செய்தி
கிழக்கு தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு, தமிழ் சிவில் சமூகம் விடுக்கும் வேண்டுகோள்!
[ சனிக்கிழமை, 28 யூலை 2012, 03:22.50 PM GMT ]

தமிழர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் அதன் கீழான மாகாண சபை முறைமையையும் தமது அரசியல் அபிலாiஷைகளைப் பூர்த்தி செய்யும் தன்மையற்றது என தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளனர்.

எமது தாயகத்தில் கடந்த காலத்தில் இரண்டு முறை (1989, 2008)  நடந்த மாகாண சபைத் தேர்தல்களை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் புறக்கணித்திருந்தன.

அரச சார்புத் தமிழ்க் கட்சியொன்றினால் சுயாதீனமாக நடத்த முடியாத மாகாண சபையை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சியொன்று சுயாதீனமாக நடாத்த முடியாது என்பதில் சந்தேகமிருக்க முடியாது.

ஆளுநரதும் மத்திய அரசாங்கத்தினதும் பிடியில் உள்ள மாகாண சபை முறைமையைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்பதை 1989 மற்றும் 2008 ல் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தம் வசம் வைத்திருந்த அப்போதைய முதலமைச்சர்கள் தெளிவாக அவ்வப்போது சொல்லியுள்ளனர்.

தேர்தல்களில் பங்குபற்றுவது என்பது ஓர் அரசியல் இலக்கை எய்துவதற்கான கருவியாக இருக்குமிடத்து அவற்றில் பங்குபற்றுவது சரியாக இருக்கும். மாறாக அவ்வாறாகப் பங்கெடுப்பதானது எடுத்துக் கொண்ட அரசியல் இலக்குகளுக்கு பாதகமாக இருக்குமிடத்து மாற்றுபாயங்களைப் பற்றிச் சிந்திப்பதும் எம்மீது திணிக்கப்படும் ஓர் தேர்தலை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பில் முன்யோசனையுடனும் தூர நோக்குடனும் செயற்படுவதும் இற்றைக்காலத்தில் தமிழ்த் தேசிய அரசியலின் முன்னகர்வுக்கு அத்தியாவசியமானது.

தமக்கெதிராக இழைக்கப்படும் அட்டூழியங்களிற்கெதிராகத் தமது எதிர்ப்பைக் காட்டுவதற்கு மக்கள் தேர்தல்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அங்கலாய்க்கின்றமை விளங்கிக் கொள்ளக் கூடியதே. அத்தகைய எதிர்ப்பை, கோபத்தை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தல் என்பது ஒரு பக்கமிருக்க தேர்தலில் பங்குபற்றுவதனால் ஏற்படக் கூடிய அரசியல் பாதகங்களையும் கவனிக்காமல் விட முடியாது.

இவ்விரண்டையும் சமாளித்துப் போகக் கூடிய வகையில், தேர்தலில் பங்குபற்றுவதற்கான மாற்றுபாயங்களைப் பற்றி நிதானமாகச் சிந்தித்து, ஓர் விடயத்தின் பல் பரிமாணங்களை விளங்கிக் கொண்டு முடிவெடுப்பது தமிழ்த் தேசிய அரசியலில் ஆத்மார்த்தமான அக்கறையுள்ள அனைவரினதும் தலையாய கடப்பாடாகும்.

வெறுமனே அரச சார்புத் தமிழ்க் கட்சியொன்றை கிழக்கு மாகாண வெளிக்குள் விடக் கூடாது என்ற உடனடி அரசியல் தந்திரோபயத்திற்காக தமிழ் மக்களின் விட்டுக் கொடுக்கப்படவோ விலை பேசவோ முடியாத அடிப்படையான அரசியல் நிலைப்பாடுகளில் தொய்வு ஏற்படுவதை தமிழ் மக்கள் அனுமதிக்க ஒரு போதும் முன்வரமாட்டார்கள்.

எது எவ்வாறாக இருப்பினும் தேர்தல்களில் நேரடியாகப் பங்குபற்றுவது என்ற முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளது என்ற கடினமான யதார்த்தத்தை கருத்தில் கொண்டு த.தே.கூ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முதன்மைப்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் சில பரிந்துரைகளைச் செய்ய விழைகின்றோம்.

தற்போதைய ஒற்றையாட்சி அரசியலமைப்பும் அதன் கீழான மாகாண சபை முறைமையும் நிராகரிக்கப்பட வேண்டும.; 13ஆவது திருத்தமானது அரசியல் தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகக் கூட ஏற்கப்பட முடியாதது.

