செய்தி
களுத்துறையில் பிரித்தானிய பிரஜை ஒருவர் சடலமாக மீட்பு!
[ திங்கட்கிழமை, 30 யூலை 2012, 03:51.29 PM GMT ]
களுத்துறை பிரதேசத்தில் உள்ள பல்பொருள் வர்த்தக நிலையக் கட்டடத் தொகுதியொன்றின் கழிவறையில் இருந்து வெளிநாட்டுப் பிரஜை ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் 50 வயதான பிரித்தானிய பிரஜை ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

அவர் நீண்ட காலமாக குறித்த பிரதேசத்தில் வசித்து வருபவர் என்பது தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட பிரித்தானிய பிரஜையின் உடலம் நாகொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும், பிரேதப் பரிசோதனை இன்று நடைபெறவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 05-09-2015, 03:25.09 AM ]
இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்தி வந்த வழக்கில் மலேசியத் தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
[ Saturday, 05-09-2015, 03:24.16 AM ]
இலங்கையில் இடம்பெற்ற முக்கியமாக குற்றங்களுக்கு ஐ.நாவில் பலமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
[ Saturday, 05-09-2015, 03:15.23 AM ]
நாடாளுமன்ற அமர்வுகளில் பிரசன்னமாகா உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
[ Saturday, 05-09-2015, 03:01.13 AM ]
முறைகேடான நடத்தையில் ஈடுபட்டிருந்த பதின்ம வயது இரட்டைச் சகோதரிகள் மற்றும் மூன்று வாலிபர்கள் நுகேகொடையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[ Saturday, 05-09-2015, 03:00.17 AM ]
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைக்கான அமைச்சர்கள் நேற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டதனைத் தொடர்ந்து, இராஜாங்க அமைச்சர்கள் 10 பேருக்கும் பிரதி அமைச்சர்கள் 38 பேருக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
[ Saturday, 05-09-2015 00:15:54 GMT ]
ரயிலில் செல்ல தங்களை அனுமதிக்காததால் ஆஸ்திரியாவுக்கு செல்வதற்காக 100 மைல் தூர நடைபயணத்தை அகதிகள் தொடங்கியுள்ளனர்.
[ Saturday, 05-09-2015 00:26:55 GMT ]
ஐ.நா.மன்றத்தின் சிறப்பு லட்சிய இலக்குகளை மக்களிடம் எடுத்துரைக்கும் பொருட்டு அதன் தூதுவர்களாக ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட 3 பேரை நியமித்துள்ளது.
[ Friday, 04-09-2015 13:57:08 GMT ]
இலங்கை அணிக்கு எதிரான ஒரு ஒருநாள் போட்டியில் அப்ரிடி 37 பந்துகளில் சதம் அடித்து உலகசாதனை படைத்தார்.
[ Friday, 04-09-2015 15:17:42 GMT ]
அன்றாட உணவுப்பழகத்தில் ஒன்றாக உள்ள பிரட்டை சாப்பிடுவதால் உடலுக்கு கெடுதல் ஏற்படுகின்றன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 04-09-2015 04:54:42 ] []
மொரட்டுவ பிரதான தபால் நிலைய மலசலகூட குழிக்குள் இருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமாக சாதாரண கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.