செய்தி
போர்குற்றவாளி மகிந்த ராஜபக்சவை பிரித்தானியா வரவேற்குமா? - அனைத்துலக மக்களவை
[ திங்கட்கிழமை, 04 யூன் 2012, 09:53.39 AM GMT ]
மஹிந்த ராஜபக்‌ஷவை பிரித்தானியா மகாராணியின் வைரவிழாவில் கலந்துகொள்ள விடக்கூடாது அனைவரும் ஒன்றுகூடுங்கள் என அனைத்துலக மக்களவை அறிக்கை விடுத்துள்ளது. அவ் அறிக்கையில்...
உலகத்தின் முன் தமிழீழ விடுதலை போராட்டத்தை பயங்கரவாத முகமாக காட்டி, 21ஆம் நூற்றாண்டின் சரித்திரத்தில் மாபெரும் இனப்படுகொலையை செய்து விட்டு, இன்று வெற்றிவீரன் போல், காமன்வெல்த் நாடுகளின் அங்கத்துவநாடாகவும், பிரித்தானிய காலனித்துவ நாட்டின் இன்றைய அரச அதிபர் என்ற அடிப்படையில் மகிந்த ராஜபக்சேவுக்கு அழைப்பிதழ் விடப்பட்ட நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழின படுகொலையை நியாயப்படுத்தலாம்என்று சென்ற வருடம் ஓக்ஸ்போர்ட் நகரைவிட்டு விரட்டப்பட்ட மகிந்த இன்று பிரித்தானிய அரசின் விருந்தாளியாகபிரித்தானிய மகராணி எலிசபெத்தின் வைர விழாவில் பங்குபற்ற இங்கிலாந்து வருகிறார்.

20ஆம் நூற்றாண்டின் கடைசி பகுதியில் போஸ்னியாவில் ஐக்கியநாடுகள் சபையின் அமைதி பாதுகாப்பு படைநிற்கத்தக்கதாக செர்பியா ராணுவம் பல்லாயிரக்கணக்கான போஸ்னிய முஸ்லிம் மக்களை கொன்று குவித்தனர்,இன்று போஸ்னிய விடுதலை அடைந்துள்ள நிலையில் அந்த படுகொலைக்கு பின்ணனியில் நிற்றவர்கள் எல்லோரும்சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிற்கிறார்கள்.

ருவாண்டாவில் டுட்சி இனமக்கள் தமது விடுதலைக்கு போராடிக்கொண்டு இருந்த நிலையில், அங்கு பிரான்சுராணுவம் பார்த்து கொண்டு இருக்க ஹுட்டு இனமக்கள் டுட்சி இனமக்களின் மேல் அவிழ்த்து விட்ட இனவெறி பலலட்ச டுட்சி இனமக்களின் இன அழிப்புக்கு பின், இன்று ருவாண்டா நாட்டில் டுட்சி இனமக்கள் ஆட்சியில் இருக்கும்நிலையில், அங்கே நடந்த இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தேடி விசாரணை நடக்கிறது.

வன்னி மண்ணில் நிலைகொண்டு இருந்த சர்வதேச அரசுசார்பற்ற தொண்டு நிறுவனங்களை மற்றும் ஐக்கியநாடுகள்சபையின் செயற்பாட்டாளர்களை வெளியேற்றி விட்டு சாட்சியங்கள் அற்ற ஒரு இனப்படுகொலையை செய்து விட்டுவெற்றிவீரனாக இங்கிலாந்து வந்து தமிழின அழிப்பை நியாயப்படுத்த நினைக்கிறார்.

ஆனால், இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டு இருக்கும் போது அமெரிக்க ராணுவத்திற்கு தலைமை வைத்தஐசன்ஹோவேர் கோரியது, படங்களை எடுங்கள், ஒளிவடிவ படங்களை எடுங்கள் சாட்சியகளை ஆவணப்படுத்துங்கள், இல்லையேல் ஹிட்லர் தான் எந்த இன அழிப்பையும் செய்யவில்லை என்று கூறிவிடுவார் என்று கூறியிருந்தார்,அதைபோல் வன்னியில் நடந்த இடப்பெயர்வுகள், படுகொலைகள் எல்லாம் ஒலிவடிவமாகவும்,ஒளிப்படவடிவமாகவும், சர்வதேசத்திற்கு முன்னாள் இனப்படுகொலையின் சாட்சியங்களாக விட்டு சென்றுஇருக்கிறார்கள் எமது சகோதர சகோதரிகள்.