வடக்குக் கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகமாகும். எந்தவொரு அரசியல் தீர்வும் இணைந்த வடக்குக் கிழக்கை ஓர் அலகாக அங்கீகரிப்பதாக அமைய வேண்டும். இவ்விடயம் தொடர்பில் குறிப்பாக முஸ்லிம் மக்களது நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வது முக்கியமானதாகும். தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து வேலை செய்தல் இவ்விரு சமூகத்தினதும் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இன்றியமையாததாகும்.

நீடித்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வொன்று தமிழர்களது தேசம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை அங்கீகரிப்பதனூடாகவே வரும். இவற்றை அங்கீகரிக்காத எந்தவொரு அரசியல் செயன்முறையும் பிரயோசனமற்றது.

ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நான்கு மாதங்கள் கடந்துள்ள நிலையில் தமிழருக்கெதிரான அநியாயங்களும் அடக்குமுறைகளும் பெருகியுள்ளனவே அன்றி குறையவில்லை.

தமிழரது நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுதல்,
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாகத் தடுப்பில் வைக்கப்பட்டிருத்தல்,
காணாமற் போனோர் தொடர்பில் தொடர்ச்சியாக எவ்வித முன்னேற்றமும் இல்லாதிருத்தல்,
தமிழ்த் தேசியத்தின் பொருளாதார, கலாசார அடிப்படைகள் சீரழிக்கப்படுதல்,
அன்றாட வாழ்க்கையில் இராணுவத்தினரின் தலையீடுகள் அதிகரித்தல்,
கல்வி, உயர் கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி ஆகிய அனைத்துத் துறைகளினது தனித்துவங்களை சீரழிக்கும் வகையில் அரசியல்வாதிகளின் தலையீடு அதிகரித்தல்,
உயர் பாதுகாப்பு வலயங்கள் நிரந்தரமாக்கப்படல் (சம்பூர் உயர் பாதுகாப்பு வலயம் உட்பட),
இடம்பெயர்ந்த மக்களில் குறிப்பிடத்தக்க தொகையினர் தொடர்ச்சியாக முகாம் வாழ்வில் இன்றும் அல்லற்படல்,
மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் புறக்கணிக்கப்படல்

போன்றன தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அனுபவிக்கும் இன்னல்களுக்கு உதாரணங்கள்.

மேலும் தமிழருக்கெதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழரது பிரச்சனைகளிற்குத் தீர்வு காண முடியாது என்பதைச் சர்வதேச சமூகம் உணர வேண்டும்.

அவ்வறிக்கையும் அதனை அமுல்படுத்துவதற்கான திட்டமும் சர்வதேசத்தை ஏமாற்றும், நேரத்தை வாங்கும் முயற்சியே. மேலும் அவ்வாறாகக் கிடைக்கும் நேர இடைவெளிக்குள் தமிழர்களது இருப்பை முற்றாக இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் திட்டமிடுகின்றது என்பதனைச் சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

மேற்படி விடயங்களை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தல்களில் பங்குபற்றுவதனூடாகத் தமிழர்கள் பிரிந்த வடக்குக் கிழக்கை அங்கீகரித்து விட்டனர், மாகாண சபை முறைமையை ஏற்றுக் கொண்டு விட்டனர் என்ற வாதத்தின் செறிவை ஒரளவேனும் குறைக்கலாம் என எண்ணுகின்றோம்.

மாகாண சபை முறைமையையும் பிரிந்த வடக்குக் கிழக்கையும் நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை சர்வதேச சமூகத்திற்கு உணர்த்தல் இன்றியமையாததாகும்.

அதி வணக்கத்துக்குரிய கலாநிதி. இராயப்பு ஜோசப், மன்னார் கத்தோலிக்கப் பேராயர்.

செல்வி சாந்தா அபிமன்னசிங்கம், ஜனாதிபதி சட்டத்தரணி, யாழ்ப்பாணம்.

பேராசிரியர். க. கந்தசாமி, விஞ்ஞான பீடாதிபதி, யாழ். பல்கலைக்கழகம்.

பேராசிரியர். இ. விக்கினேஸ்வரன், கணித, புள்ளிவிபரவியற்றுறைப் பேராசிரியர், உப தலைவர், அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்.

திரு. வி. கமலதாஸ் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு

திரு. எஸ். அரசரட்ணம், முன்னாள் வங்கியாளர், அம்பாறைத் தமிழர் மகா சபை

பேராசிரியர். சி.க. சிற்றம்பலம், ஓய்வுநிலைத் தகைசால் வரலாற்றுப் பேராசிரியர்,  தலைவர், இந்து சமயப் பேரவை

பேராசிரியர். இ. குமாரவடிவேல், சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர், முன்னாள் பதில் துணைவேந்தர், யாழ் பல்கலைக்கழகம்.

