செய்தி
அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக அணி திரளும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
[ சனிக்கிழமை, 28 யூலை 2012, 05:54.40 AM GMT ]
அமைச்சர் ரிசாத் பதியுதீன் விவகாரத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பகிரங்கமாக இன்று ஒன்று கூடி முடிவெடுக்கவுள்ளதாக தெரிய வருகின்றது.

முன்னதாக மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணிகள் சிலரும் காலியைச் சேர்ந்த சட்டத்தரணிகளும் அமைச்சர் றிசாத் பதியுதீனிற்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

எனினும் இன்றைய தினம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஒன்று கூடி சங்கத்தின் சார்பில் வழக்குகளை நேரடியாக தாக்கல் செய்வது தொடர்பான இறுதி முடிவுகளை எடுக்கவுள்ளதாக தெரியவருகின்றது.

இதனிடையே நேற்றும்; மதிய வேளைத் தொழுகையின் பின்னர் கண்டன போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ரிசாத்தின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்திலும் நடத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் மொகைதீன் பள்ளி வாசலில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் முழு அளவினில் ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.

பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் திடீரென வீதி வழியாக ஊர்வலமாக பயணித்தனர்.

அதேவேளை கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட ரிசாத்தின் ஆதரவாளர்களது கண்டன பேரணிக்கென மன்னாரிலிருந்து 13 பேருந்துகளில் ஆட்கள் ஏற்றிச் செல்லப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 03-07-2015, 05:46.18 AM ]
கிளிநொச்சி - இலுப்பைக்கடவை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
[ Friday, 03-07-2015, 05:10.36 AM ]
எதிர்வரும் பொது தேர்தலின் போது இலஞ்ச ஊழல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு வேட்புரிமை வழங்காமல் இருப்பதற்கு ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய 08 உறுப்பினர்களுக்கு வேட்புரிமை இழக்க நேரிடம் என தகவல் வெளியாகியுள்ளது.
[ Friday, 03-07-2015, 04:47.13 AM ]
வெலிகம பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் குண்டர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதாகைகள் ஒட்டிக்கொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் இருவர் காயடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[ Friday, 03-07-2015, 04:40.04 AM ]
மலேசியாவுக்கு 124 ஆமைகளை கொண்டு செல்ல முயன்ற பயணி ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
[ Friday, 03-07-2015, 04:34.23 AM ]

தேர்தல் காலத்தில் பயன்படுத்தப்படும் குண்டு துளைக்காத வாகனத்துக்கான செலவை அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்கப்பட்டுள்ளார்.

[ Friday, 03-07-2015 06:05:40 GMT ]
நைஜீரியா நாட்டில் ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி சிறுவர்கள், பெண்கள் உள்பட சுமார் 150 நபர்களை போகோஹாரம் தீவிரவாதிகள் சுட்டு கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Friday, 03-07-2015 06:04:35 GMT ]
தமிழக முதல்வர் ஜெயலலிதா பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
[ Friday, 03-07-2015 06:06:35 GMT ]
இங்கிலாந்தில் காட்சி கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் மேக்ஸ்வெல் ஒரு அசத்தலான கேட்சை பிடித்தார்.
[ Thursday, 02-07-2015 16:15:00 GMT ]
ஆரோக்கியமான வாழ்விற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய மருத்துவக்குறிப்புகள் இதோ உங்களுக்காக,
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Thursday, 02-07-2015 09:27:03 ]
மைத்திரி அரசில் இலங்கையின் பாதுகாப்பும் பொருளாதாரமும் ஆபத்தில் உள்ளன.... விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் புத்துயிர் பெறுகிற அபாயம் இருக்கிறது' என்கிற மகிந்த ராஜபக்சவின் அலம்பல் புலம்பல்கள் நின்றபாடில்லை. தேர்தல் வரப்போவதால், மேற்படியாரின் புலம்பல்கள் உச்சஸ்தாயிக்குப் போகக்கூடும்.