இந்த நிலையில் மகிந்தவை வரவேற்கும் பிரித்தானிய, எந்த நிலைபாட்டோடு மகிந்தாவிற்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறது?

மகிந்த தன்னை நியாயபடுத்த மேடையும் அமைத்து கொடுக்கிறது.

உலகத்தில் உள்ள அத்தனை மனித நேய அமைப்புகளும் சிறிலங்கா போர்க்குற்றம், மனித நேயத்திற்கு எதிரான குற்றம்செய்திருக்கிறது, அதற்குரிய சர்வதேச விசாரணை வேண்டும் என்று கூறி இருப்பதை நாம், அனைத்துலக மக்களவைவரவேற்கிறது, அதைத்தான் பிரித்தானிய அரசிடமும் எதிர் பார்க்கிறது, பல முறை பிரித்தானிய பிரதமர் இந்தஅடிப்படையில் பேசியும் இருக்கிறார்.

ஆகவே நாம் பிரித்தானிய அரசை மீண்டும் தமது அரசியில் நிலைப்பாட்டை சர்வதேச மனித நல சட்டத்திற்கு ஏற்பமாற்றும் படி கேட்டு கொள்கிறோம்.

அதே நேரத்தில் ஜூன் 6ம் திகதி ஐரோப்பாவில் வாழும் தமிழர்கள் அனைவரும் லண்டன் மாநகரத்தில் ஒன்று கூடிதாய் மண்ணில் வாழும் ஈழமக்களின் குரலாக மகிந்தவின் வரவை எதிர்த்தும், பிரித்தானிய அரசிடம் கமொன்வேழ்த்நாடுகளின் சபையில் இருந்து வெளியேற்றும் படியும், அடுத்த கமொன்வேழ்த் மகாநாட்டை சிறி லங்காவில் நடாத்தவேண்டாம் என்று உலகத்தமிழர்களின் குரலாக, குரல் கொடுப்போம், புறப்படுங்கள்.

தகவல் :
அனைத்துலக மக்களவை - செயலகம்

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 04:23.29 PM ]
படையினரை தொடர்ந்தும் நிலைநிறுத்துமாறு யாழ்ப்பாண மக்கள் கோருவதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 03:28.23 PM ]
அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 03:21.27 PM ]
விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தாய் தானே..! என்ற கேள்வியுடன் வரும் சிங்களம் பேசும் நபர்கள் யாழ்.வர்த்தகர்களிடம் கப்பம் பெறுவதாகவும், இது குறித்துப் பொலிஸில் பல தடவைகள் முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென யாழ்.வர்த்தகர்கள் குற்றம் சாட்டுக்கின்றனர்.
[ Wednesday, 19-06-2013, 02:17.10 PM ]
அவுஸ்திரேலியாவில் இயங்கும் விடுதலைப் புலிகளின்  ஆதரவு அமைப்புகளை தடைசெய்யுமாறு அந்நாட்டுப் பிரதமர் ஜுலியா கில்லார்ட்டிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 01:49.58 PM ]
கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தாய் தந்தையர்களை இழந்த சிறுவர்களின் எதிர்கால நலனிற்காக பன்னாட்டு மனித நேய நிறுவனம் ஒன்று ஐம்பது லட்சம் ரூபாய்களை வட மாகாண சபை ஊடாக கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்திற்கு வழங்கியிருந்தது. 
[ Wednesday, 19-06-2013 15:08:14 GMT ]
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று அங்குள்ள கிராமத்தினர் மீது தாக்குதல் நடத்தி ஆடுமாடுகளை கொள்ளையடித்து செல்வது வழக்கம்.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 08:00:12 GMT ]
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலை ஐ.சி.சி துபாயில் வெளியிட்டது.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 10:14:55 GMT ]
பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்பு நயன்தாராவின் மவுசு கூடிவிட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.