பேராசிரியர். வி.பி. சிவநாதன், பீடாதிபதி, கலைப்பீடம், யாழ் பல்கலைக்கழகம்.

பேராசிரியர். ஆ. ச. சூசை,  புவியியற்றுறை, யாழ் பல்கலைக்கழகம்

திரு. து. இராமகிருஷ்ணன், செயலாளர், அம்பாறை மாவட்ட தழிழர் சங்கம், கல்முனைக் கிளை

திரு. பொன். செல்வநாயகம், ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர், பாண்டிருப்பு

திரு. க. சூரியகுமரன், யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனப் பிரதிநிதி, வடமராட்சி வடக்கு க. தொ. கூ. சங்க சமாசப் பிரதிநிதி

திரு. தி. இராஜன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு

திரு. த. கலையரசன், தவிசாளர், பிரதேச சபை, நாவிதன்வெளி

திரு. அ. கணேசமூர்த்தி, ஓய்வு நிலை சுகாதாரக் கல்வி உத்தியோகஸ்தர், நற்பிட்டிமுனை

வணபிதா. கி. ஜெயக்குமார், பங்குத் தந்தை, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்

திரு. த. குருகுலராஜா, ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர், கிளிநொச்சி

திரு. சி. கந்தசாமி, சிரேஷ்ட சட்டத்தரணி, பருத்தித்துறை

வைத்திய கலாநிதி. (திருமதி). சி. உதயகுமார், பொது வைத்திய நிபுணர், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

வைத்திய கலாநிதி. சி. சிவன்சுதன், பொது வைத்திய நிபுணர், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

திரு. அ. பஞ்சலிங்கம், ஓய்வு பெற்ற அதிபர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி

திரு. சிவசுப்பிரமணியம், நிர்வாகப் பிரதிநிதி, வட மாகாண கடற்றொழிலாளர் கூட்டமைப்பு

வைத்திய கலாநிதி. ப. சத்தியலிங்கம், வைத்திய அதிகாரி, வவுனியா

வைத்திய கலாநிதி. சி. குமாரவேள், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

வணபிதா. எஸ். ஜெயபாலன் குரூஸ் பங்குத் தந்தை, வங்காலை, மன்னார்.

திரு. தி. இராசரத்தினம், ஓய்வு பெற்ற பிரதம லிகிதர், நற்பிட்டிமுனை

திரு. அ. இராசகுமாரன், விரிவுரையாளர், ஆங்கில மொழிப் போதனை நிலையம், தலைவர், யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்.

திரு. நா. இன்பநாயகம், தலைவர், கிராமிய உழைப்பாளர் சங்கம் யாழ் இணைப்பாளர், தேசிய மீனவர் இயக்கம்

திரு. கா. சந்திரலிங்கம், ஓய்வு பெற்ற அதிபர், அம்பாறைத் தமிழர் மகா சபை

திரு. வே. அரசரட்ணம், முன்னாள் கூட்டுறவு உதவி ஆணையாளர், அம்பாறைத் தமிழர் மகா சபை

திரு. க. ரூபன், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் தன்னார்வலர்கள் அமைப்பு

திரு. பா. சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் தன்னார்வலர்கள் அமைப்பு

வைத்திய கலாநிதி சு. ரவிராஜ், சத்திரசிகிச்சை நிபுணர், சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம்

வைத்திய கலாநிதி. செ. கண்ணதாசன், சிரேஷ்ட விரிவுரையாளர், மருத்துவ பீடம், யாழ் பல்கலைக்கழகம்

திரு. வி. புவிதரன், சிரேஷ்ட சட்டத்தரணி, கொழும்பு.

திரு. கோ. ரஜீவன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு

திரு. ப. நிஷாந்தன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு

கலாநிதி. து. குணராஜசிங்கம், சிரேஷ்ட விரிவுரையாளர், உடற்றொழியல் துறை, மருத்துவ பீடம், யாழ் பல்கலைக்கழகம்

வைத்திய கலாநிதி. சு. பிரேமகிருஷ்ணா, உணர்வழியியல் வைத்திய நிபுணர், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

திரு. எஸ். ஜீவநாயகம், தலைவர், கரைச்சி கிராமிய அபிவிருத்தி சங்கங்களின் சமாசம், கிளிநொச்சி

வைத்திய கலாநிதி. பூ. லக்ஷ்மன், இருதய நோய் சிகிச்சை நிபுணர், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

திரு. சி. சுந்தரேஸ்வரன், சிரேஷ்ட வங்கியாளர், யாழ்ப்பாணம்.

