுத்தி எமக்கு உதவுமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

பிரதேச செயலர் மற்றும் கல்வி அதிகாரிகளும் இவ்விடயத்தை கவனத்தில் கொண்டு இரவு நேர வகுப்புக்களை நிறுத்தி எமக்கு உதவ வேண்டும். இவ்வாறு பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 20-06-2013, 07:56.55 AM ]
13 வது திருத்தச் சட்டத்திலுள்ள அதிகாரங்களை குறைத்து 19 வது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை அரசுடன் இணைந்துள்ள தமிழர்கள் எவராலும் எதிர்க்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் மாத்திரமே இதற்கெதிராக குரலெழுப்ப முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


[ Thursday, 20-06-2013, 07:44.05 AM ]
கடந்த ஆண்டில் 1600 இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
[ Thursday, 20-06-2013, 07:18.25 AM ]
2009 ம் ஆண்டு ஈழத்தில் போர் முடிந்த பின்பும் தமிழர்கள் பலரும் இலங்கையில் இருந்து தப்பித்த வண்ணமே இருந்தனர். சிலர் நேரடியாக இலங்கையில் இருந்து இந்தோனேசியா சென்று அங்கிருந்து அவுஸ்திரேலியா சென்றனர். சிலர் தமிழ்நாட்டிற்கு தப்பி வந்து முகாமில் தங்கி இருந்தனர்.
[ Thursday, 20-06-2013, 07:12.40 AM ]
வவுனியாவில், பாடசாலைக்குச் சென்ற மாணவனைக் காணவில்லையென பெற்றோரால் பொலிஸ் நிலையம், மனித உரிமைக்குழு, சிறுவர் பாதுகாப்புக்குழு, பாடசாலை நிர்வாகம் என்பவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
[ Thursday, 20-06-2013, 06:39.49 AM ]
இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் மூத்த இராஜ தந்திரியுமான சிவ்சங்கர் மேனன் இந்திய அரசின் ஏற்பாட்டில் முக்கிய பயணமொன்றை மேற்கொண்டு ஜூலை 7ம் திகதி கொழும்பு வரவுள்ளார்.
[ Thursday, 20-06-2013 07:11:02 GMT ]
ஈராக்கில் நினேவே மாகாணம் அல்-ஹத்ர் என்ற இடத்தில் நடைபெற்ற தற்கொலை படை தாக்குதலில் அரசியல் கட்சி தலைவர் உள்பட 13 பேர் பரிதாபமாக பலியாகினர்.
[ Thursday, 20-06-2013 04:37:56 GMT ]
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து ரூ.60 ஐ எட்டி உள்ளது.
[ Thursday, 20-06-2013 07:53:04 GMT ]
சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இன்று நடக்கும் அரையிறுதியில் தீபகற்ப நாடான இந்தியா, தீவு நாடான இலங்கை மோதுகின்றன. இதில் இந்தியா வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[ Thursday, 20-06-2013 08:00:51 GMT ]
பூமியிலுள்ள இலக்குகளைத் தாக்கவரும் ராக்கட்டுக்களை புவி எல்லையிலிருந்து சுமார் 1.5 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் கொண்டு சென்று அழிக்கக்கூடிய அதி உயர் சக்திவாய்ந்த லேசர் கதிர் உருவாக்கப்பட்டுள்ளது.
[ Thursday, 20-06-2013 07:26:52 GMT ]
நகைச்சுவை நடிகர் வடிவேலு பேசி நடித்த கொமடி வசனங்களை இப்போதும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 20-06-2013 01:46:54 ]
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.