செய்தி
(2ம் இணைப்பு)
Photo
மஹிந்த ராஜபக்சவை அழிக்கக்கூடிய கட்சிக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்: மட்டக்களப்பில் ரணில்
[ சனிக்கிழமை, 28 யூலை 2012, 01:15.49 PM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று மாலை மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார்.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இக் கலந்துரையாடல் ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளருமான அரசரட்ணம் சசிதரனின் இல்லத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது, தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிமுக்கப்படுத்தி வைக்கப்பட்டனர்.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொள்ளவுள்ள பிரசார நடவடிக்கைகள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கொழும்பு மாநகர சபை மேயர் எ.ஜே.எம்.முஸம்மில் மற்றும் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் றஹ்மான் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் மட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டாம் இணைப்பு:

மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்காமல், மஹிந்த ராஜபக்சவை அழிக்கக்கூடிய கட்சிக்கே நீங்கள் இப்போது வாக்களிக்க வேண்டும். இலங்கையில், தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கியர் என அனைத்து இனங்களும் உள்ள கட்சி என்பதுடன்,அனைவரையும் ஒன்றிணைத்துள்ள ஒரேயொரு கட்சி ஐக்கிய தேசியக் கட்சியாகும் என எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இது தேர்தாலை நடத்தவதற்கான சந்தர்ப்பம் அல்ல, அதனால் இந்தத் தேர்தலைப் பார்த்தால் எனக்கு வெறுப்பாக இருக்கிறது. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை வீழ்த்துவதற்கு மிகப்பெரிய சந்தர்ப்பம் மக்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. அனேகமான பணம் எனது ரோக்கியோ பயணங்கள் மூலம் கிடைத்திருக்கிறது.

கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டதன் பின்னர் கிடைத்த பணம் கிழக்கின் அபிவிருத்திக்காக கிடைத்தது. யுத்தத்தின் பின்னர் கிடைத்த பணத்தினை வீணாகப் பயன்படுத்துகிறார்கள்.

அதனால்தான் தற்போது இரண்டு பிரிவுகள் இருக்கிறார்கள். அந்தவகையில் இரண்டு குழுக்களை வேட்பாளர்களாக நியமித்திருக்கிறார்கள். தமிழ் வேட்பாளர்களை முதன்மைப்படுத்தி ஒன்று அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருக்கிறது.

முஸ்லிம் மக்களின் வாக்குகள் கிடைக்காது என்பது தெரிந்து சிறிலங்கா சுதந்திரக்கட்சியின், இரண்டாவது அணியாக முஸ்லிம் காங்கிரசு முஸ்லிம்களை நியமித்து உள்ளது.

நீங்கள் அரசாங்கத்திற்கோ, அல்லது முஸ்லிம்காங்கிரசுக்கோ அளிக்கும் வாக்குகள் எல்லாம் அங்கேயே போகும் என்பதே உறுதி. இரண்டுஅணிக்கு அளிக்கும் வாக்குகளும் அங்குதான் செல்லும். அதாவது வாக்குகளைப் பெற்றுவிட்டு ஆட்சியைந் நேர்ந்து அமைப்பது இதுதான். யாருக்கு வாக்களித்தாலும் மகிந்த காங்கிரசுக்குத்தான் போய்ச்சேரும்.

மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்காமல், அப்படி நடக்க வெண்டுமானால், மஹிந்த ராஜபக்சவை அழிக்கக்கூடிய கட்சிக்கே நீங்கள் இப்போது வாக்களிக்க வேண்டும். இலங்கையில், தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கியர் என அனைத்து இனங்களும் உள்ள கட்சி என்பதுடன்,அனைவரையும் ஒன்றிணைத்துள்ள ஒரேயொரு கட்சி ஐக்கிய தேசியக் கட்சியாகும். எங்களுக்கு இன பேதம் இல்லை.

பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் எல்லாம் சேர்ந்த கட்சிதான் ஐக்கிய தேசியக்கட்சி.

இந்தச் சந்தர்ப்பத்தினை முஸ்லிம் மக்கள் சரியாகப்பயன்படுத்த வேண்டும். அப்போதுதான். இந்த பிழையான சிந்தனையுள்ள கூட்டினை உடைக்க முடியும். கொழும்பில், அதிகமான சிங்கள பௌத்தர்கள் இருந்தாலும் அதனை ஐக்கிய தேசியக்கட்சி கைப்பற்ற முடிந்தது. அதனால் தான் முசம்மில் மேயராக இருக்கிறார்.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை தேர்தல் வேட்பாளருமான சசிதரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அவரது தலைமையுரையில், கடந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரசும் சேர்ந்து போட்டியிட்டிருந்தது.

அப்போது ஐக்கிய தேசியக் கட்சியையே மக்கள் தூக்கி எறிந்திருக்கிறார்கள். இப்போது நியமிக்கப்பட்டிருக்கம் 9 தமிழ் வேட்பாளர்களும், 5 முஸ்லிம் வேட்பாளர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த முறை போன்று யாரும் முஸ்லிம் காங்கிரசுடன் சேர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியினை அழித்துவிட்டார்கள் என்று யாரும் கூறமுடியாது. இந்த் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்து வெல்லச் செய்யுங்கள் என்றார்.

இப் பிரசாரக் கூட்டத்தில், கொழும்பு மேயர் முசம்மில், செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணா நாயக்க உள்ளிட்டோரும் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரகுமான , மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 04-07-2015, 06:43.53 AM ]
மகிந்தவுக்கு முடியுமானால், அவர் தான் ஜனவரி எட்டு அன்று பெற்ற 58 இலட்சம் வாக்குகளில் 25 இலட்சத்தையாவது பெற்று காட்டட்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
[ Saturday, 04-07-2015, 06:31.47 AM ]
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[ Saturday, 04-07-2015, 06:18.07 AM ]
இலங்கையின் முன்னாள் இன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்தவும் மைத்திரியும் தமக்கு வாக்களித்தவர்களை ஏமாற்றி விட்டதாக ஜே.வி.பி சாடியுள்ளது.
[ Saturday, 04-07-2015, 06:13.08 AM ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்பு மனு வழங்கும் தீர்மானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றுமொரு யூடேன் திருப்பத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
[ Saturday, 04-07-2015, 05:56.05 AM ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்பு மனு வழங்கல் தீர்மானத்தின் கீழ் வேறு திட்டங்களை ஜனாதிபதி மைத்திரிபால கொண்டிருக்கலாம் என்று ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
[ Friday, 03-07-2015 16:43:41 GMT ]
நேபாள நாட்டின் விவசாய பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட புகாரில் அந்நாட்டு வேளாண்மை மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஹர் பிரசாத் பரஜுலி பதவி விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Saturday, 04-07-2015 06:29:20 GMT ]
தஞ்சாவூரில் நபர் ஒருவர் வாங்கிய மது பாட்டிலில் ஆணுறை கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
[ Friday, 03-07-2015 08:40:24 GMT ]
இங்கிலாந்தில் நடக்கும் நாட்வெஸ்ட் டி20 போட்டியில் சங்கக்காரா விளையாடி வரும் சர்ரே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
[ Friday, 03-07-2015 15:51:35 GMT ]
மகத்துவ மூலிகையான வெற்றிலை பல்வேறு மருத்துவ பயன்களை வழங்குகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 03-07-2015 22:25:29 ]
நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் சிதைந்து சிதறப்போவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.