வணபிதா. இ. இரவிச்சந்திரன், இயக்குநர், யாழ் மறைமாவட்ட இளைஞர் ஆணைக்குழு, யாழ்ப்பாணம்

திரு. வி. சிறிதரன்,  சிரேஷ்ட விரிவுரையாளர், கணக்கியற்றுறை, யாழ் பல்கலைக்கழகம்

கலாநிதி. பா. நிமலதாசன், சிரேஷ்ட விரிவுரையாளர், கணக்கியற்றுறை, யாழ் பல்கலைக்கழகம்

திரு. ஆ. சரவணபவன், விரிவுரையாளர், மனித வளத் துறை, யாழ் பல்கலைக்கழகம்

வைத்திய கலாநிதி. ச. சுதாகரன், உள வள மருத்துவப் பிரிவு, பொது வைத்தியசாலை, வவுனியா

திரு. எஸ். ஜனார்த்தனன், யாழ் பொருளியலாளர்கள் சங்கம்

திரு. தி. விக்கினேஸ்வரன், விரிவுரையாளர், அரசறிவியற்றுறை, யாழ் பல்கலைக்கழகம்.

திரு. சு. திருச்செந்தூரன், விரிவுரையாளர், அரசறிவியற்றுறை, யாழ் பல்கலைக்கழகம்.

திரு. செ. ரவீந்திரன், விரிவுரையாளர், புவியியற்றுறை, யாழ் பல்கலைக்கழகம்.

திரு. எஸ். பீஷ்மன், யாழ் பொருளியலாளர்கள் சங்கம்

வைத்திய கலாநிதி. இ. சிவசங்கர், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், யாழ்ப்பாணம்

திரு. ஊ. P. சத்தியசீலன் சமூக செயற்பாட்டாளர், வவுனியா

திரு. எஸ். ஜெயச்சந்திரன், முகாமையாளர், ஆசிரிய வாண்மை விருத்தி நிலையம், வவுனியா

திரு. ம. கபில்நாத், மனித உரிமைச் செயற்பாட்டாளர், வவுனியா.

திரு. சி. அ. ஜோதிலிங்கம், சட்டத்தரணி, அரசியல் ஆய்வாளர், பாடசாலை ஆசிரியர்

திரு. பி. நி. தம்பு, சிரேஷ்ட சட்டத்தரணி, கொழும்பு.

திரு. கு. குருபரன், விரிவுரையாளர், சட்டத்துறை, யாழ் பல்கலைக்கழகம், சட்டத்தரணி

வைத்திய கலாநிதி. கே. இளங்கோஞானியர், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

வைத்திய கலாநிதி. க. சுரேஷ்குமார், பெண்ணியல் மற்றும் மகப்பேற்று சிகிச்சை நிபுணர், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

வைத்திய கலாநிதி. ப. நந்தகுமார், சுகாதார வைத்திய அதிகாரி, தெல்லிப்பளை

வைத்திய கலாநிதி. சு. மோகனகுமார், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

திரு. ஜே. தோ. சிம்சன், ஆசிரியர், மன்னார்.

வைத்திய கலாநிதி. ஏ. கமலநாதன், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

திரு. மயில்வாகனம் கிரேஷியன், சட்டத்தரணி, கிளிநொச்சி.

திரு. பொ. கிருஷாந்தன் சட்டத்தரணி, திருகோணமலை.

திரு. எஸ். இருதயநாயகம், சூசையப்பர் கடற்றொழிலாளர் சங்கம், மாதகல்

அருட்திரு ஜெரால்ட் ரொசய்ரோ (ழுஆஐ) கொழும்பு

வைத்திய கலாநிதி. ச. பகீரதன், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

வைத்திய கலாநிதி. ஞா. ஹைரின் ஆர்க், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

திரு. சு. அரிகரன், முன்னாள் தலைவர், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழ் பல்கலைக்கழகம்.

திரு. வே. பவாநந்தன், தலைவர், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழ் பல்கலைக்கழகம்.

திரு. ப. தர்ஷானந்த், செயலாளர், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழ் பல்கலைக்கழகம்.

திரு. க. ஜெனமஜெயமேனன் தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றியம், யாழ் பல்கலைக்கழகம்.

திரு. ப. சபேஸ்குமார், தலைவர், வணிக பீட மாணவர் ஒன்றியம், யாழ் பல்கலைக்கழகம்.

திரு. ஏ. பிரசன்னா, தலைவர், விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியம், யாழ் பல்கலைக்கழகம்.

திரு. சஞ்சீவன், தலைவர், விவசாய பீட மாணவர் ஒன்றியம், யாழ் பல்கலைக்கழகம்.

