செய்தி
அணுஉலை அமைப்பது குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை: சம்பிக்க
[ சனிக்கிழமை, 28 யூலை 2012, 02:22.52 PM GMT ]
அணு உலை அமைப்பது குறித்து பாகிஸ்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் அணு உலையொன்று அமைக்கப்பட உள்ளதாகவும், அதற்கு பாகிஸ்தான் உதவிகளை வழங்க உள்ளதாகவும் இந்திய ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறான செய்திகளை வெளியிடுவதனால் பிராந்திய வலய நாடுகளுக்கு இடையில் தேவையற்ற மனக் கசப்பு ஏற்படும். எனினும், இந்த செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை. சில ஊடகங்கள் போலியான தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

பிழையான தகவல்களை வெளியிட்ட அனைத்து ஊடகங்களுக்கும் பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதனை பிரசுரம் செய்ய வேண்டியது ஊடகங்களின் கடமையாகும் என சம்பிக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 06-03-2015, 03:45.46 AM ]
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்வதாக முன்னாள் அமைச்சர் டியு.குணசேகர தெரிவித்துள்ளார்.
[ Friday, 06-03-2015, 03:40.52 AM ]
வெளிநாடுகளில் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ள உலக வங்கியின் விசேட குழு ஒன்று இலங்கை வந்துள்ளது.
[ Friday, 06-03-2015, 03:32.49 AM ]
இலங்கை தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது அதில் முன்னேற்றங்கள் இருக்கும் என்று தாம் நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது
[ Friday, 06-03-2015, 03:31.49 AM ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றம் வந்தால் அன்று சிலர் நடுங்கினார்கள் என பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
[ Friday, 06-03-2015, 02:12.20 AM ]
கிழக்கு மாகாண சபையினை வைத்துக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைக்கும் பணிகளை சிலர் மேற்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
[ Thursday, 05-03-2015 12:55:18 GMT ]
உலகின் முதல் மனிதர்களில் ஒருவனது உடல் பாகம் எத்தியோப்பியாவில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
[ Thursday, 05-03-2015 15:50:13 GMT ]
விடுதலைப்புலிகளுக்கு வெடிப்பொருட்கள் கடத்திய குற்றத்திற்காக இலங்கை அகதிகள் 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
[ Thursday, 05-03-2015 13:49:40 GMT ]
உலகக்கிண்ணத் தொடரில் பெர்த்தில் நடக்கும் நாளைய லீக் ஆட்டத்தில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.
[ Thursday, 05-03-2015 14:18:35 GMT ]
உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விடயம் அல்ல.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Thursday, 05-03-2015 08:31:25 ]
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்தினம் 3ந் திகதி வருகை தந்திருந்தார்.