செய்தி
 Photo
சரத் பொன்சேகா மடுத் திருத்தலத்தில் விசேட வழிபாடு!
[ புதன்கிழமை, 13 யூன் 2012, 12:22.34 PM GMT ]
தனது விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் மடு திருத்தலத்தில் விசேட வழிபாட்டில் ஈடுபட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்..

நாட்டில் தொடர்ந்தும் அமைதியும், சமாதானமும் நிலவ வேண்டும் என்றும் மடு அன்னையிடம் வேண்டுதல் முன்வைத்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகா விடுதலையான பின்னர் இன்று முற்பகல் முதல்முறையாக மன்னார் மடுத் தேவாலயத்திற்கான விசேட விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது அவரது மனைவி அனோமா பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினர்கனான அர்ஜுண ரனதுங்க, ஜயந்த கெட்டகொட உட்பட 50 ற்கும் மேற்பட்டோர் அவருடன் வருகை தந்திருந்தனர்.

அநத குழுவினர் மடு திருத்தலத்தில் விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டு மடு அன்னையை தரிசித்து வேண்டுதல் நிறைவேற்றியதோடு இவர்களுக்காக இடம்பெற்ற சிறப்புத் திருப்பலியிலும் கலந்து கொண்டனர்.

இறுதியாக மடுத் திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எமிலியான்ஸ் பிள்ளையை சந்தித்து உரையாடியதோடு மடுத் திருத்தலத்திற்கு சரத் பொன்சேகாவினால் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 29-03-2015, 09:18.16 AM ]
சுற்றியிருந்த புழுக்களினால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்ற பாரிய மரம் விழுந்து விட்டதாக அமைச்சர டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
[ Sunday, 29-03-2015, 08:43.05 AM ]
நீர்கொழும்பு, பிட்டிபன பகுதியில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சை வழங்கும் நிகழ்வொன்றின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[ Sunday, 29-03-2015, 08:42.12 AM ]
மகிந்த ராஜபக்ச இல்லாத அரசியலும்,  நாடும் மணமகள் இல்லாத திருமண வீடு போன்றது என மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
[ Sunday, 29-03-2015, 08:41.35 AM ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றும் கட்சியாக மாறியுள்ளதாக அரசியல் விமர்சகரான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
[ Sunday, 29-03-2015, 08:25.52 AM ]
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தின் மாவடிவேம்பு பகுதியிலுள்ள கோயில் தீர்த்தக் குளத்திற்குள்ளிருந்து மனிதரையும், நாய்களையும் வேட்டையாடி வந்த பாரிய முதலையொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டது.
[ Sunday, 29-03-2015 08:31:24 GMT ]
வெட்டவெளியில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு தினந்தோறும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை துபாய் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
[ Sunday, 29-03-2015 06:28:43 GMT ]
தமிழகத்தில் திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்படும் தாலி அகற்றும் விழாவுக்கு கடும் கண்டனங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் கைப்பேசி மூலம் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
[ Sunday, 29-03-2015 05:56:41 GMT ]
உலகக்கிண்ண காலிறுதியில் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி நாடு திரும்பிய பின்னர், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
[ Sunday, 29-03-2015 08:07:40 GMT ]
இன்றைய தலைமுறையினர் எண்ணெய்யில் நன்றாக வறுத்த உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 29-03-2015 03:29:46 ]
முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா ஒருவழியாக கடந்த வாரம் பீல்ட் மார்ஷல் என்ற பதவி நிலையைப் பெற்றுக்கொண்டு விட்டார்.