திரு. செ. ஜனகன், தலைவர், மருத்துவ பீட மாணவர் ஒன்றியம், யாழ் பல்கலைக்கழகம்.

திரு. சேவியர் வில்பிரட் ஜெயரூபன், நில அளவையாளர், யாழ்ப்பாணம்

வைத்திய கலாநிதி. கு. பிரதீபன், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்

திரு. திருவேணி சங்கமம், ஓய்வு பெற்ற மாகாண சபை உத்தியோகஸ்தர், காரைதீவு, அம்பாறை

திரு. அ. றொ. மதியழகு, தலைவர், மாதகல் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்

திருமதி. ஜொஸ்மின் ஜெயராணி, செயலாளர், மாதகல் மேற்கு மகளிர் அபிவிருத்திச் சங்கம்

வைத்திய கலாநிதி. எஸ். சிவதாசன், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

வைத்திய கலாநிதி. அ. யோ. தனேந்திரன், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

வணபிதா. எஸ். எம். பி. ஆனந்தகுமார், செயலாளர், யாழ் மறைமாவட்ட குருக்கள்மார் ஒன்றியம்.

வைத்திய கலாநிதி. ம. வாசுதேவன், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

வைத்திய கலாநிதி. செ. குணதீசன், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்

திரு. அ. சிற்றம்பலம், தலைவர், மாதகல் விவசாய சம்மேளனம்

திரு. செ. கிறிஸ்துராசா, தலைவர், தூய லூர்துமேரி கடற்றொழிலாளர் சங்கம்

திரு. ஆர். ஜோன்பிள்ளை, நானாட்டான்

வணபிதா. அகஸ்ரின் புஸ்பராஜ், பங்குத் தந்தை, நானாட்டான், மன்னார்

வணபிதா. எல். ஞானாதிக்கம், பங்குத் தந்தை, வஞ்சியன்குளம்

திரு. க. சுகாஷ்,  சட்டத்தரணி, யாழ்ப்பாணம்.

திரு. தி. அர்ச்சுனா சட்டத்தரணி, யாழ்ப்பாணம்.

திரு. அ. சந்தியாப்பிள்ளை, யாழ் மறைமாவட்ட கத்தோலிக்கப் பொதுநிலையினர் கழகம்

(மேலே கையெழுத்திட்டோர் தமது தனிப்பட்ட நிலைப்பாட்டிலிருந்து கையெழுத்திட்டனரன்றி அவர்களது உத்தியோகபூர்வ நிலையிலிருந்து அன்று)

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 02-03-2015, 04:25.17 AM ]
இனப்பிரச்சினைக்கு தீர்வுகண்டு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இதயசுத்தியோடு முயற்சிக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
[ Monday, 02-03-2015, 04:22.21 AM ]
ஹங்வெல்ல அம்புல்கம பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் மூன்று நாட்களின் பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
[ Monday, 02-03-2015, 04:06.30 AM ]
வைத்தியர் சமிதா சமன்மலிக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான போதியளவு பணம் இல்லையென பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பணிப்பாளர் நாயகம் மல்லிக்கா கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
[ Monday, 02-03-2015, 03:53.57 AM ]
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் செனவிரட்னவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம், நிச்சயம்  விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
[ Monday, 02-03-2015, 03:52.35 AM ]
தேர்தல் ஒழுக்க விதியொன்றை சட்டமாக்க வேண்டுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
[ Monday, 02-03-2015 01:55:23 GMT ]
பலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பை தீவிரவாதக் குழுவாக எகிப்து நீதிமன்றம் அறிவித்துள்ளதாக அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
[ Sunday, 01-03-2015 14:31:15 GMT ]
சேலம் மாவட்டத்தில் திருமணம் செய்ய முடியாமல் தவித்த தம்பி ஒருவர், தனது அண்ணனை கொலை செய்துள்ளார்.
[ Sunday, 01-03-2015 13:42:00 GMT ]
கால்பந்து மைதானங்களில் கறுப்பின வீரர்களை அவமானப்படுத்தும் விதமாக அவர்களை நோக்கி வாழைப்பழங்களை வீசும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
[ Sunday, 01-03-2015 12:32:48 GMT ]
வாழைப்பூவை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு ஆரோக்கிய வாழ்வு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 01-03-2015 06:02:30 ]
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் ஆட்சி மாற்றம் ஏற்படாமல் போயிருந்தால், இந்த மாதம், இலங்கை அரசாங்கத்துக்கு மிகப்பெரிய சோதனைக் களமாகவே அமைந்திருக்கும்.